முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தொழிலாளர் தினம்

வறுமை ஒழிக்கப்பட்டதா? வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டதா? இந்தியாவிலுள்ள சட்டங்கள் அனைத்தும் மக்களின் கண்களை மறைக்க இயற்றப்படுகின்றதே தவிர, அவர்களின் துயர் துடைக்க இயற்றப்படுவதாக இல்லையென்பது இந்திய அரசியலமைப்பு சட்டங்களில் எழுதப்படாத/இயற்றப்படா உவமை. பண்டைய காலம் தொட்டு இன்றளவும் வறுமை, பொருளாதார வளர்ச்சியின்னமை காரணங்களினால் சிறுபிஞ்சு மடல்களை பணியில் அமர்த்துவதை களைய 1986ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் குழந்தை தொழிலாளர்கள் தடுப்புச்சட்டம். 2006 மற்றும் 2008ல் இச்சட்டம் திருத்தி எழுதப்பட்டது. இந்தியாவிலுள்ள மொத்த மக்கள்தொகையில் ஒவ்வொரு 11வது(CRY 2011 அறிக்கைப்படி) குழந்தையும் வேலை செய்கிறது. 80% குழந்தைகள் ஊரகப் பகுதியில் வேலை செய்கின்றனர்(CRY 2011 அறிக்கைப்படி).பள்ளி செல்லாத ஒவ்வொரு குழந்தையும் குழந்தை தொழிலாளர் என வரையறை செய்து வாதிடுகிறது ஓர் சில அமைப்புகள். கிராமப்புறங்களில் போதிய ஆசிரியர் மற்றும் பள்ளிகளின் கட்டமைப்பு இல்லையென்பதே காரணம்யென யுனிசெப் கூறுகிறது. கல்வியறிவை மேம்படுத்தும் பொருட்டு அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளும் திறமையற்ற அரசு ஊழியர்களினால் தோல்வியைத் தழுவின...

நாவல் - வெண்பா - பகுதி - 3. பயண உரையாடல்

வெண்பா  3. பயண உரையாடல் மூன்றாவது பகுதியான "பயண உரையாடலை" வாசிக்கும் முன், இரண்டாவது பகுதியான "இரயில் பயணங்களில்" பகுதியை வாசிக்கும்படி வேண்டுகிறேன். அதன்பின் உங்களுக்கு என் கதையின் போக்கு புரியும். மேகமூட்டம் கரிய நிறச் சிறகுகளை விரித்து மறையத் துவங்கிய நேரமது. காற்றாலைகள் தன் பங்களிப்பிற்கு புயல்போலே வீசிக்கொண்டு இருந்தது. கூடவே மழைக்காற்றின் வாசமும் பரவி மணம் கமழும் மண்வாசனை காற்றில் கலந்து என் இதயத்தை ஈரமாக்கி கொண்டிருந்தது. இரயில் வண்டியும் "கூ குச்சு குச்சு " என தாளமிட்டு பெங்களூர் நகரின் ஊடே சென்று கொண்டு இருந்தது. மக்களும் பரபரப்பாகவே சென்று கொண்டிருந்தனர். நகரம் என்றாலே நரக வேதனையை அனுபவித்து தானே ஆகவேண்டும், அதுவும் மழை மேகத்துடன் இருந்தால். இந்த நிகழ்வுகளினால் பெங்களூரு நகரமே அழகாகவும் பரபரப்புடன் காணப்பட்ட வேளையில் நமது பெங்களூரு எக்ஸ்பிரஸ்  பையப்பனஹள்ளி ஸ்டேஷன்யை மிதமான வேகத்துடன் நெருங்கி கொண்டிருந்தது. சிலநேரங்களில் கிராஸ்ஸிங் காரணமாக ரயில் பையப்பனஹள்ளியில் சிறிது நேரம் நிறுத்தப்படுவது உண்டு. ரயில் நிறுத்தப்படுவதை இருவரும்...

