முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாவல் - வெண்பா - பகுதி - 3. பயண உரையாடல்

வெண்பா

 3. பயண உரையாடல்


மூன்றாவது பகுதியான "பயண உரையாடலை" வாசிக்கும் முன், இரண்டாவது பகுதியான "இரயில் பயணங்களில்" பகுதியை வாசிக்கும்படி வேண்டுகிறேன். அதன்பின் உங்களுக்கு என் கதையின் போக்கு புரியும்.

மேகமூட்டம் கரிய நிறச் சிறகுகளை விரித்து மறையத் துவங்கிய நேரமது. காற்றாலைகள் தன் பங்களிப்பிற்கு புயல்போலே வீசிக்கொண்டு இருந்தது. கூடவே மழைக்காற்றின் வாசமும் பரவி மணம் கமழும் மண்வாசனை காற்றில் கலந்து என் இதயத்தை ஈரமாக்கி கொண்டிருந்தது. இரயில் வண்டியும் "கூ குச்சு குச்சு " என தாளமிட்டு பெங்களூர் நகரின் ஊடே சென்று கொண்டு இருந்தது. மக்களும் பரபரப்பாகவே சென்று கொண்டிருந்தனர். நகரம் என்றாலே நரக வேதனையை அனுபவித்து தானே ஆகவேண்டும், அதுவும் மழை மேகத்துடன் இருந்தால். இந்த நிகழ்வுகளினால் பெங்களூரு நகரமே அழகாகவும் பரபரப்புடன் காணப்பட்ட வேளையில் நமது பெங்களூரு எக்ஸ்பிரஸ்  பையப்பனஹள்ளி ஸ்டேஷன்யை மிதமான வேகத்துடன் நெருங்கி கொண்டிருந்தது. சிலநேரங்களில் கிராஸ்ஸிங் காரணமாக ரயில் பையப்பனஹள்ளியில் சிறிது நேரம் நிறுத்தப்படுவது உண்டு. ரயில் நிறுத்தப்படுவதை இருவரும் விழிகளால் வெளிநோக்கி உணர்ந்தனர். என்ன தம்பி கிராஸ்ஸிங்ஆ என்றார், ஆமாம் சார் இந்த வண்டிக்கு நெறய கிராஸ்ஸிங் இருக்கு என்றான். அவர் ஹ்ம்ம் என தலையசைத்தார். கண்டோன்மெண்ட் ஸ்டேஷனில் தொடங்கிய மௌனம் பையப்பனஹள்ளியில் கரைந்தது. அவரே தொடர்ந்தார்,

தம்பி எங்க போறீங்க என்றார், நான் என் சொந்த ஊருக்குப் போய்க்கொண்டு இருக்கேன் சார். தம்பி சொந்த ஊருக்குப் பேர் ஏதும் இல்லையா எனச் சிரித்துக்கொண்டே கேட்டார் அவர்.

சாரி சார், என் ஊர் விருதுநகர் பக்கத்துல ஒரு கிராமம் சார். ஹ்ம்ம் என்று சொல்லி மேலும் அவர் தனது கேள்விக்கணையை எறிந்தார். என்ன பண்றீங்க & என்ன படிச்சு இருக்கீங்க

நான் இன்ஜினியரிங்ல் எலக்ட்ரானிக்ஸ் படிச்சு இருக்கேன், இப்போ பெலந்தூர் ல விப்ரோவில் ஒர்க் பண்றேன். ஓஹ் குட் என்றார். எனக்கு மனசுல அப்பபோவே தோணிருச்சு இவர் கொஞ்சம் விஷயம் தெரிஞ்சவர் என்று, அதனால சரியாக பதில் சொல்லவேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டேன். நல்ல கம்பெனி தம்பி என்று சொல்லி புன்னகைத்தார்.

தொடர்ந்து அவருடன் பேசலானேன், என் மனதில் எழும் அழுக்கு எண்ணங்களை எல்லாம் ஓரங்கட்டிவைத்து. ட்ரெயினில் ஏறியதிலிருந்து என் மனம் உங்களுடன் பேசவேண்டும்னு சொல்லிக்கொண்டே இருக்கு சார், ஆனா இந்த ஈகோ இருக்கே அது தெரியாத மனிதர்கள் கூட பேச இதழ் ஏதோ சொல்லுது சார்.

