முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாவல் - வெண்பா - 9. சாரட்டு வண்டி

வெண்பா

9. சாரட்டு வண்டி


வணக்கம் வாசக நெஞ்சங்களே. முந்தைய அத்தியாயம் "வண்ணான் மலையை" சூடாக பிறர் மனம் சுடும் நெருப்பு போலே முடிக்கவில்லை என்ற ஏக்கம் என்னுள் உண்டு. அந்த வருதத்தை இந்த அத்தியாயத்தில் அழுத்தமாக பதிய விரும்புகிறேன். படித்து அழுதத்தை உணர்ந்து கருத்திட வேண்டுகிறேன்.

இமைமூடி உறங்க இரவு தேவைப்படா விட்டாலும், இதயத்தில் வலியில்லா இன்பம் இமயமென பொங்க வேண்டும். அதுபோலவே நாம் வாழ்ந்த வாழ்க்கை பிறரின் மனதில் பதிந்து நாம் பயணிக்கும் இறுதிப் பல்லாக்கு இன்பங்களை சுமந்து செல்லவேண்டும்.

ஆனால் மலையாண்டியின் பல்லாக்கு இன்பமாக சென்றது என்று என் நாயகர்கள் கதையை சுமந்துசென்று ஒருபோதும் சொல்லமாட்டார்கள். வாருங்கள் வயல்வெளி கொஞ்சும் புல்லின் மீது பனித்துளி கொண்ட மோகம் காமத்தின் கதை களத்தில் நீங்களும் வாள்வீசும் வீரனாக.

முந்தய பகுதியில் மழவிட்டு நகரத்தொடங்கிய தயிர்காரியின் பின்னயே நடந்து தன் கழுதயையும் பிடிச்சுட்டே போனான் மலையன்(அவன அப்படித்தான் எல்லாரும் அழைப்பர்). கழுதயும் "க க க" என கத்திக்கொண்டே நடக்க. கழுத சத்தத்த கேட்டு முன்ன போற அவளும் பின்ன பாத்திட்டே போனா.

அவன் அவ பின்னாடியே போவக் காரணம் அவ பேச்சோட முன்னுக்குப் பின் முரன்பாடான இரட்டை அர்த்தம் தான். அவள் எப்பயுமே இப்படித்தான் வேறுபட்ட அர்தத்த வார்த்தைக்குள்ள பொதிச்சு பேசுவா. குறும்பு கொணம் இருக்க எறும்பு எப்பயுமே அரக்கன் கையில மாட்டும். எப்படி மாட்டியது எங்கே மாட்டியது?



" கண்டாங்கி சீலை உடுத்தி
காச்செலம்பு அணிஞ்சு
மின்னாடி போறவளே,
இலைகளும்
ஒன் செலம்பொலி கேட்டு
உதிருதோ,
மாராப்பு பட்ட எடம்
மலையென இருக்க,
வீராப்பு கொண்ட
வெள்ள மனசும்
கள்ள நெனப்பு கொண்டு,
ஒளிஞ்சு கெடக்கும்
ஒன் உடல் அழகத் தேடுதே,
காத்து தேன்
என்ன தவம் செஞ்சதோ,
ஒன் இடிப்பு மடிப்ப
எட்டிப்பாத்து முத்தமிடுதே,
இருட்டு ஒளியில ஓன்
கருத்த ஒடம்பும்
பட்டுப் போல மின்ன,
ஏன் மனசயும் உசுரயும்
பறிச்சுப் போறயே நீ"

என தன் பெண் பசி ஏக்கத்த மனசில வச்சு, நாக்குல ஊத்துப் போல பெருகும் நீரோட அவ பின்னாடியே நடந்தான். மனிச இனம் எப்பயுமே இப்படித்தான் எதிர் பாலினத்து மேல கொடூரமான எண்ணங்களக் கொண்டு திரியும்.

