முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாவல் - வெண்பா - பகுதி - 1. மதியும் இசையும்


வெண்பா

1.மதியும் இசையும்


அதுவொரு தீபாவளி தொடர் விடுமுறைத் தொடக்கம். தீபாவளி என்றால் சொல்லவா வேண்டும், அதுவும் பெங்களூர் மாதிரி ஒரு ட்ராபிக் நரகத்திலிருந்து தப்பி வருவது,  யப்பா சொல்லி மாலாது. மனது முழுவதும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் நியாபகமே. என்னுள். முன்தினமே எல்லாம் பேக் செய்துவிட்டு, விடியலை நோக்கி விழி மூடினேன். நல்லவேளை நண்பர்கள் எனக்கு முன்னாடி கிளம்பி சென்றுவிட்டனர். அலுவல் பணி விடுத்து சீக்கிரம் சென்று விடலாமென சிரிப்புடன் தொடங்கிய காலை அது. வண்டியை ஸ்டார்ட் செய்து பயணம் தொடர்ந்தேன். மனம் முழுவதும் ஏதோவொரு இனம்புரியாத சந்தோஷம். அவ்ளோ ட்ராபிக் இருந்தும் பெங்களூர் ரொம்ப அழகாகவே இருந்தது. அதிகமான ஒலி எழுப்பி பரபரப்பாக எல்லோரும் சென்று கொண்டிருந்த வேளை. உதடுகளில் ஆனந்தமாக "அவள் வருவாளா என் உடைந்து போன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளா" என பாடிக்கொண்டே சென்று கொண்டிருந்தேன் மிதமான வேகத்தில். ரயில்வே கேட் அடைக்கப்பட்டது, வண்டியை நிறுத்தி ஒதுக்கி நின்ற நேரம், கல் இடறி என் காலடியில் யாரோ முத்தமிடுவது போல் ஓர் உணர்வு. என்னவோ என திரும்பிய தருவாயில் பின்வந்த ஒரு இரு சக்கர வாகனத்தின் கைப்பிடி தான் முத்தமிட்டது என உணர்ந்தேன். சுற்றி இருந்தோர் கன்னடத்தில் திட்டி கொண்டிருந்தனர் அவரை. கூமுட்ட கூமுட்ட என வாயெடுக்கும் போது, என்னால் திட்ட முடியவில்லை. காரணம் ஒரு அழகு மலர் புன்னகையுடன் பூத்தது. நீங்க நினைப்பது போல் இல்லிங்க. புன்னகையுடன் அங்கே பூத்த மலர் ஓர் வயதே நிரம்பிய குழந்தை.  முதலுதவி செய்துவிட்டு விடைபெற்றேன், அவர் மன்னிக்க எனக்கூறி விடைபெறும் தருவாயில் கூட அந்த மலர் சிரித்து கொண்டு தான் இருந்தது. யோசனையுடன் பயணம் தொடர்ந்து அலுவலகம் சென்றேன். என்ன இளவு என உற்று நோக்கி உணர்ந்தேன் அவர் வண்டியின் கைப்பிடி காயம் ஏற்படுத்தியதென. ரிஸப்சன்ல டின்ஜர் வைத்துவிட்டு பணி தொடர்ந்தேன். என் நேரமோ என்னவோ கடைசி வரை ஓர் பக்கிற்கு(Bug) தீர்வு கொடுக்க முடியவில்லை. அந்த நேரம் பார்த்து மேனேஜர் கத்திகொண்டே இருந்தார். இரயிலுக்கு நேரமாவதை உணர்ந்தேன், இருந்தும் முடியவில்லை. நல்லநேரம் ஶ்ரீ வந்தால். அவள் என்றால் மேனேஜர் சிரிக்க ஆரம்பிப்பார், அவளுடன் பேசிக்கொண்டே இருப்பார். அவளே பேசி முடித்து போக நினைத்தால் இவர் விடவே மாட்டார். இதுதான் சரியான நேரமென அவரிடம் சர் என்றேன், அவர் அவள் முன்னால் நல்வர் போல் நடந்து கொள்வாரென தெரியும். நான் பேசிய போது ஶ்ரீ சிரித்து கொண்டு இருந்தால் சரி "இனிய தீபாவளி வாழ்த்துக்கள் என்றார்". ஶ்ரீ புன்னகை செய்து கண் சிமிட்டும் அழகில் தொடர்ந்தேன் பயணத்தை. இரயிலை பிடிக்க முடியுமா என நண்பன் வேகப்படுத்தினான். 5 நிமிடம் தாமதமாக சென்றடைந்தேன். வண்டி சென்றுவிட்டதோ என நெற்றியில் கைவைத்து கண் மூட. ஓர் பெருஒலி எனை எழுப்ப, இரயில் தாமதமென ஒலித்தது. பெருமூச்சு விட்டேன். கலைப்புணர்ந்து ஏங்கிய நேரம் தண்ணீர் பாட்டிலை வாங்கி என்னிடம் தராமல் எங்கோ பார்த்து கொண்டிருந்தான் நண்பன். அவனது திசையில் என் இமை செலுத்த, அழுக்கு உடை, முகத்தில் கலையா புன்னகை,இடது கையில் ஒரு பை கோர்த்து, வலது கையில் ஒரு புத்தகத்துடன் ஓர் 12 முதல் 13 வயது மதிக்கத்தக்க சிறுவன் வந்து கொண்டிருந்தான். விழாக்களில் அலையா விருந்தாளி எனச்சொல்வார்கலே, அதுபோல பெருமிதத்துடன் வந்து கொண்டிருந்தான். அருகில் வந்தவுடனே உணர்ந்தேன், அவன் கையில் இருப்பது "அங்னிச் சிறகுகள்" புத்தகம் எனவும், அவன் தந்தி விற்பனை செய்பவனெனவும். அவனுடன் பேச நினைத்து ஓரு தினத்தந்தி வாங்கினேன். அவனிடம் பெயரென்ன என்றேன் "மதீ" என்றான். அதென்ன புத்தகம் என்றேன், அவன் "சிறகடித்து பறக்கவும், சிகரம் தொடவும், தன்னம்பிக்கை ஊட்டவும்" என்றான். பேச்சற்று வியப்புடன் நின்றேன், ஏனென்றால் அக்னிச் சிறகுகள் அப்துல் கலாம் அவர்களின் சுயசரிதை என்பது மட்டும் தெரியும். அந்த வியப்புடன் இருவரும் விழி பார்த்த நேரத்தில் இரயில் வந்து நின்றது. மதியும், நண்பனும் விடை பெற்றனர். எனது சீட் தேடி அமர்ந்தேன். அருகில் ஓர் 55 முதல் 65 வயது மதிக்கத்தக்க மனிதர் புன்னகையுடன் பாடல் கேட்டுக் கொண்டிருந்தார். இவர் என்ன பாடல் கேட்க போகிறார் என சிலாகித்து சோர்ந்து கண்மூடினேன். ஓரு சில நிமிடம் கழித்து சட்டென்று உடல் நடுங்கி கண் விழித்தேன். என் மனதை தாக்கியது ஒரு பாடலின் வரியும் அதன் இசையுமே. அந்த வரிகளை நான் அதுவரை கேட்டதில்லை. இதோ அந்த வரிகள் உங்களுக்காக,


