புகையும் மனம்
எண்ணித் தவித்த நாட்கள் ஆயிரம்,
ஏற்றம் என நினைத்து நாம் வீழ்ந்த நாட்கள் ஓர் யுகம்,
சுகம் என சுமைகள் நம்மேல் ஏறும் அளவின் அறிவினம்,
காதல் என நாம் கறைந்து போகும் கண்ணீர் செலவினம்,
ஏக்கம் என நம்மேல் தாக்கம் கொள்ளும் நினைவுகள் ஒருவிதம்,
இன்பத்தை அனுபவிக்கும் உள்ளம்
உருகும் நினைவுகளின் கனம்,
புன்னகையில் புரிந்துணர்ந்து புதைந்த நாட்கள் ஏராளம்,
பொழியும் மழையில் நனைய நினைந்த நாட்கள் வரம்,
நா வரண்டு நாதியற்று நாடிநின்ற நாட்கள் சாபம்,
துக்கமே தூக்கம் என விழி நினைத்து விட்டதோ என்னவோ,
பூக்களைப் பறித்து என் மீது தூவுகின்றனர்,
நான் செல்லும் பாதையிலா?
இல்லை செவி சாயத்த பாதையிலா,
அறியாத மனமே ஆயிரம் தேடலைத் தேடும் கபோதி.
பூவிதழாக,
தமிழினியன்

கருத்துகள்
கருத்துரையிடுக