தன் மனசுல படிஞ்ச கறையோட மலையனும் அத சட்டை செய்யாம ரோட்டு ஓரத்துல நடந்து சென்று கொண்டிருக்க. வருணபகவான் கொஞ்சம் லேசா மருக்கா துளிர் விட. இலைகளும் மழைய பேரன்புடன் காத்துவீசி வரவேற்றது. மேகங்களும் கருநிறச் சாயம் பூசி தன் அழகு குறைவில்லை எனச்சொல்ல.

ஏ புள்ள மருக்கா மழை பெய்யற மாதிரிதேன் இருக்கு. வாயேன் கொஞ்சம் ஒதுங்கிட்டுப் போவோம். முகத்தில் கோபக் கனலுடன்,

"போயா அங்கிட்டு பல்ல ஒடச்சி காய் அடிச்சுருவேனாக்கும்"

என கை விரலை அசைச்சு சொல்ல. அடியாத்தி காயடிக்கற மூஞ்சா இது,
"கல் மனச கரைச்சு செலையாக்கும் பொட்ட மனசு புள்ள ஓன் மனசு" என சிரிச்சு வேடிக்கையா சொல்லி அவளின் பின்னழகை உற்று ரசித்தான்.

முன்ன போய்ட்டு இருந்தவ மனசுல சிரிச்சு, ஒதட்டுலயும் கண்ணுலயும் கோவத்த வச்சு, சடாரென ஒரு நிமிசம் திரும்பி,

"அறிவு கெட்ட முட்டாப்பய மாதிரி பேசாதயா"

எனச்சொல்லி முன்னே சிடுசிடுவென நடந்து போய்ட்டா.

போனவளின் மனசில இவன் கலியாணம் ஆனவனா இருப்பானா? இல்ல ஒண்டிக்கட்டயா. பாக்க நல்லா சந்தன மேனில தவள்ற நிலவப் போலதான் இருக்கு என சிரிச்சு நினைச்சுகிட்டே வேகமா நடந்தாள்.

அவளபத்தி சொல்லனும்னா கலியாணம் ஆகாத கொமரிதான். தயிர், பால், நெய் வித்து பொழப்பு நடத்துரவ. அப்பப்ப காட்டுவேளை தோட்ட வேளைக்கும் போவா.

அவ ஊரும் மலையன் ஊரும் குருக்கா அமைஞ்சது போல ஒரு மூனு கி.மீ தூரம் இருக்கும். ரெண்டு ஊருக்கும் நடுல இருந்து கிழக்க கீழக்கரையும், மேற்க ஏர்வாடியும் இருக்கு. முள்ளுவாடில இருந்து கீழக்கரை ரெண்டர கி.மீ, மாயகுளத்துல இருந்து அஞ்சி கி.மீ. மலையன் மாயங்குலத்திலும் அவள் முள்ளுவாடியிலும் வாழ்ந்து வந்தனர். இரு ஊர்லயும் முஸ்லிம், இந்து மக்கள் சேந்து வாழ்ந்தனர்.

 காட்டுவேள, தோட்டவேள செய்றதுக்கு இந்த ஊருக்காரங்க அங்கயும் அந்த ஊர்காரங்க இங்கயும் போவங்க. அந்தளவு அவங்களுக்கு ஒரு ஒத்தும இருந்துச்சு. அவள நினைச்சு பொதி சொமந்த கழுதயோட ஊருக்குள்ள நடந்து போய்ட்டு இருந்தான் மலையன்.

அதுவொரு முட்டுச்சந்து வலப்புறமா திரும்பிப் போனா மலையனோட தோட்டத்துக்கு போவும். இடப்புறம் வழி ஒன்னும் இல்ல. முட்டுச்சந்து பக்கமிருந்து மலையனுக்கு எதுக்கா வந்தான் ஒருத்தன்.
அடே மலையா நில்லுடாயென அவன் சொல்ல. கழுதைய நிப்பாட்டி கைகட்டி மருவாதயோட பணிந்து சொல்லுங்க அய்யா என்றான்.

