செங்காந்தள் மலர்
அழகு நிழலாய் தொடர்ந்தாயடி
மழலை மொழியும் பொழிந்தாயடி.
நினைக் கண்டு நாழி நோக்கவே
செங்கதிரும் மேற்குச் சாய்ந்தனவே.
நின் நகையொலியின் மனவலியால்
சமுத்திரராஜன் சீறிப்பாயவே.
சிந்தனை இழந்து உனது பார்வையில்
சிலை சிலையானனே.
சுற்றம் மறந்து உன் முகமதியால்
என்மதி மறந்தேனே.
வளியால் அசையும் உன் கூந்தலும்
என்காதில் சல்லாபிக்குதே.
நின் காற்சிலம்புகள் கவிபாடவே
என் கால்களும் தாண்டவமாடுதே.
நின்னைச் சரணடைய நான்
ஏங்கவே.
நீமட்டும் எனைப் பிரிந்து எங்கே
சென்றாயடி.
என் கண்மணியே கவிமணியே..!

கருத்துகள்
கருத்துரையிடுக