நி(நீ)தானம்

நி(நீ)தானம் இரவு நேரமது. எப்போதும் அவன் காலதாமதமாக அலுவலகப் பணியை முடித்து வருபவன். அவள் எப்போதும் அவனுடைய வருகையை எண்ணி ஆவலுடன் அவனுக்கு பிடித்த ஒன்றை உணவு சமைத்து காத்திருப்பது வழக்கம். அவனோ வீட்டிற்குள் வந்தவுடன் ரெஃரஷ் செய்து கொள்வான். இடைபட்ட நேரத்தில் அவளும் சமைத்த உணவுகளை எடுத்து வைத்து காத்திருப்பாள். அன்பான ஒருவருக்கு, நம் ஆனந்த்திற்கு என ஒளிவீசும் நிலவாக இருக்கும் ஒருவருக்கு, காத்திருத்தல் என்பது எவ்வளவு மகிழ்ச்சி என்பது கல்யாணம் காதல் பன்றவரிடம் கேட்டால் தெரியும். நானோ மொட்டப்பயன். அன்றைக்கு அவன் ரெஃரஷ் செய்து உணவு அறிந்தச்செல்ல அங்கு அவளில்லை. அந்த இடமே மௌனம் தவழும் சோலையாக இருக்க. அவன் அவளை தேடிச்சென்று அவளைத் தன் மார்பின் மேல் அணைத்து, தன் வலது கரத்தால் அவள் தலைமுடியைக் கோதி அவளின் மூக்கின்மேல் முத்தமிட. இந்த முத்தங்கள் எல்லாம் தினந்தோறும் அவன் அவளுக்கு கொடுக்கும் சீர்வரிசை. அவளோ நடுக்கத்துடன் காணப்பட்டால். அவனோ அதுயேதும் உணராமல் அவளிடம் வினவ ஆரம்பித்தான். என்ன ஆச்சு என் வெண்நிலவுக்கு, ஏன் இன்னைக்கு இரவு சாப்பிட ஏதும் செய்யவில்லை என்றான். அவள் தன்மனதில் மலர்...

அபத்தம்

அபத்தம்! சுடாத பனித்துளிக்கு சுடும் எண்ணத்தைக் கொடுக்கும், உன் கண்ணத்தின் குழிகளையும், கவிபாடும் இதழ்களையும் நான் என்னென்று சொல்வேன் எனதருமை அள்ளி மலரே..! மோகமும் காமமும் விஷத்தைவிட கொடியதென நான் உணரவில்லையோ..!

தடுமாறும் ஊஞ்சல்

தடுமாறும் ஊஞ்சல் யாருக்காக அழுதேன் எதற்காக அழுகிறேன், ஏது நினைந்து என் விளி சிவந்தன, எது என் வாழ்க்கையின் பயணம், ஏன் இந்த சுயநல உலகில் அவதரித்தேன், ஏன் உலகம் சுருங்கி சுழல்கிறது, ஏன் நாடகமாடும் மனிதர்களின் பிடியில் இல்லாமல் இருக்கிறேன், எது என் வாழ்க்கையில் வளம் தருபவை, நான் செல்லும் வழிகள் யாவும் ஏன் இருள் சூழ்ந்து இருக்கின்றன, தன்னம்பிக்கை எனும் கடலில் நீந்தும் எனக்கு ஏன் இந்த தடுமாற்றம், வானம் போன்ற என் வெண்மனதில் ஏன் சிறுமை, நாளும் நலம்வாழ ஏங்கி இன்வாழ்வு தொலைத்தேனோ, செருக்கினால் இதயத்தில் எழுந்த நெருப்பை அனைத்து எழுந்து ஓடினான் அந்தச் சிறுவன்? எங்கே..? எங்கே..? எங்கே..? பள்ளிக்கு...!! தங்கை அனிதாவிற்கும், தம்பி கெவினுக்கும் அர்பணிக்கிறேன்.

