தடுமாறும் ஊஞ்சல்
யாருக்காக அழுதேன்
எதற்காக அழுகிறேன்,
ஏது நினைந்து என் விளி சிவந்தன,
எது என் வாழ்க்கையின் பயணம்,
ஏன் இந்த சுயநல உலகில்
அவதரித்தேன்,
ஏன் உலகம் சுருங்கி சுழல்கிறது,
ஏன் நாடகமாடும் மனிதர்களின் பிடியில் இல்லாமல் இருக்கிறேன்,
எது என் வாழ்க்கையில் வளம் தருபவை,
நான் செல்லும் வழிகள் யாவும் ஏன் இருள் சூழ்ந்து
இருக்கின்றன,
தன்னம்பிக்கை எனும் கடலில் நீந்தும் எனக்கு ஏன் இந்த தடுமாற்றம்,
வானம் போன்ற என் வெண்மனதில் ஏன் சிறுமை,
நாளும் நலம்வாழ ஏங்கி இன்வாழ்வு தொலைத்தேனோ,
செருக்கினால் இதயத்தில் எழுந்த நெருப்பை அனைத்து எழுந்து ஓடினான் அந்தச் சிறுவன்?
எங்கே..? எங்கே..? எங்கே..?
பள்ளிக்கு...!!

கருத்துகள்
கருத்துரையிடுக