முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நாவல் - வெண்பா - 11. கலவியுணர்வு

வெண்பா 11. கலவியுணர்வு வணக்கம் அன்பர்களே. எனது வெண்பாவை தொடர்ந்து வாசிப்போருக்கு எனது சிந்தனையின் அறிவை அன்பாக உரித்தாக்கிக் கொள்கிறேன். வாழ்க்கை எப்போதும் எதாவதொரு வகையில் இன்பத்தை அனுபவித்து நடை பயணம் மேற்கொள்ளத்தான் செய்கிறது. நம்மிடமே தங்கி விடுவதில்லை இன்பமோ துன்பமோ. இந்தப் பாகத்தில் உணர்வுகள் அதிகமாக தூக்கி எறியப்பட்டுள்ளது முகம் சுழிக்கும் அளவிற்கு. தொடர்ந்து வாசியுங்கள். "கொடுமையிலும் மடமையோடு நம்மைநம்பி நாடி வந்தோரை இகழ்ந்து இரை தேடுவது நியாமற்ற செயல்" தன்னுடன் இருப்போரை இகழ்ந்து! மனதில் சலனத்தோடு பிறர் வாழ்க்கையையும் அழிக்க ஏங்கி வாழ்வோரும் இங்கே வாழத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்ட வாழ்க்கையைத் தான் மலையன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். முந்தையப் பகுதியில் தன் மனைவி பரிமளத்துடன் சண்டையிட்டவன் தோட்டத்திற்கு போய்ட்டான். கட்டாந்தரையில அவன் மவன் படுத்துக் கெடந்தான். போவதற்கு முன்ன கள்ளப்பய மவளேனு சொல்லிட்டு நடந்தான் அல்லவா. இதெப்படியோ பரிமளத்தின் காதுல விழ. அவ "அப்பன் பேரே தெரியாதவன முண்டச்சி சொல்லி கட்டிகிட்டேன் பாரு" என்ன தொடப்பத்தால அடி...

நாவல் - வெண்பா - 10. பனங்காய் பணியாரம்

வெண்பா 10. பனங்காய் பணியாரம் வணக்கம் தோழமைகளே. இந்த வாரத்திற்கான பகுதியை எழுத முனையும் போதே இதழில் எச்சி ஊறுகிறது "பிரியாணியின்" மணம் ஏங்கி. பிரியாணியை பரிசாக கொடுக்கும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கு "இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்" . "உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகு வார்" - திருக்குறள். மது, மாது எனச்சுற்றி அழையும் சிங்கம் எப்போதும் சிதைந்து பிறர் மதிக்கப்படாமல் போகும். தொடர்ந்து வாசியுங்கள் எனது வெண்பாவை. நிறைய மனித மிருகங்களின் கொடுங்கோல் மனது பற்றிய கதை இது. கையில அந்த கூர்முனையான தேங்கா உறிக்கும் இரும்பு கம்பி ஏந்திய அஞ்சு நிமிசத்திலயே மலையன் மயங்கிட்டான். அவனுக்கு "சரசு" தான் நம்ம மழையில நனையுறப்ப ரோட்டோரமா பார்த்த பொண்ணுனு மட்டுமே நியாபகம் இருந்துச்சு. அவன் மயங்குறப்ப அவ அந்த துணி அப்பறம் ஒரு கப்புல கொஞ்ச தண்ணீ எடுத்துட்டு வேகமா ஓடியாந்தா. இவன் பக்கத்துல வந்த ஒடனே அத பக்கத்துல இருக்கவங்க கிட்ட கொடுத்துட்டா. கூட்டத்துல இருந்த ஒருத்தன் தான் அவனோட கைய நல்லா தண்ணீ வச்சு தொடச்சி துணிய வச்சு லேசா கட்...