செங்காந்தள் மலர்

செங்காந்தள் மலர்  அழகு நிழலாய் தொடர்ந்தாயடி மழலை மொழியும் பொழிந்தாயடி. நினைக் கண்டு நாழி நோக்கவே செங்கதிரும் மேற்குச் சாய்ந்தனவே. நின் நகையொலியின் மனவலியால் சமுத்திரராஜன் சீறிப்பாயவே. சிந்தனை இழந்து உனது பார்வையில் சிலை சிலையானனே. சுற்றம் மறந்து உன் முகமதியால் என்மதி மறந்தேனே. வளியால் அசையும் உன் கூந்தலும் என்காதில் சல்லாபிக்குதே. நின் காற்சிலம்புகள் கவிபாடவே என் கால்களும் தாண்டவமாடுதே. நின்னைச் சரணடைய நான் ஏங்கவே. நீமட்டும் எனைப் பிரிந்து எங்கே சென்றாயடி. என் கண்மணியே கவிமணியே..!

கண்ணீரில்

கண்ணீரில் அரசியலும் ஒரு பாடம் தான் என்பதை நாம் உணர வேண்டிய தருணம் இது. தனி மனிதனின் சுதந்திரத்தைப் பரித்து ஓர் நாடகம் நம்மைச் சுற்றீ. வீழ்ந்து எழுவாய் என என்னாதே, வீறுகொண்டு வெற்றி நடை போடு. கனவுகள் நாம் கடந்த பாதையில் தான் வெற்றியடையும், திடீரென புயல் வெற்றியை தடுத்தால் கனவுகள் தளர்ந்து போகுமே. பிடித்ததைச் செய்து வெற்றியோ தோல்வியோ அதை அனுபவித்து வாழ் இல்லை வீழ். பூவிதழாக, தமிழினியன்

இந்தியஅரசு - சுமை

இந்தியஅரசு - சுமை   மத்திய/மாநில அரசினால் ஓவ்வொரு மாநிலத்தில் வாழும் மக்களின் முதுகினில் ஏதாவதொரு வழிகளில் துன்பம் சுமையேற்றப்படும்/படுகிறது. அப்படி ஏற்றப்படவில்லையேல் அது அரசியல் இல்லை. அவர்கள் ஞாபகம் இராது நம்மிடத்தினில். ஏற்றப்படும் துன்பத்திற்கு காரணம் தேடி அலைகிறிர், தன்னுல் தான் உள்ளது என்பதை மறந்து.  அரசியல் லாபம் அரசியவாதிக்கே. லஞ்சம் என்ற வார்த்தையே இன்னும் சில வருடங்களில் மறந்து பரிசு எனப் பொருள் தரும்படி மாற்றி எழுதப்பட்டாலும் ஆச்சரியத்திற்கில்லை. பணம் தேடியோடும் ஒவ்வொருவரின் வாழ்வின் பாதையிலும், மறைபட்ட பாதாளம் உள்ளது. சிந்திப்பீர், சிறைபட்ட நாட்களையும் சிதைபட்ட கனவுகளைத் தேடியோடு. பூவிதழாக, தமிழினியன்

நடுத்தர வர்க்கம்

நடுத்தர வர்க்கம் நடுத்தர வர்க்கம் தான் நாளும் வருந்துகிறது இந்த நாட்டின் அவலங்களை எண்ணி. மாநில & மத்திய அரசின் ஊழியர்கள் சேர்த்து வைக்கும் கருப்பு பணத்திற்காக, அடித்தட்டு மக்களின் உணவை பறிப்பது எவ்விதமோ. நாடும், நாமும் முன்னேறவில்லை. அப்புறம் எப்படி முன்னேற்றம் முன்னேற்றம்னு கூவுறாங்க தெரியலயே. 5க்கும் 500 ரூபாய்க்கும் கண் மூடி ஓட்டு போட்டா. மக்களின் நிலைமையை விட விட்டத புடிக்க தான் அரசாங்கம் அலையும். கடைசில கூட்டம் அலை மோதுமிடம் ரயில்வே ஸ்டேஷன். பூவிதழாக, தமிழினியன்

