வெண்பா
11. கலவியுணர்வு
வணக்கம் அன்பர்களே. எனது வெண்பாவை தொடர்ந்து வாசிப்போருக்கு எனது சிந்தனையின் அறிவை அன்பாக உரித்தாக்கிக் கொள்கிறேன். வாழ்க்கை எப்போதும் எதாவதொரு வகையில் இன்பத்தை அனுபவித்து நடை பயணம் மேற்கொள்ளத்தான் செய்கிறது.
நம்மிடமே தங்கி விடுவதில்லை இன்பமோ துன்பமோ. இந்தப் பாகத்தில் உணர்வுகள் அதிகமாக தூக்கி எறியப்பட்டுள்ளது முகம் சுழிக்கும் அளவிற்கு. தொடர்ந்து வாசியுங்கள்.
"கொடுமையிலும்
மடமையோடு நம்மைநம்பி
நாடி வந்தோரை
இகழ்ந்து இரை தேடுவது
நியாமற்ற செயல்"
தன்னுடன் இருப்போரை இகழ்ந்து! மனதில் சலனத்தோடு பிறர் வாழ்க்கையையும் அழிக்க ஏங்கி வாழ்வோரும் இங்கே வாழத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்ட வாழ்க்கையைத் தான் மலையன் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
முந்தையப் பகுதியில் தன் மனைவி பரிமளத்துடன் சண்டையிட்டவன் தோட்டத்திற்கு போய்ட்டான்.
கட்டாந்தரையில அவன் மவன் படுத்துக் கெடந்தான். போவதற்கு முன்ன கள்ளப்பய மவளேனு சொல்லிட்டு நடந்தான் அல்லவா. இதெப்படியோ பரிமளத்தின் காதுல விழ.
அவ "அப்பன் பேரே தெரியாதவன முண்டச்சி சொல்லி கட்டிகிட்டேன் பாரு" என்ன தொடப்பத்தால அடிக்கனும்னு சொல்ல.
வேலில போற ஓநாய! யாராது மாராப்புல உடுவாங்கலா? உட்டுட்டாலே பரிமளம்.
நடந்து அஞ்சடி போனவன் கீழ தண்ணியோட இருந்த செம்பக் கொண்டே தூக்கி எறிய, எதிர்பாக்கத அவளோட
"இரு மார்புக்கு கீழ அடிவயித்துக்கு மேல ரெம்ப வேகமாப்பட"
அப்புடியே "அம்மானு கத்திட்டே" அந்த இடத்திலயே நெஞ்ச தடவிட்டே கீழ உழுந்துட்டா.
இத எதும் கண்டுக்காம பாயும் போர்வையும் எடுத்துட்டு நடந்து போய்டான் மலையன்.
சத்தங்கேட்டு எழுந்த மவன். சுத்தி முத்தி பாத்துட்டு ரெண்டு கண்ணயும் தொடச்சுப்புட்டு பாக்க. வேகமாக எந்துச்சு பரிமளத்து பக்கத்துல போனான். அவ மூச்சுப்பேச்சே இல்லாம கெடந்தா. அழுதுட்டே என்ன பண்ணனு தெரியாம அவ சீலைய பிடிச்சு இழுக்குறான். முகத்துல கையவச்சி தடவுறான். அவ எழுந்துக்கவே இல்ல.
ரொம்ப நேரமா அழுதுட்டு இருந்தான் மவன். சரியான கும்மிருட்டு. ஆள் நடமாட்டமே இல்ல. மலையன் வீட்டு வலப்பக்கமா போனா ஒரு தோப்பு இருக்கு. அப்ப அந்த பக்கமா புல்லுக்கட்டு எடுக்க அந்த பக்கமா நடந்து போனவ காதுல,
"பரிமளம் வீட்டுல அழுகை சத்தம் கேட்க" செரி புள்ள பசியல அழுதுனு நெனச்சி நடந்து போய்ட்டா. போய்ட்டு திரும்பி வரப்பயும்கூட கொஞ்சமா சத்தம் கேட்க. வேகமாக தலையில சொமந்த கனத்தோட வேவமா நடந்துவர அவன் சத்தமும் அதிகமா கேட்கவே.
பக்கத்துல வந்தவ பாக்க அவ மவன் வெளி வாசலுல நின்னு அழுதுட்டு இருக்கறத பாத்தவ. தலயில வச்சிருக்க புல்லுக்கட்ட ஏறக்கிவச்சு வேவமா போய் கொழந்தய தூக்கிட்டு சுத்திமுத்திப் பார்க்க யாருமே இல்ல ஒரே இருள் சூழ்ந்த நெலவு மட்டுந்தான் தெரிய.
