எரிமலை வெடிப்பு
ஏற்பிடித்து உழும் கலப்பையாக,
ஏக்கம் இல்லா ஏற்றத்தில்
பண்புடன் வாழ,
களத்துமேட்டில் களையெடுக்க,
வியர்வை மழையில் நனைந்து இளைப்பாற,
ஆதிமனிதனின் நிர்வாண உலகத்தில்
உலவும் செம்பருந்தாக,
பட்டாம்பூச்சியின் சிறகுபிடித்து
பறக்கும் விண்மீனாக,
தாரமாக தாவணிப் பெண்ணை
மணக்கும் மணாளனாக,
கட்டாந்தரையில் நிலவை
கட்டியணைக்கும் கதிரவனாக,
மரங்களின் நிழலில் மரணிக்கும் இலையாக,
பனிமலையை முத்தமிடும் நெருப்பாக,
ஸ்டெர்லைட் உலையில் உறங்கும் காப்பராக,
கேணி நீரில் நீந்திக் கழிக்கும் குவளையாக,
காசு பணம் செறிந்த உலகத்தில் அன்பு செலுத்த
ஏங்கி மண்ணில் அழும் சிசுவாக,
ஆண்ட்ராயிடும் ஆண்ட்டி ரைடும் இல்லா வாழ்க்கை வாழ ஏங்கும் தந்தியாக,
மழலையின் இதழில் துளிர்ந்த புன்னகையை
உணர்ந்து தவழும் அன்னமாக,
👉ஆசைகள் அழிந்து இதயத்தில் ஏக்கங்களாக எரிமலை
வெடித்துச் சிதறும் நாள் வெகு தொலைவில் இல்லை..!!
பூவிதழாக,
தமிழினியன்

கருத்துகள்
கருத்துரையிடுக