முள்மேல் பனித்துளி

முள்மேல் பனித்துளி  உயிர் பிறப்பின் அடையாளம் உலக சிறப்பின் சிற்பம் அவள், பவனி வரும் தேர் பார் புகழ்பட வேண்டிய ஒளி அவள், இன்பத்தின் பெருமை இதழ் விரித்த தாமரை அவள், கலையாத மேகம் கண் சிமிட்டும் பொம்மை அவள், சிறைப்பட்ட பூனை கனவு தொலைத்த காவியம் அவள், சினம் இல்லா சிங்கம் சிலரின் இச்சைகளால் சிதைபடுவது ஏனோ, சுதந்திரம் இல்ல சூழலில் வாழும் அவளுக்கு, உரிமையும் உணர்வுகளும் இழந்த அவளுக்கு, காலம் மாறிப்போகும் வேளையில் மேகங்கள் கூட விடியலை நோக்கி நகர்கிறது, அவள் மட்டும் கருவறைக்குள் வாழும் ஒளியொலி இல்லா  ஊமையாகிறாள்.

இளம்பிஞ்சு ஆசிபாவிற்க்கு

இளம்பிஞ்சு ஆசிபாவிற்க்கு   அழிந்துவிட்ட மிருக இனத்தில் மனிதர்கள் தோன்றினார்களா,  இல்லை அழிந்த மனித இனத்தில் மிருகங்கள் தோன்றியதா.  நடப்பது பார்க்க மிருகம்/மனிதன் விதியாசம் தெரியவில்லை.  மனிதம் மறைந்து மோகம் தலையெடுத்துவிட்டதோ..!

புத்தகம் - ரீடிங்

புத்தகம் - ரீடிங் தனிமையில் இனிமையும், இனிமையில் சிந்தனையும் ஊட்டி, உன் வாழ்வில் உன் இதயத்தில் புதைந்து கிடக்கும் உயிரில்லா உணர்வுகளை வெளிக்கொணர்ந்து ஒளி வீசுவது.

உந்துதல்

உந்துதல்   ஒரு செயலின் அடையாளம் ஏதாவதொரு வழியில் உந்தப்படும் போது எழும் மகிழ்ச்சி இமயத்தைவிட பெரியது, இரும்பின் துருப்பைவிட சக்தி வாய்ந்து

வலி

வலி துலாக்கோலில் அளவிட முடியாத துன்பத்திறகு ஈடான வலியைத் தருகிறாள், அவள் கண் சிமிட்டும் காந்தப் பார்வையிலே

நீ மட்டுமே

நீ மட்டுமே அழகு நிழலாக எனைத் தொடர்ந்தாயடி, மழலை மொழியாக பொழிந்தாயடி, நினைக் கண்டு நாழி நோக்கவே, செங்கதிரும் மேற்குச் சாய்ந்தனவே, நின் நகையொலியின் மனவலியால் சமுத்திர ராஜனும் சீறிப்பாயவே, சிந்தனை இழந்து உனது பார்வையில் சிலையானேனே, சுற்றம் மறந்து உன் முகமதியால் என்மதி மறந்தேனே, வளியால் அசையும் உன் கூந்தலும் என் காதில் சல்லாபிக்கின்றதே, நின் காற்சிலம்புகள் கவிபாடவே என் கால்களும் தாண்டவமாடுதே, நின்னைச் சரணடைய நான் ஏங்கவே, நீ மட்டும் எனைப் பிரிந்து எங்கே சென்றாயடி, என் கண்மணியே கவிமணியே. பூவிதழாக, தமிழினியன்

மந்திரப்புன்னகை

மந்திரப்புன்னகை  காலம் மாறிப்போனது காதல் என்னுள் வந்துபோனது , உன் நாணம் எனை ஏதோ செய்தது , இரவை நீட்டி இமை வருத்தி கனவு தொலைத்து காலம் கரைந்தேன் , என் கண்ணீர்த் துளியின் நினைவும் நீதானே அதன் காரணம் உன் இமைதானே , நிழல்போலே நானும் நீரன்றி உன்னுடன் வாழ்ந்தேனே , காலம் ஒருநாள் மாறும் நாம் கண்ட கனவு நேரும் , ஜாதி மத இனமொழி ஓலமில்லா நாளை என்னி நாமும் நகர்ந்து செல்வோம் வானிலே , விதியை மாற்றும் வழிகண்டு பறந்து செல்வோம் நாமும் , தவறேதும் செய்யாமல் காலம் செய்த தவறுக்கு நம் காதல் பலியேனோ , பெண்ணே உன் நினைவும் ஞாபகமும் எனதுயிரின் அடிநாதமே. பூவிதழாக, தமிழினியன்