பனிக்குருவி

பனிக்குருவி அதொரு அகன்ற பாலைவனம், செந்நிறக் கம்பலைப் போர்த்தி கடலென பறந்து விரிந்திருந்தது, அங்வொரு பனைப்பெண் தனிக்காட்டு ராணியாக இமயம் அளவு வளர்ந்து, வனத்திற்கே தன்தோகை போன்ற கருக்கவோலையினால் வளிவீசிய பொற்காலம், பனைப்பெண்ணின் கருக்வோலைகளுக்கு இடையே சுள்ளிகளால் இரும்பென ஒரு கூம்புக்கூடு, கூட்டுக்குள்ளே வாழும் பனிக்குருவி, பனை ஓலையின் இசையை ரசித்து ஆனந்தமாக, தானும் மயிலாடிய பனிக்குருவி, பனை ஆகாரத்தையுண்டு ஆரோக்யமாக, ஓலையை விசிறியாக, மட்டைகளை பஞ்சு மெத்தையாக, பனையின் மகனாகவே தவழ்ந்தது முதலே வாழ்ந்து வந்தது, பருவங்கள் மாறி கடுங்குளிரில் அடங்க மறுக்கும் ஓலைகள், குளிர் காற்றுடன் அரக்கியாக சுழிக்காற்றாக மாறி ஒயிலாடியது, நிலைகள் மாறவே தன் மகனின் கண்ணீர் உணர்ந்து மழையாகவே பொழிந்தது பனை, பொழிந்த மழை நெருப்பென குளிருடன் சுட, உறவுகள் பிரிந்து உணர்வுகள் வென்றது, கூட்டைவிட்டு பொந்துக்குள் புகுந்த பனைக்குருவி, வதங்கி வாடி உயிர் குடிக்கும் எமனின் வலையில் சிக்கியது, இருளின் கூண்டுக்குள் சுவாசமில்லாமல் வீழ்ந்த நிலையில் இருக்க, இரைதேடி வந்த பெண்பு...

நாவல் - வெண்பா - 9. சாரட்டு வண்டி

வெண்பா 9. சாரட்டு வண்டி வணக்கம் வாசக நெஞ்சங்களே. முந்தைய அத்தியாயம் "வண்ணான் மலையை" சூடாக பிறர் மனம் சுடும் நெருப்பு போலே முடிக்கவில்லை என்ற ஏக்கம் என்னுள் உண்டு. அந்த வருதத்தை இந்த அத்தியாயத்தில் அழுத்தமாக பதிய விரும்புகிறேன். படித்து அழுதத்தை உணர்ந்து கருத்திட வேண்டுகிறேன். இமைமூடி உறங்க இரவு தேவைப்படா விட்டாலும், இதயத்தில் வலியில்லா இன்பம் இமயமென பொங்க வேண்டும். அதுபோலவே நாம் வாழ்ந்த வாழ்க்கை பிறரின் மனதில் பதிந்து நாம் பயணிக்கும் இறுதிப் பல்லாக்கு இன்பங்களை சுமந்து செல்லவேண்டும். ஆனால் மலையாண்டியின் பல்லாக்கு இன்பமாக சென்றது என்று என் நாயகர்கள் கதையை சுமந்துசென்று ஒருபோதும் சொல்லமாட்டார்கள். வாருங்கள் வயல்வெளி கொஞ்சும் புல்லின் மீது பனித்துளி கொண்ட மோகம் காமத்தின் கதை களத்தில் நீங்களும் வாள்வீசும் வீரனாக. முந்தய பகுதியில் மழவிட்டு நகரத்தொடங்கிய தயிர்காரியின் பின்னயே நடந்து தன் கழுதயையும் பிடிச்சுட்டே போனான் மலையன்(அவன அப்படித்தான் எல்லாரும் அழைப்பர்). கழுதயும் "க க க" என கத்திக்கொண்டே நடக்க. கழுத சத்தத்த கேட்டு முன்ன போற அவளும் பின்ன பாத்திட்டே போன...

