முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நாவல் - வெண்பா- 7. மருத்துவரும் கார்மேகமும்

வெண்பா 7.  மருத்துவரும் கார்மேகமும் நம்மை நாம் எவ்வளவு தான் பாதுகாத்து கொண்டாலும் நம்மைச்சுற்றி இருக்கும் மிருகங்களின் பசி நம்மைக் கொல்லும் ஆயுதமாக இருக்கலாம். இல்லையென்றால் அவர்களின் பசியாக கூட நாமே இருக்கலாம். இதையேதும் எல்லா நேரங்களிலும் நம் மனம் உணர்வதில்லை. பசிக்காக உண்ணும் மிருகங்கள் ஏராளம். அப்படி பசிக்காக அரசி கற்பழிக்கப்பட்டாளா. இல்லை எதற்காக கற்பழிக்கப்பட்டாள். ஏன் சோலையன் மனநலம் பாதிக்கப்பட்டு தன்னிலை உணராமல் இருக்கிறார் என அறிந்துகொள்ள தொடர்ந்து வாசியுங்கள். வாழ்க்கையில் வாசிப்பு நம்மை மேன்மைப்படுத்தும் . சரி வாங்க கதைக்குள்ளே போவோம். பீங்கானை எடுத்துக்கொண்ட கான்ஸ்டபிளும் இன்ஸ்பெக்டரும் அந்த பீங்கானில் இருக்கும் ரத்த மாதிரியை உடனே கண்டுபுடிக்க வேண்டும் என்று அங்கிருந்து புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார். அங்கிருந்து கிளம்பிய அவர்கள் தங்களுக்குள்ளே பின்வருமாறு பேசிக்கொண்டனர். கான்ஸ்டபிள் நம்மகிட்ட இருக்கும் இரண்டு க்ளூ. ஒன்று அவள் ஆடையில் பட்டிருந்த ரத்த மாதிரி, இன்னொன்னு இந்த பீங்கானில் இருக்கும் ரத்தமாதிரி. இதுரெண்ட...

நாவல் - வெண்பா - 6. கொலையரசி

வெண்பா 6. கொலையரசி  வணக்கம் நண்பர்களே. அனைவரின் பயணங்களும் நாட்களும்  இனிதாகவே போய்க் கொண்டு இருக்கிறது என நம்புகிறேன். தெளிவான ஒரு நோக்கம், பார்வை இல்லாமல் எறியப்படும் எந்தொரு கல்லும் இலக்கை அடைவது இல்லை. அதுபோலவே லட்சியமும் புத்திசாலித்தனமும்  இல்லாமல் வெறுமனே இறைக்கை வீசிப் பறக்கும் பறவை கூட வேடனால் வீழ்த்தப்படும். ஒவ்வொருவரின் வாழ்க்கையும் கழிவுகள் போலவே தெளிவற்றதாக நகர்ந்து கொண்டிருக்கிறது. லட்சியம் நோக்கம் தெளிவில்லாமல் தான் சோலையனின் வாழ்க்கையும் நகர்ந்து கொண்டிருந்தது. அவனைச்சுற்றி உள்ளவர்களால் அவன் மிகவும் சந்தோஷமாகவே இருப்பதாக உணர்ந்தான். ஆனாலும் அவனைப் பலர் தங்களின் இதழ் சிரிக்கப் பயன்படுத்தப்படும் பொழுதுபோக்காகவே நினைத்தனர். அவன் ஒரு சாதாரண க்ரானைட் குவாரியில் கல் அறுக்கும் உதவியாளாக பணிபுரிந்து வந்தான். எங்க ஊர் கொம்பள்ளி, ஒரு சிறு கிராமம் நாங்க எல்லாரும் கிருஷ்ணகிரி தான் அதிகமா படிக்க வருவோம். எங்க ஊருக்கும் கிருஷ்ணகிரிக்கும் ஒரு முப்பது நிமிடம் ஆகும் போக. ஆனால் சோலையன் அண்ணன் சூளூருக்கும் ஓசூருக்கும் நடுவில வேலை பார்த்தார். எங்க பஸ்ல  ...

எரியும் சுள்ளிகள்

  எரியும் சுள்ளிகள் அதிகாலை நேரம் மணி ஒரு ஏழு இருக்கும் . விவேக் நல்ல கனவுகளோடு மனநிம்மதியாக ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் . மாடு கத்தும் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது அதனுடன் சேர்ந்து வேகமாக யாரோ நடந்து வரும் காலடி சத்தமும் கேட்டுக்கொண்டே இருந்தது . எந்த விதமான உணர்வுகளும் இல்லாமல் விவேக் தன் கனவுக்கன்னி சமந்தாவிற்கு முத்தங்கள் பரிமாறிக்கொண்டு இருந்தான் . காலடி சத்தம் அவனுடைய அறைக்குள் நுழைகிறது என்பது ஏதும் அறியாமல் நம்ம ஹீரோ சமந்தாவிற்கு உதடுகளை அசைத்து கொண்டே “ இச்சு இச்சு” என்று கொடுத்துக்கொண்டு இருந்தான் . காலடி சத்தமும் நின்று விட்டது . அவன் “ இச்சு இச்சு” எனக்கொடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் உள்ளே நுழைந்த மனிதர் தன் கையில் இருந்த தண்ணீரை இச்சு இச்சு என்று சத்தத்தை கொடுத்த வாயிலேயே ஊற்றினார் . கனவுகளோடு முத்தம் கொடுத்துக் கொண்டிருந்த விவேக் அப்படியே திடுக்கிட்டு எழுந்து கண்விழித்து பார்க்கவே . சமந்தா உருவில் ஒரு பெண் நிற்பதாக அவன் கண்களுக்கு புலப்பட . தான் போத்த...