முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நி(நீ)தானம்

நி(நீ)தானம்


இரவு நேரமது. எப்போதும் அவன் காலதாமதமாக அலுவலகப் பணியை முடித்து வருபவன். அவள் எப்போதும் அவனுடைய வருகையை எண்ணி ஆவலுடன் அவனுக்கு பிடித்த ஒன்றை உணவு சமைத்து காத்திருப்பது வழக்கம். அவனோ வீட்டிற்குள் வந்தவுடன் ரெஃரஷ் செய்து கொள்வான். இடைபட்ட நேரத்தில் அவளும் சமைத்த உணவுகளை எடுத்து வைத்து காத்திருப்பாள்.

அன்பான ஒருவருக்கு, நம் ஆனந்த்திற்கு என ஒளிவீசும் நிலவாக இருக்கும் ஒருவருக்கு, காத்திருத்தல் என்பது எவ்வளவு மகிழ்ச்சி என்பது கல்யாணம் காதல் பன்றவரிடம் கேட்டால் தெரியும். நானோ மொட்டப்பயன்.

அன்றைக்கு அவன் ரெஃரஷ் செய்து உணவு அறிந்தச்செல்ல அங்கு அவளில்லை. அந்த இடமே மௌனம் தவழும் சோலையாக இருக்க. அவன் அவளை தேடிச்சென்று அவளைத் தன் மார்பின் மேல் அணைத்து, தன் வலது கரத்தால் அவள் தலைமுடியைக் கோதி அவளின் மூக்கின்மேல் முத்தமிட. இந்த முத்தங்கள் எல்லாம் தினந்தோறும் அவன் அவளுக்கு கொடுக்கும் சீர்வரிசை. அவளோ நடுக்கத்துடன் காணப்பட்டால். அவனோ அதுயேதும் உணராமல் அவளிடம் வினவ ஆரம்பித்தான்.

என்ன ஆச்சு என் வெண்நிலவுக்கு, ஏன் இன்னைக்கு இரவு சாப்பிட ஏதும் செய்யவில்லை என்றான்.
அவள் தன்மனதில் மலர்ந்த புன்னகையை தவிர்த்து, அவனிடம் ஆபிஸ்ல இருந்து இன்றைக்கு லேட்டா தான் வந்தேன். ரொம்ப டயர்டா இருந்தது அதான் என்றாள். ஆனால் அவனுக்குத் தெரியும் அவள் எப்போதுமே தெளிவாக ப்ளான் செய்து முடிவு எடுப்பாள். அதை முன்னமே தெரியப்படுத்தவும் செய்வாள்.
அவன் தனது கணத்த இதயத்தில் சிந்தனை செய்துகொண்டே, ஓகே நோ ப்ராப்ளம், வெளியே போகலாம் என்றான். அவள் தலையசைக்க, இருவரும் வெளியே கிளம்பினர். அவன் தனது காரை எடுத்து வைட் பண்ண அவளும் ரெடி ஆகிக்கொண்டு நடந்து சென்றாள். அவள் நடந்து வரும் அழகைச் சொல்லவேண்டும் என்றால், என் விரல்களே எழுதவும் யோசிக்கவும் தடம் மாறுகிறதே அவள் மேல் கொண்ட மோகத்தால். சரி இருந்தும் என் மனம் சொல்லத் துடிக்கிறதே,

மேனி மணம் கமழ அவள் வீதி வருகையில்
நாசியற்று மூர்ச்சையானேன்,

வளியால் அசையும் அவள் கூந்தலும் என் மனதில் தாபிக்கின்றதே,

அவள் காதுகளில் ஆடும் பவளக் கொடிகளும் என் இதழ்களை விரசம் கொள்கின்றனவே,

இப்படி அவள் நடந்துவரும் நொடியில் முள்(அவன்) நெடிந்து நொடிந்து விழுந்தது(விழுந்தான்). கார் டோரை அவன் ஓபன் செய்துவிட இருவரும் பயணித்தனர். பயணத்தின்போது இருவரும் புன்னகையை பரிமாறிக் கொண்டனர்.

வண்டியை மெதுவாக செலுத்த, நுங்கம்பாக்கம் காவேரி காம்ப்ளக்ஸ் அருகிலுள்ள "The canton chinese restaurant" யை இருவரும் அடைந்தனர். அவளுக்கு சைனீஸ் உணவுகளின் மீது விருப்பம் அதிகமென அவன் அறிவான். பூரிப்புடன் இருவரும் சென்று ஹேண்ட் வாஷ் செய்து அமர்ந்தனர்.

