முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முள்மேல் பனித்துளி

முள்மேல் பனித்துளி 


உயிர் பிறப்பின் அடையாளம்
உலக சிறப்பின் சிற்பம் அவள்,
பவனி வரும் தேர்
பார் புகழ்பட வேண்டிய ஒளி அவள்,
இன்பத்தின் பெருமை
இதழ் விரித்த தாமரை அவள்,
கலையாத மேகம்
கண் சிமிட்டும் பொம்மை அவள்,
சிறைப்பட்ட பூனை
கனவு தொலைத்த காவியம் அவள்,
சினம் இல்லா சிங்கம்
சிலரின் இச்சைகளால் சிதைபடுவது ஏனோ,
சுதந்திரம் இல்ல சூழலில் வாழும் அவளுக்கு,
உரிமையும் உணர்வுகளும் இழந்த அவளுக்கு,
காலம் மாறிப்போகும் வேளையில் மேகங்கள் கூட விடியலை நோக்கி நகர்கிறது,
அவள் மட்டும் கருவறைக்குள் வாழும் ஒளியொலி இல்லா  ஊமையாகிறாள்.

கருத்துகள்

Popular Posts

குருதி குடிக்கும் ஓநாய்கள்

குருதி குடிக்கும் ஓநாய்கள் 1. அறிமுக நன்றி  அனைவருக்கும் வணக்கம். முதலில் எனது உடன் பிறவா மற்றும் நான் முகம் பாரா சகோதரர் கார்த்திக்கேயன் அவர்களுக்கும், அவர்களின் நண்பராக  இருக்கும் அனைவருக்கும் நன்றி. ஏனென்றால் எனது மனதில் தோன்றிய சிறு புள்ளியை வைத்து நான் கோலமோ கோடோ போட  நினைத்தபோது அது வெகுஜன மக்கள்  தெரிந்து கொள்ளவேண்டும் என்ற நினைப்புடனும், திறமை உள்ள ஒருவன் அதை வெளிப்படுத்த நினைக்கும்போது அதற்கு நம்மால் முடிந்ததை செய்யவேண்டும் என்ற மனம் அவரிடம் நிறையே உள்ளது. அதனால் அவருக்கு நன்றி கூறுகிறேன். நன்றி சகோ கார்த்திக். தமிழ் மக்கள் என்பவர் வேறு, இலங்கை தமிழ் மக்கள் வேறு என நினைப்போருக்கு ஒரு வேண்டுகோள், நாம் இங்கு நம் குடும்பம் இருக்கே என்ற நிம்மதியுடனும். களிப்புடனும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஆனால் இலங்கையில் இருந்து திரும்பிய பல தமிழ் சொந்தங்கள் தங்களுக்கென ஒரு ரத்த பந்தம், சொந்தம் இல்லாத உறவை அணைத்து ஒன்றாக வாழ்கின்றனர். ஆனாலும் அவர்களின் வாழ்வும் இதயமும் மனவேதனையுடனும் வலியுடனும் உள்ளது. அவர்களுக்கு என்று நம்மால் என்ன செய்யமுடியும் என்பதை நானும்...