"காலம் என்ற தேரே ஆடிடாமல் நில்லு, இக்கணத்தை போலே இன்பமேது சொல்லு, காண்பவை யாவும் சொர்க்கமே தான் - வள்ளி(1993)"


பின்பு அந்த பாடல் எனது விருப்ப பாடலாக மாறியது. அவர் இசையின் அனுபவமே என் வயது. இளையராஜா என்று சொல்வதைவிட இசைராஜா என சொல்வதே மிகை. என்றுமே இசை அவர் உயிரில் தான் பிறந்து வளர்ந்து, வாழ்வது.
கனவுகளை சிறுவனின் மனதில் ஊட்டியும், சோர்வுடன் இருந்த என் மனதினில் சிலிர்ப்பூட்டியும் வாழ்பவர்கள் இசைராஜா, கனவு கலாம் அவர்களும்.

ஓரு பயணத்தின் அனுபவங்களும்,
அதன் தாக்கங்களும் மனிதனின் மனதில் எத்தனை மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.  மனிதர்களும், நம்மைச்சுற்றி உள்ளவைகளும் அழகும் ஆனந்தமும் தருபவை. ஒவ்வொன்றையும் இதமான மனதுடன் போற்றி அனுபவிங்கள்.

பயணங்கள் தொடரும். ஒவ்வொரு சனிக்கிழமை இரவு 8 மணிக்கு எனது படைப்பான "வெண்பா"வின் தொடர்ச்சி எனது இணையத்தில் பதிவிடப்படும். கற்றுக்கொண்டு இருக்கிறேன் பிழைகள் இருப்பின் என்னை திருத்திக்கொள்வேன், தாங்களும் தங்களது புன்சிரிப்பால் எனக்கு உதவி செய்யுமாறு வேண்டுகிறேன்.


பூவிதழாக,
தமிழினியன்

கருத்துகள்

Popular Posts

குருதி குடிக்கும் ஓநாய்கள்

குருதி குடிக்கும் ஓநாய்கள் 1. அறிமுக நன்றி  அனைவருக்கும் வணக்கம். முதலில் எனது உடன் பிறவா மற்றும் நான் முகம் பாரா சகோதரர் கார்த்திக்கேயன் அவர்களுக்கும், அவர்களின் நண்பராக  இருக்கும் அனைவருக்கும் நன்றி. ஏனென்றால் எனது மனதில் தோன்றிய சிறு புள்ளியை வைத்து நான் கோலமோ கோடோ போட  நினைத்தபோது அது வெகுஜன மக்கள்  தெரிந்து கொள்ளவேண்டும் என்ற நினைப்புடனும், திறமை உள்ள ஒருவன் அதை வெளிப்படுத்த நினைக்கும்போது அதற்கு நம்மால் முடிந்ததை செய்யவேண்டும் என்ற மனம் அவரிடம் நிறையே உள்ளது. அதனால் அவருக்கு நன்றி கூறுகிறேன். நன்றி சகோ கார்த்திக். தமிழ் மக்கள் என்பவர் வேறு, இலங்கை தமிழ் மக்கள் வேறு என நினைப்போருக்கு ஒரு வேண்டுகோள், நாம் இங்கு நம் குடும்பம் இருக்கே என்ற நிம்மதியுடனும். களிப்புடனும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஆனால் இலங்கையில் இருந்து திரும்பிய பல தமிழ் சொந்தங்கள் தங்களுக்கென ஒரு ரத்த பந்தம், சொந்தம் இல்லாத உறவை அணைத்து ஒன்றாக வாழ்கின்றனர். ஆனாலும் அவர்களின் வாழ்வும் இதயமும் மனவேதனையுடனும் வலியுடனும் உள்ளது. அவர்களுக்கு என்று நம்மால் என்ன செய்யமுடியும் என்பதை நானும்...