வாட்டசாட்டமாக ஒருவர் கையில் ஆண்டிராய்ட் மொபைல் ஷ்பூனுடன் வந்தான். சாரி சாரி ஆண்ட்ராய்ட் மொபைல் ஃபோனுடன் வந்தான்.

Excuse me sir, What would you like to have sir?

அவன் கேட்ட தருணத்தில் இருவரின் இதழ்களும் ஓர்ருவாக இசைத்தன.

Can anyone place your order please என்றான்?

இருவரும் ஒருவரையொருவர் பார்த்து புன்னகை செய்ய,

மலர் தன் இதழ்களினால் தொடர்ந்தால்,

1. Half West lake spicy chicken
2. Phuket fish - 1 and
3. Plain lychees - 1

என அவள் முடிக்க. விவேக் தொடர்ந்தான்,

1. Half Bell pepper chicken
2. Prawn briyani - 1
3. Schezwan pan cake with cake ice cream

என ஆர்டர் செய்து முடித்தனர்.

20 நிமிட காத்திருப்பிற்கு பின் உணவுகளை செர்வர் கொண்டுவந்து வைக்க. மலருக்காக விவேக் ஆர்டர் செய்ததையும், விவேக்கிற்கு மலர் ஆர்டர் செய்ததையும் உண்டு மகிழ்ந்தனர். அந்த 20நிமிட இடைவெளியில் இருவருக்கும் இடையே மௌனம் மட்டும் மொழியாக இருந்ததென்றால் நல்லா இருக்குமா, உப்பில்லாத ஊறுகாய் போலவும், சப்பில்லா சாம்பார் போலவும் இருக்குமல்லவா.

விவேக் மலரிடம் தனது மென்மையான இசையில், மலர் உன் முகத்தில் எந்தவொரு மகிழ்ச்சியும் இல்லையே, எல்லாத்துக்கும் புன்னகையே பதிலாக சொல்றீயே. என்ன ஆச்சு உனக்கு இன்னைக்கு என்றான். ஒன்னும் இல்ல, Feeling tired என்றாள். அவன் மனதினில் அவள் சொல்லும் வார்த்தையில் உவமையில்லை என, அவள் விழி பார்த்துணர்ந்தான். இருந்தும் அவள் சொல்லும் வார்த்தைக்கு மேல் எதுவும் பேசாமல் காரணம் இருக்கும் என மௌனமாக இருக்க, உணவும் வந்தது. இருவரும் சாப்பிட்டு முடித்த வேளையில் செர்வர் வந்து,

Is it enough sir என்று கேட்டு பில்லைக் கொடுத்தான். பில்லை வாங்கிக் கொண்ட விவேக், அதை மலரிடம் கொடுத்துவிட்டு பே பண்ணச் சொல்லி ரெஷ்ட்ரூமுக்கு சென்றான். அவள் பில் பே பண்ணிவிட்டு வெளியே வைட் பண்ணினாள். அவன் வந்தவுடன் இருவரும் பேசிக்கொண்டு காரை நெருங்க மலர் ஏதோ யோசனையில் பின்தொடர்ந்தால்.
தன் கையில் பில் கவுண்டரில் மீதி வாங்கிய பணம் அதிகமாக இருப்பதாக உணர்ந்தால். ஏனென்றால் அவள் அவனது பர்சில் இருந்து எடுத்தபோது ஒரேயொரு 2000 ரூபாய் இருப்பது மட்டூமே உணர்ந்தால். பில் அமௌன்ட் 1300 பே பண்ணி தன் பர்சில் மீதமாக 800 இருப்பதை உணர்ந்தால். அந்த அதிகமாக இருந்த 100 ரூபாயை கொடுக்க ஓடினால். கொடுத்துவிட்டு திரும்பி வந்தவேளையில் அவனிடம் கூறினால். அவன் அவளை நோக்கிப் பேசலானான். என் பர்சில் 800 ரூபாய் தான் மீதம் இருக்கனும் மலர் என்றான் வேறு எதுவும் சொல்லாமல். அவள் யோசிக்கத் தொடங்கினால், பின் உணர்ந்தால் தான் 2000 ரூபாய் எடுத்தது பர்சின் ஒரு சைடில் இருந்தெனவும், திரும்ப வைத்தது வேறு சைடு என அறிந்தால். அவனிடம் சாரி விவேக் இட்ஷ் மை மிஷ்டேக் என்றால். அவன் இன்னைக்கு நீ தன்நிலைமையிலே இல்லை என்றான். அவள் மனதில் ஈரத்துடனும் விழிகளில் கண்ணீருடன்,