நாவல் - வெண்பா - பகுதி - 2. இரயில் பயணங்களில்

வெண்பா 2.இரயில் பயணங்களில் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலைப் பற்றி இங்கு சொல்லியே ஆகவேண்டும் , ஏனென்றால் பயணத்தின் அனுபவங்களையும் அதன் கால நேரங்களையும் பிழையில்லாமல் சொல்லவேண்டும் என்பதில் தெளிவுடன் இருக்கின்றேன் . அதுபோல வெறும் பயணத்தின் அனுபவங்கள் மட்டுமே என் வெண்பாவின் கதை அல்ல . இது எனது கதையின் தொடக்கமே . வெவ்வேறு காலங்களில் மாறுபட்ட சூழ்நிலைகளில் , இடங்களில் நடக்கும் நிகழ்வுகளை ஒன்றாக கோர்த்துள்ளேன் . ஆங்காங்கே என் கதையின் அரசர்களும் , அரசியரும் கதையை சுமந்து செல்ல பயணப்படுவர் . சிலர் வழிப்போக்கனாக சமுக நிகழ்வுகளையும் , இந்திய அவலங்களை உணர்த்துவர் . சரி இப்போ நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் பற்றி சொல்ல வந்த செய்தியை சொல்கிறேன் . இந்த ரயில் மாலை 5.15 க்கு பெங்களூர் மெஜஷ்டிக் ரயில் நிலையத்தில் தொடங்கி நாகர்கோவிலை மறுநாள் காலை 8 க்கு சென்றடையும் . தொடக்க நேரமும் இறுதி நேரம் மட்டுமே ரயில்வே நேரப்படி சரியாக இருக்கும் , மற்றபடி ரயில்வே க்ராஸிங் ரொம்பவே இந்த ரயிலுக்கு தடையாகவே அமையும் . இந்த தாமதம் சிலருக...

நாவல் - வெண்பா - பகுதி - 1. மதியும் இசையும்

வெண்பா 1.மதியும் இசையும் அதுவொரு தீபாவளி தொடர் விடுமுறைத் தொடக்கம் . தீபாவளி என்றால் சொல்லவா வேண்டும் , அதுவும் பெங்களூர் மாதிரி ஒரு ட்ராபிக் நரகத்திலிருந்து தப்பி வருவது ,   யப்பா சொல்லி மாலாது . மனது முழுவதும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் நியாபகமே . என்னுள் . முன்தினமே எல்லாம் பேக் செய்துவிட்டு , விடியலை நோக்கி விழி மூடினேன் . நல்லவேளை நண்பர்கள் எனக்கு முன்னாடி கிளம்பி சென்றுவிட்டனர் . அலுவல் பணி விடுத்து சீக்கிரம் சென்று விடலாமென சிரிப்புடன் தொடங்கிய காலை அது . வண்டியை ஸ்டார்ட் செய்து பயணம் தொடர்ந்தேன் . மனம் முழுவதும் ஏதோவொரு இனம்புரியாத சந்தோஷம் . அவ்ளோ ட்ராபிக் இருந்தும் பெங்களூர் ரொம்ப அழகாகவே இருந்தது . அதிகமான ஒலி எழுப்பி பரபரப்பாக எல்லோரும் சென்று கொண்டிருந்த வேளை . உதடுகளில் ஆனந்தமாக " அவள் வருவாளா என் உடைந்து போன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளா " என பாடிக்கொண்டே சென்று கொண்டிருந்தேன் மிதமான வேகத்தில் . ரயில்வே கேட் அடைக்கப்பட்டது , வண்டியை நிறுத்தி ஒதுக்கி நின்ற நேரம் , கல் இடறி ...