வீட்டுள்ள எட்டிப்பாரத்தா தண்ணி சிந்திக்கெடக்க. அப்படியே கொஞ்சம் முன்ன எட்டுவைச்சி பாக்க. அருவாமன பக்கத்துல சாஞ்சு கெடந்தா பரிமளம்.
குழந்தைய கையில வச்சுக்கிட்டே உள்ள ஓடினவ அவ கன்னத்தில கைய ரெண்டு மூனு தெடவ தட்டித்தட்டிப் பார்க்க. எழுந்துக்கவே இல்ல. வேவமா பக்கத்துல இருந்த செம்புல தண்ணிய எடுத்தா அவ மூஞ்சியில சப்புசப்புனு நாலஞ்சி தடவ அடிச்சா. திடுக்கிட்டு கண்ணு முழித்தவள பிடிச்சு ஒட்கார வச்சா. ஒட்காந்தவளுக்கு தண்ணி கொடுத்து குடிக்கவச்சிட்டு எதுமே கேட்காம போய்ட்டா.
பொண்ணுங்களப்பத்தி சொல்லவா வேணும் அலசி ஆராய்வதுல. தண்ணி சிந்திக்கெடக்கு, அருவாமன பக்கத்துல கெடக்குறா பரிமளம், மகன் ரெம்ப நேரமா அழுகுறான், புருஷன காணோம்.
இத்தனயும் பார்த்துட்டு அவகிட்ட என்னனு கேட்டா எப்புடிங்க.
பார்த்த ஒடனயே ஆராய்ச்சி பன்றதுல புறணி பேசுவதுல பொண்ணுக்கு நிகர் எதுமில்ல. ஊரு முழுக்க பரப்பிட்டா நைட்டே. மலையன் பரிமளத்த போட்டு வெளுத்துப்புட்டான்னு. மறுபக்கம்
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள் - திருக்குறள்
நீங்கினால் சுடுகின்றது அணுகினால் குளிர்ச்சியாக இருக்கின்றது. இத்தகைய புதுமையானத் தீயை இவள் எவ்விடத்திலிருந்து பெற்றாள் என சரசுவின் நினைப்பிலேயே மூழ்கினான் மலையன்.
கனவுல அவளோட ஆடிப்பாடி மகிழ்ந்தான். அவளையே எண்ணி நிலவைப் பாத்து தன் கைகளை எதேதோ செஞ்சு உதட்டை நாக்கால் தடவினான். இன்னும் பற்பல செஞ்சான். தனக்கு கலியாணம் ஆகி கொழந்த பொஞ்ஞாதி இருப்பதயே மறந்து போய்ட்டான். அவனுக்கு சரசின் அழகுமேல அணையாத நெருப்பா ஒரு உணர்வு எரிஞ்சுட்டு இருந்தது.
எல்லாம் எதுக்கு அந்த அஞ்சு நிமிச சொகத்துக்காக.
" கருப்பு எரிப்புல
உணர்வுகளத் தூண்டிய
ஒனைத் தேடுறேன்டி,
இசை தவளும் தோப்புக்குள்ள
கலவியாட கருப்புமேனியக்
கொண்டாடி,
பொன்வாசந் தேடும்
நாசிக்கு சுவாசிக்க
காத்தாக வாடி,
நாக்கு ஊற உண்ணும்
உணவாக இதழைத் தாடி,
ஆடையற்று உன் அழகிய
தேன்மேனியின் சுவை
பருகிட ஏங்கும் மனதை
அணைக்கும் நீராக வாடி"
என சரசின் நெனப்புல உணர்வுகள உச்சிக்கே கொண்டு ஏங்கி உறங்கிவிட்டான் மலையன்.
இரவு நிலா மறைஞ்சு சூரியன் கெழக்க உதிக்கத் தொடங்கிய கால நேரம். கோழிகளும் அங்கங்க இரதேடி ஓடிட்டே இருந்துச்சு.
சடாருன்னு தென்னமரத்துல இருந்து ஒரு தேங்கா வுழ. திடுக்கிட்டு எழுந்தான் மலையான். அப்போ மணியொரு ஆறு ஆறர இருக்கும்.
எழுந்தவன் கட்டிருந்த கைலிய செரி செஞ்சுப்புட்டு அஞ்சடி நடந்து போயி ஒரு மரத்துப் பக்கத்துல கொட்டாவி விட்டுட்டே ஒன்னுக்கு அடிச்சான் சொர் சொர்ரென்று.