விவேக் நம்ம குழந்தை நம்மை விட்டு கரைந்துவிட்டது என்றாள்!
வாட் என்றான் விவேக். என்ன சொன்ன என்று வண்டியை நடுரோட்டில் நிறுத்த அந்த இடமே பின்வந்த வண்டிகளின் ஒலியால் சல்லாபிக்க, இவர்கள் மட்டும் மௌனத்துடன் விழிபார்த்து அழுதனர். வண்டியை ஒதுக்கி நிறுத்தினான். கொஞ்ச நேரம் கழித்து வீட்டை அடைந்தனர். மறுநாள் அவளே, அவனிடம் கூற, 2 டேய்ஷ் முன் பஸ் ஸ்டாண்ட்ல் இறங்கி நடந்துவந்து கொண்டிருந்தேன் அப்போ, சைடுல இருக்க பார்க்ல நிறைய பேர் விளையாடிக் கொண்டிருக்க, ஒரு 3வயது சின்னப்பொன்னு ஏறி விளையாடியது. நான் பக்கத்தில் வர அந்தக் குழந்தை ட்ரெஸ் கம்பியில் மாட்டியது எனப்பார்த்தேன். அந்தப்பெண்ண கைகொடுத்து இறக்கிவிட நினைத்து கைகொடுத்து இறக்க, அந்த குழந்தை தடுமாறி என் வயிற்றில் தலைகுப்புற விழுந்தது. 2 நாளாக வலித்து கொண்டிருக்க, செக்கப் போனேன். எனச்சொல்லி முடிக்க அவன் அவனைக் கட்டியனைத்து இதழ்களில் முத்தமிட்டு சொல்லலானான்,

டோன்ட் வொர்ரி பேபி யூ ஆர் ஹியர் ஃபார் யூ என்றான்.

அன்பும், அரவணைப்பும் என்னில் அடங்கா இன்பத்தைத் தரும். நீ தானமாக இருப்பது போல் எதிர்பாரத சந்தர்பங்களில் நிதானமாகவும் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும் நாம்.

பூவிதழாக,
தமிழினியன்

கருத்துகள்

Popular Posts

குருதி குடிக்கும் ஓநாய்கள்

குருதி குடிக்கும் ஓநாய்கள் 1. அறிமுக நன்றி  அனைவருக்கும் வணக்கம். முதலில் எனது உடன் பிறவா மற்றும் நான் முகம் பாரா சகோதரர் கார்த்திக்கேயன் அவர்களுக்கும், அவர்களின் நண்பராக  இருக்கும் அனைவருக்கும் நன்றி. ஏனென்றால் எனது மனதில் தோன்றிய சிறு புள்ளியை வைத்து நான் கோலமோ கோடோ போட  நினைத்தபோது அது வெகுஜன மக்கள்  தெரிந்து கொள்ளவேண்டும் என்ற நினைப்புடனும், திறமை உள்ள ஒருவன் அதை வெளிப்படுத்த நினைக்கும்போது அதற்கு நம்மால் முடிந்ததை செய்யவேண்டும் என்ற மனம் அவரிடம் நிறையே உள்ளது. அதனால் அவருக்கு நன்றி கூறுகிறேன். நன்றி சகோ கார்த்திக். தமிழ் மக்கள் என்பவர் வேறு, இலங்கை தமிழ் மக்கள் வேறு என நினைப்போருக்கு ஒரு வேண்டுகோள், நாம் இங்கு நம் குடும்பம் இருக்கே என்ற நிம்மதியுடனும். களிப்புடனும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஆனால் இலங்கையில் இருந்து திரும்பிய பல தமிழ் சொந்தங்கள் தங்களுக்கென ஒரு ரத்த பந்தம், சொந்தம் இல்லாத உறவை அணைத்து ஒன்றாக வாழ்கின்றனர். ஆனாலும் அவர்களின் வாழ்வும் இதயமும் மனவேதனையுடனும் வலியுடனும் உள்ளது. அவர்களுக்கு என்று நம்மால் என்ன செய்யமுடியும் என்பதை நானும்...