வறுமை ஒழிக்கப்பட்டதா? வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டதா?
இந்தியாவிலுள்ள சட்டங்கள் அனைத்தும் மக்களின் கண்களை மறைக்க இயற்றப்படுகின்றதே தவிர, அவர்களின் துயர் துடைக்க இயற்றப்படுவதாக இல்லையென்பது இந்திய அரசியலமைப்பு சட்டங்களில் எழுதப்படாத/இயற்றப்படா உவமை.
பண்டைய காலம் தொட்டு இன்றளவும் வறுமை, பொருளாதார வளர்ச்சியின்னமை காரணங்களினால் சிறுபிஞ்சு மடல்களை பணியில் அமர்த்துவதை களைய 1986ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் குழந்தை தொழிலாளர்கள் தடுப்புச்சட்டம். 2006 மற்றும் 2008ல் இச்சட்டம் திருத்தி எழுதப்பட்டது.
இந்தியாவிலுள்ள மொத்த மக்கள்தொகையில் ஒவ்வொரு 11வது(CRY 2011 அறிக்கைப்படி) குழந்தையும் வேலை செய்கிறது. 80% குழந்தைகள் ஊரகப் பகுதியில் வேலை செய்கின்றனர்(CRY 2011 அறிக்கைப்படி).பள்ளி செல்லாத ஒவ்வொரு குழந்தையும் குழந்தை தொழிலாளர் என வரையறை செய்து வாதிடுகிறது ஓர் சில அமைப்புகள்.
கிராமப்புறங்களில் போதிய ஆசிரியர் மற்றும் பள்ளிகளின் கட்டமைப்பு இல்லையென்பதே காரணம்யென யுனிசெப் கூறுகிறது.
கல்வியறிவை மேம்படுத்தும் பொருட்டு அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளும் திறமையற்ற அரசு ஊழியர்களினால் தோல்வியைத் தழுவின. கிராமப்புரங்களில் கல்வியை மேம்படுத்தும் பொருட்டு அரசு முயன்ற "அனைவருக்கும் கல்வி இயக்கம்" ஒரு சான்றாக அமைந்தது.
எந்தவொரு முயற்சியின் முன்பும் செயல் விளக்கம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த தவறுவதால் இந்திய அரசு கடந்த 1986ம் ஆண்டு தொட்டு தோல்வியை தழுவியது.
யுனிசெப் அறிக்கையின்படி, இந்தியாவில் அதிகப்படியான குழந்தைகள் வறுமை மற்றும் போதிய பொருளாதாரமின்னமை பிரச்சினைகளால் பெற்றோர்களால் நேரடியாக வேலைக்கு உட்படுத்தப்படுகின்றனர். அவர்கள் குறைந்த ஊதியத்தில் குடும்ப சூழல் காரணமாக வருவாய் ஈட்டும் வசம்புகளானார்கள். இந்திய மக்கள்தொகையில் இது தோராயமாக 10.1 (யுனிசெப் 2011)மில்லியன் குழந்தைகள் வறுமை, பொருளாதாரம், குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்கு உட்படுத்தப்டுகின்றனர். இந்திய அளவில் எழுத்தறிவு ஆய்வு 2013ன் படி எழுத்தறிவு அதிகமுள்ள மாநிலமாக கேரளாவும், எழுத்தறிவு குறைந்த மக்கள் கொண்ட மாநிலமாக ராஜஸ்தானும் உள்ளது. குழந்தை தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுவதில் முதன்மை மாநிலமாக உத்ரபிரதேசம் கொண்டுள்ளது.
சட்டம் இயற்றப்பட்ட நாள் முதல் இன்று வரை எந்தவொரு மாற்றங்களும் இல்லையென்பதை இந்திய பொருளாதாரம் உணர்த்தும் உண்மை. நாட்டின் பொருளாதார வளர்ச்சி அந்நாடு சார்ந்த கல்வியறிவு மற்றும் வறுமையொழிப்பு சார்ந்தே அமையும். கல்வியறிவு மற்றும் வறுமையொழிப்பு சார்ந்த காரணங்களினால் குழந்தைகள் வேலையில் அமர்த்தப்படுகின்றனர்.
கல்வியறிவு மற்றும் தொழில் சார்ந்த திறமைகளை ஊக்குவிப்பதின் மூலமே நாடு வளர்ச்சியடையும்.எந்தவொரு நாட்டில் கல்வியறிவு இலவசமாக்கப்படுகின்றதோ, அன்றுதான் தீபவொளி தெருவெல்லாம் வீசும். கடந்த 2002ம் ஆண்டு முதல் குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு நாளாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறதே தவிர கடைபிக்கப்படுவதில்லை என்பதே உண்மை.
இன்றளவும் சிறார்களை பணியில் அமர்த்துவது என்பது சட்டத்திற்கு புறம்பானது, ஆனால் இங்கு சட்டங்கள் முதலாளித்துவத்திற்கு அடிபணியும் முதுகெலும்பாகவே உள்ளது. சாஸ்திரங்கள் கடைபிடிக்கப்படுகின்றதே தவிர சட்டங்கள் கடைபிடிக்கப்படுவதில்லை இங்கு.
இந்தியாவில் பிறந்த எந்தவொரு குடிமக்களுக்கும் கல்வி இலவசமாக்கப்படவேண்டும். அரசு அளிக்கும் கல்வியின் தரம் மற்றும் ஆசிரியர்கள் திறமை அடிப்படையிலே பணியில் அமர்த்தப்படவேண்டும்.
ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீடுகள் களையப்படவேண்டும். அனைவருக்கும் சம கல்வி மற்றும் உரிமை அளிக்கப்படவேண்டும். பொருளாதார மேம்பாடு மற்றும் நாட்டின் வளர்ச்சி குழந்தைகளின் நல் வளர்ச்சி மற்றும் அவர்களின் கல்வியறிவை சார்ந்தே அமையும். சிறந்த கல்வியை இலவசமாக கொடுப்பதன் மூலம் குழந்தைகள் சிறுவயதில் அடிமைப்படுத்தப்படுவதை தடுக்கலாம்.
அந்நிய முதலீடுகளை தடுத்து இந்திய முதலீடுகளை உயர்த்தி தொழில்முறையை மேம்படுத்தலாம். முதலாளித்துவத்தை தடுத்து தனிமனித வளர்ச்சியின் முயற்ச்சியால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் உயர்வு அடையும்.
பூவிதழாக,
தமிழினியன்

கருத்துகள்
கருத்துரையிடுக