பின்ன அப்படியே நடந்தாந்து படுத்துட்டான். சூரியனும் நல்லா சூட மொகத்துலபட ஆரம்பிக்க பொறண்டு பொறண்டு படுக்க தூக்கம் கலைஞ்சுருச்சுனு தோணி எழும்பி படுக்கைய எடுத்துட்டு போய்ட்டான்.
மலையனோட வீட்டப்பத்தி சொல்லனும்னா. ஒரு சின்ன குடிசப்போட்ட வீடுதான். சுத்தி பனத்தட்ட வச்சு அடச்சுருக்கும். உள்ள இடதுபக்கம் ஒரு சின்ன கேணியிருக்கும். வலது பக்கமா ஆடுமாடு கோழி கழுதைக்கு சின்ன கூடாரம் போட்டிருக்கும்.
எடதுபக்கங்கூடி போனா பின்னாடி இருக்க தோப்புக்கு ஒரு ஒத்தயடி பாத மாதிரி போகும்.
அந்த ஒத்தயடி பாதவழிய வந்த மலையன் கேணியில தண்ணியெடுத்து கால்மூஞ்சி அலம்புனான்.
அலம்பிட்டு வீட்டுள்ள போனான் ஆருமே இல்ல. உடனே குளிச்சு முடிச்சு கிளம்பிட்டான் கழுதய அவுத்து பத்திட்டு.
வீட்டவிட்டு கெளம்பி வந்தவன் ஏர்வாடிப் பக்கமா போவோமா இல்ல கிழக்கரப் பக்கமா போவோமானு யோசிச்சுட்டே மண் தெரிக்க நடந்தான்.
போற வழியில ஊர்க்கு சொந்தமான கட்டிடம் இருக்கு அங்கதான் ஊர்மக்க சேரந்து கூத்தடிக்கும். ஒருவர் பேச்ச இன்னொருத்தர் பேசுற இடம்.
இவன் நடந்து வர்றத பார்த்த ஒருத்தன். டே காமக்கோட்டி பொண்டாட்டி வரலனா அடிப்பயாக்கும். அவ்ளோ என்னடா ஒனக்கு அரிப்பு. அதான் வீட்டச்சுத்தி தென்னமரம் இருக்கேன்னு சொன்னா கைய எதுக்கால இருந்த மரத்த காமிச்சு.
எலே செவத்தயா ஏன் பொண்டாட்டிய தானே கூப்பிட்டேன். ஓன் பொண்டாட்டிய கூப்பிடலனு கோவமா அவளுக்கு நைட்டு வரச்சொல்லுடா போக்கத்தவனே. சொன்ன மறுநிமிசமே வேகமா இறங்கி வந்தவன் கையதூக்கி அடிக்கப் போய்ட்டான். அப்பறம் சுத்தி இருக்கவுக புடிக்க.
ஆளாளுக்கு பேச ஆரம்பிச்சாங்க. அடே ஒனக்கு எதுக்கு அவன் வம்புனு ஒருத்தன் சொல்ல. மத்தவன் செவத்தைய அவன பத்தி தான் ஊருக்கே தெரிஞ்சதே நாயக்கண்டா கூட நாக்குத் துடிக்கும் நாதாரிப்பய அவன் அவன்கிட்டப் போயி போடா போடானு சொல்ல.
இதக்கேட்ட மலையன் யோ மூக்கயா என்னயா நீ மட்டும் என்னா யோக்கியமா காத்தவராயன் பொஞ்ஞாதிய தோப்புக்குள்ள என்ன பன்னனு சொல்லவானு சொல்ல. அடேய் இப்படிப் பொய் மூட்டய தூக்கிட்டு திரியாதடானு சொல்ல. அங்கயிருந்த எல்லாரும் விழுந்து விழுந்து சிரிக்க. அங்கயிருந்து கழுதய பத்திட்டு நடந்தான் மலையன்.
கிராமத்துக்குள்ள ஆயிரம் வம்பு புரளி பேசும் பாதகர்கள் இருப்பாங்க. அதுல எல்லாமே உண்மையா இருக்காது சில உண்மை இருக்கும். சில சோடிச்சு இருக்கறதா இருக்கும்.
ஆனா மலையன் சொன்னது உண்மைதான் மற்றவர்கள் இவனைப்பத்தி சொன்னதும் உண்மதான். ஆனால் இவன் சொல்லும் போது அந்த காத்தவராயர் அஞ்சடி தள்ளி உள்ள ஒட்காந்து இருந்தாருங்கோ. என்ன நடந்தது ஏது நடந்ததுனு அடுத்தவாரம் பாப்போங்கோ.
பூவிதழாக,
தமிழினியன்

கருத்துகள்
கருத்துரையிடுக