எரிமலை வெடிப்பு

எரிமலை வெடிப்பு ஏற்பிடித்து உழும் கலப்பையாக, ஏக்கம் இல்லா ஏற்றத்தில் பண்புடன் வாழ, களத்துமேட்டில் களையெடுக்க, வியர்வை மழையில் நனைந்து இளைப்பாற, ஆதிமனிதனின் நிர்வாண உலகத்தில் உலவும் செம்பருந்தாக, பட்டாம்பூச்சியின் சிறகுபிடித்து பறக்கும் விண்மீனாக, தாரமாக தாவணிப் பெண்ணை மணக்கும் மணாளனாக, கட்டாந்தரையில் நிலவை கட்டியணைக்கும் கதிரவனாக, மரங்களின் நிழலில் மரணிக்கும் இலையாக, பனிமலையை முத்தமிடும் நெருப்பாக, ஸ்டெர்லைட் உலையில் உறங்கும் காப்பராக, கேணி நீரில் நீந்திக் கழிக்கும் குவளையாக, காசு பணம் செறிந்த உலகத்தில் அன்பு செலுத்த ஏங்கி மண்ணில் அழும் சிசுவாக, ஆண்ட்ராயிடும் ஆண்ட்டி ரைடும் இல்லா வாழ்க்கை வாழ ஏங்கும் தந்தியாக, மழலையின் இதழில் துளிர்ந்த புன்னகையை உணர்ந்து தவழும் அன்னமாக, 👉ஆசைகள் அழிந்து இதயத்தில் ஏக்கங்களாக எரிமலை வெடித்துச் சிதறும் நாள் வெகு தொலைவில் இல்லை..!! பூவிதழாக, தமிழினியன்

காத்திருப்பு

காத்திருப்பு நினைத்தே காத்திருந்தேன், நெடுதூரம் போயிருந்தேன், நாடி நரம்பு துடிக்க நான் நாளும் உன்னையே எண்ணினேன், வீதி மாறினாலும் விதி மாறுவதில்லை, விதியாக நீ என் விரலுக்குள் மோதிரமாக இருந்தால், விதிகூட வழிமாறும், கவிபாடி கலைத்துப் போய் ஏங்க கனவிலே நீயும், அதன் நினைவாக நானும், ஏக்கத்தினால் களைப்புற்ற என் இதயமும், தேடிச்சென்ற பாதை நீ சென்ற பாதை, எங்கே எனத் தேடுவேன் உன்னை, கனவிலே வரும் தேவதைகளைத் தேடவேண்டும் என்றால், இங்கே ஒவ்வொரு வரும் மரணித்துப் போவார்கள் காணும் தேவதைகளால் இதயமும் உயிரும் களவாடப்பட்டு. பூவிதழாக, கொண்டல்

உழபடை

உழபடை   விதைத்த விதையை உயிராக எண்ணியே வறண்ட பயிர்களும் வாடுகையில், பூமி பார்த்த வானம் இன்று நாணம் மறந்ததே, விதைத்த விரல்கள் கூனி நிற்கையில் மனம் ஏனோ ஏங்கி நிற்க, கண்களில் பொழியும் வெந்நீரால் பயிர் செழிக்கும் என்ற ஏக்கத்தில் நான் மருக, மருகும் என் உயிரே மறித்துப் போனதே, உயிர் வீழ்ந்தாலும் உள்ளம் வாடி வறண்ட பயிர்களை நாடியே நிற்கிறது, எங்கே என் வருங்காலம் ஊண் அல்லாமல் வான் பார்க்குமோ என்று, காகிதமே சுழலில் கரைசேரும் போது இருளில் மறித்த பறவையாகிறோமே நாங்கள்! பூவிதழாக, தமிழினியன்

