மந்திரப்புன்னகை
காலம் மாறிப்போனது
காதல் என்னுள் வந்துபோனது,
உன் நாணம் எனை ஏதோ செய்தது,
இரவை நீட்டி இமை வருத்தி
கனவு தொலைத்து காலம் கரைந்தேன்,
கனவு தொலைத்து காலம் கரைந்தேன்,
என் கண்ணீர்த் துளியின் நினைவும் நீதானே
அதன் காரணம் உன் இமைதானே,
நிழல்போலே நானும் நீரன்றி உன்னுடன் வாழ்ந்தேனே,
காலம் ஒருநாள் மாறும்
நாம் கண்ட கனவு நேரும்,
ஜாதி மத இனமொழி ஓலமில்லா நாளை என்னி நாமும் நகர்ந்து செல்வோம் வானிலே,
விதியை மாற்றும் வழிகண்டு பறந்து செல்வோம் நாமும்,
தவறேதும் செய்யாமல் காலம் செய்த தவறுக்கு நம் காதல் பலியேனோ,
பெண்ணே உன் நினைவும் ஞாபகமும் எனதுயிரின் அடிநாதமே.பூவிதழாக,
தமிழினியன்

கருத்துகள்
கருத்துரையிடுக