தம்பி அப்படி தான் இருக்கும் தம்பி, உங்க வயசுல நீங்க சந்தோசம், வெற்றி மட்டுமே வாழ்க்கை என்று கடந்து போறீங்க. அதனால பாருங்க தெருவில் விழுந்து கிடக்கும் உங்களை போலே சகமனிதன தூக்கி விடகூட முடியாம அவனை ஒரு நாயை விட கேவலமாக நினைக்கிறீங்க. இதுதான் தம்பி இன்றைய இளைஞர்கள் பிரச்சனை.

அவர் கொஞ்சம் அதிகமான உணர்வுகளோடும் முகத்தில் அதீத ஆதங்கத்துடனும் பேசினார், இப்படி பேசும்போது. நான் இதை அவரிடமிருந்து எதிர்பார்த்தேன்.

ஏனெனில் ஒருவர் மகிழ்ச்சியை எந்த அளவு கொண்டாடுகிறாரோ அந்தளவு அவர் மனதில் ஏதோ சில சஞ்சலங்கள் இருக்கலாம். உண்மை தான் சார் இங்க மக்கள், மகிழ்ச்சி என்பது நாம் கொண்டிருக்கும் பணத்தை பொருத்தே என்று நினைக்கிறாங்க என்றேன்.

அவர் உண்மைதான் தம்பி, அதுக்கு காரணம் என்னவென்று நினைக்கிறீங்க? என்றார். தெரியவில்லை என்றேன். நீங்கதான் தம்பி, உங்களை போன்ற தெளிவான உணர்வுகளும், நோக்கங்களும் இல்லாததினால் தான் என்று முடிக்க.

எனக்கு தூக்கிவாரி போட்டது, என்னடா இது நாம என்னடா பண்ணுனோம் என நினைத்தேன். நினைத்தது சரியே என்று பின் நினைத்து அடங்கினேன்.

அவர் தொடர்ந்தார், என்ன தம்பி பேசாம இருக்கீங்க? தம்பி பணம் புகழ் இதை எல்லாம்விட மனிதாபிமானம் உயர்ந்தது தம்பி, என்மனதில் இந்த விதமான வாக்கியங்களை கேட்டவுடன் என் விளியில் பலவிதமான நினைவுகள் வந்து போனது. அதெல்லாம் அடக்கி கொண்டு மீண்டும் அவருடன் பேசினேன்.

உண்மை தான் சார், அதுக்கு காரணம் என்னனு நினைக்கிறிங்க என்றேன், முதல் காரணம் நம்அரசு.. இரண்டாவது காரணம் நம்ம தான் என்றார்.

நாம எப்படி அரசின் செயல்களுக்கு உடன்படுவோம் என்றேன், அவர் தம்பி உலக நாடுகளில் இந்தியா ஒரு மிகப்பெரிய நாடு, அணைத்து விதமான வளங்களும் இங்கே இருக்கின்றன. ஆனால் நாம எல்லாரும் அயல்நாடுகளுக்கு அடிமையா தான் இருக்கோம் இன்னும்.

அதெப்படி சார் நாம தான் சுதந்திரம் வாங்கியாச்சே!

சுதந்திரம் வாங்கியது என்பது எவ்ளோ உண்மையோ அதேயளவு நாம இன்னும் அடிமையா தான் இருக்கோம் என்பதும் உண்மை தம்பி?

அடிமை என்று நீங்கள் எதைச் சொல்றீங்க?

நீங்க இப்போ ஒரு பெரிய கம்பனியில் வேலை பார்க்கிறிங்க?

உங்களால் ஒரு தொழில் அரசாங்க உதவியோடு செய்ய முடியுமா, ஒரு சாதாரண மனிதனுக்கு இந்த நாடும் நாட்டு அரசியலாரும் உதவி செய்து நாட்டை வளரும் நாடக மாற்றி இருக்காங்களா என்ன?

எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல! அப்படியே விழிகளில் வலியுடன் சிரித்தேன்!
வாசிக்கும் அன்பு உள்ளங்களுக்கு சொல்வது என்னவென்றால் நாம் மனதில் தோன்றும் எண்ணங்களை வலிமைபடுத்தி அதைச் செய்ய இந்த அரசு எந்த வழியில் உதவியும் உந்துதலும் தருகிறது. உயர்ந்தோர் பல கோடி வாங்கி நாட்டைவிட்டு ஓட, நம் வங்கி கணக்கிலிருந்து பணம் திருடப்படுகிறது. என்னங்க நியாயம் இது.
முடியாது தானே தம்பி, சாதாரண மனிதனுக்கு ஓட்டுப் போடுவது மட்டுமே உரிமை. இந்தியத் திருநாட்டில் வேலை வாய்ப்புகள் மற்றும் சிறுபான்மை மக்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் இல்லை. அப்படியே இருந்தாலும் அது யாருக்கு பயன்படுது உயர்ந்தோர் ஜாதி என்ற அடிப்படையில் உட்புக. இப்போ இந்திய நாடு அயல் நாடுகள் கொடுக்கும் வேலை வாய்ப்புகளின் அடிப்படையில் நகர்ந்து கொண்டே இருக்கு. ஒரு அயல்நாட்டு நிறுவனம் செயல்பட கொடுக்கின்ற சலுகைகளை நம்நாட்டு இளைஞர்களுக்கு கொடுத்து ஊக்கப்படுத்தும் தன்மை இல்லை. வேலியில் பாய்ந்த ஓணான் படும் துன்பத்தை என்மனம் உணர்ந்தது. இரயிலும் பையப்பனஹல்லி ஸ்டேஷனை விட்டு நகர்ந்தது, ஆனால் என்மனம் மட்டும் அங்கேயே அவர் வார்த்தைகளை சிந்தித்து கொண்டே இருந்தது.

ஒவ்வொரு சனிக்கிழமை இரவு 8 மணிக்கு எனது படைப்பான வெண்பா'வின் தொடர்ச்சி எனது இணையத்தில் பதிவிடப்படும். கற்று கொண்டு இருக்கிறேன் பிழைகள் இருப்பின் என்னை திருத்திக்கொள்வேன், தாங்களும் தங்களது புன்சிரிப்பால் எனக்கு உதவி செய்யுமாறு வேண்டுகிறேன்.

அடுத்த வாரம் சனிக்கிழமை நாளில் உங்களைச் சந்திக்கிறேன் எனது எழுத்துக்கள் மூலமாக. அதற்கிடையே சிறுகதைகள், கவிதை, விமர்சனம் மூலமாக சந்திக்கிறேன். விடைகொடுங்கள்.

பூவிதழாக,
தமிழினியன்


கருத்துகள்

Popular Posts

குருதி குடிக்கும் ஓநாய்கள்

குருதி குடிக்கும் ஓநாய்கள் 1. அறிமுக நன்றி  அனைவருக்கும் வணக்கம். முதலில் எனது உடன் பிறவா மற்றும் நான் முகம் பாரா சகோதரர் கார்த்திக்கேயன் அவர்களுக்கும், அவர்களின் நண்பராக  இருக்கும் அனைவருக்கும் நன்றி. ஏனென்றால் எனது மனதில் தோன்றிய சிறு புள்ளியை வைத்து நான் கோலமோ கோடோ போட  நினைத்தபோது அது வெகுஜன மக்கள்  தெரிந்து கொள்ளவேண்டும் என்ற நினைப்புடனும், திறமை உள்ள ஒருவன் அதை வெளிப்படுத்த நினைக்கும்போது அதற்கு நம்மால் முடிந்ததை செய்யவேண்டும் என்ற மனம் அவரிடம் நிறையே உள்ளது. அதனால் அவருக்கு நன்றி கூறுகிறேன். நன்றி சகோ கார்த்திக். தமிழ் மக்கள் என்பவர் வேறு, இலங்கை தமிழ் மக்கள் வேறு என நினைப்போருக்கு ஒரு வேண்டுகோள், நாம் இங்கு நம் குடும்பம் இருக்கே என்ற நிம்மதியுடனும். களிப்புடனும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஆனால் இலங்கையில் இருந்து திரும்பிய பல தமிழ் சொந்தங்கள் தங்களுக்கென ஒரு ரத்த பந்தம், சொந்தம் இல்லாத உறவை அணைத்து ஒன்றாக வாழ்கின்றனர். ஆனாலும் அவர்களின் வாழ்வும் இதயமும் மனவேதனையுடனும் வலியுடனும் உள்ளது. அவர்களுக்கு என்று நம்மால் என்ன செய்யமுடியும் என்பதை நானும்...