தீ இதழ்

தீ இதழ் உன்னையே நினைத்து இதழ்கள் ஏங்க, ஏங்கிய நொடி மறந்தேன், மறந்த நொடியில் தொலைந்து போனேன், தொலைந்த நொடியைத் தேடவே, தேடிய பொழுதில் மனமும் கனமாக வாட, வாடிய பொழுதில் இதயமும் வீழ்ந்தது, வீழ்ந்த வேகத்தில் விழி நோக்கவே, நோக்கிய பொழுது அவள் பிறந்த பொழுது, கண்கள் கசிய இதயம் காதலில் ஏங்க, நான் வீழவா எழவா!!! வீழ்ந்தால் என் வாழ்வு சொர்க்கம், எழுந்தால் அவளுடன் வாழும் நரகம்!!! அன்புள்ளோருடன் நாம் வாழும் வாழ்க்கை நரகம் என்றாலும் ஆனந்தமே!! #நரகத்தில்_நான் பூவிதழாக, தமிழினியன்

புகையும் மனம்

புகையும் மனம் எண்ணித் தவித்த நாட்கள் ஆயிரம், ஏற்றம் என நினைத்து நாம் வீழ்ந்த நாட்கள் ஓர் யுகம், சுகம் என சுமைகள் நம்மேல் ஏறும் அளவின் அறிவினம், காதல் என நாம் கறைந்து போகும் கண்ணீர் செலவினம், ஏக்கம் என நம்மேல் தாக்கம் கொள்ளும் நினைவுகள் ஒருவிதம், இன்பத்தை அனுபவிக்கும் உள்ளம் உருகும் நினைவுகளின் கனம், புன்னகையில் புரிந்துணர்ந்து புதைந்த நாட்கள் ஏராளம், பொழியும் மழையில் நனைய நினைந்த நாட்கள் வரம், நா வரண்டு நாதியற்று நாடிநின்ற நாட்கள் சாபம், துக்கமே தூக்கம் என விழி நினைத்து விட்டதோ என்னவோ, பூக்களைப் பறித்து என் மீது தூவுகின்றனர், நான் செல்லும் பாதையிலா? இல்லை செவி சாயத்த பாதையிலா, அறியாத மனமே ஆயிரம் தேடலைத் தேடும் கபோதி. பூவிதழாக, தமிழினியன்

நாவல் - வெண்பா - 8. வண்ணான் மலை

வெண்பா 8. வண்ணான் மலை சோலையன் மற்றும் அரசியின் வாழ்க்கையைப் போலே இந்த சமுதாயத்தில் பலரின் வாழ்க்கை இப்படித்தான் உள்ளது. எப்போது எங்கே வழிமாறிச் செல்கிறது என்று எவரும் நடக்கும் வரை அறிவது இல்லை. சிலருக்கு வாழ்க்கை என்பது அனுபவம் என்று நினைத்து ஓடுகின்றனர். சிலருக்கு அது நரகம் ஏன் பிறந்தோம் என்று ஏங்கி வாடி நிற்கின்றனர். பலரின் மனதிற்குள்ளும் ஏன் பிறந்தோம் என்ற நினைப்பும் ஏன் வாழ்கிறோம் என்ற ஆதங்கமும் இருக்கும். ஆனாலும் ஏதோவொரு நம்பிக்கையில் கண்மூடி உறங்கி கனவிலே வாழ்கிறோம். தொடர்ந்து வாசியுங்கள் மனிதனுக்குள் மிருகம் புகுந்து அந்த மிருகம் மனிதனாக மாறியதா இல்லை மிருகமாகவே வீழ்ந்ததா என்று அறிந்துகொள்ள. சோலையன் மற்றும் அரசியின் நிகழ்வை சொல்லிமுடித்த முந்தைய அத்தியாயத்தின் போது ரயில் அனேகல் தாண்டி சென்றுகொண்டிருந்தது. கதை மாந்தர்கள் இருவரும் இயற்கையின் அழகை ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது எமன் ஒருவன் குறுக்கிட்டான் என்று தான் சொல்லுவேன். என்னடா இது எமன் யார் என்று யோசிப்போருக்கு நான் சொல்வது என்னவென்றால், இன்பத்தை அழித்து இதயத்தில் அடிக்கும் மணியாக நாம் உணர்வது இன்றைய தொலைபேசி தா...