அடேய் எப்படியிருக்க? நல்லா இருக்கேன் அய்யா. நீங்க எப்படி இருக்கீங்க? எனப் பணிவுடனும் கைகட்டியே கேட்க. ஆன் ஆன் நல்லா இருக்கேன். நாளைக்கு நம்ம முள்ளுவாடி தோட்டத்துல வேளை இருக்கு அதான் சொல்லிட்டு போக வந்தேன் டா. சரிங்க அய்யா நானும் என் பொஞ்சாதியும் வந்துர்ரோம் அய்யா.

செரி எனக்கு ஆள் கூப்டவேண்டி இருக்கு நான் வாரேன். கழுதயோட நடந்தவன் வீட்ட அடைஞ்சான். மழை விட்டது போல இருக்க. காற்று மட்டும் குளிர் கலந்த மண் வாசனையுடன் வீச,

" குழல் எடுத்து
நீ வாசித்த
இசை யுருவாக,

தழலும்
புகை வேட மணிந்து
ஒன் தலை மார்பை
சுத்துதே"

பரிமளம் வாசலில் அடுப்பூதிக் கொண்டிருந்தா, மகன் சிலேட்டுல எழுதிக்கிட்டு இருந்தான்.

மலையன் வருவதக் கண்டவள் யோ என்னயா இம்புட்டு சீக்கரமா வந்துட்ட. அதும் "கள்ளு குடிக்காம" வந்திருக்க எனச்சொல்லி ஆச்சரியத்துடன் தன் கன்னத்துல கை வைக்க.

பக்கத்தில நடந்து போனவன் "அவ விழிக்கு நேரெதிரா நின்னு" பெருமூச்சுடன் தாழ்ந்த குரலில்,

"கனிஞ்ச பழத்த
காக்காக்கு கொடுக்கவா
நான் பறிச்சுட்டு வந்தேன்,
நான் பருகத்தானே பறிச்சேன்"

என அவள் நாசிக்குள் தன் கனல் படச்சொல்ல,

"போக்கத்த கருவேலம் நீருள்ள இடமெல்லாம் தழைக்குமாம்"

என தன் வாய்க்குள்ள அவசொல்லி நகர. என்னடி சொன்ன,

"கருவேலம் செழிக்காம இருந்தா அங்க ஒன்னு சிலேட்டுல எழுத இருக்குமா"

உனக்கு மலடினு பேருதான் இருக்கும்.  எப்பவுமே இப்படித்தான் அவன் வேணும் என அவள் வேண்டாமென இருப்பாள்.

அன்றைக்கு இரவு அவளோட மகனை கட்டியணைத்து ஒறங்கிவிட்டாள். அருகில் படுத்திருந்தவன் வீதியில பாத்த தயிர்ல இருந்து நெய் கடயும் யோசனையில் இருந்தான். அவள் பெயர் என்னவா இருக்கும்? எந்த ஊருக்காரியா இருப்பா என மனசுலாம் கொதிச்சது. கொதிச்ச மனசு கொதிப்புடயே உறங்கிவிட்டது. கொதிச்ச மனசு என்னாகும் என்ன ஆனதென்று தெரிய தொடர்ந்து வாசியுங்கள்.

கோழி கூவும் அதிகால வேளை. கதிரவன் தன் பேரழகால் ஒளிவீச தொடங்கிய நேரம். கடலுக்கு சிலர் பேசிக்கொண்டே வண்ணமீன்களை வலைகொண்டு சிறைபிடிக்கச் சென்ற குளிர் நேரம். சுத்தி இருந்த தோட்டத்து மண்வாசம் மனச விலகேட்ட நேரம். பரிமளம் விழித்து எழுந்தாள். வாசத் தெளிச்சு, கோலம் போட்டு சமைச்சு முடிச்சு தூக்குச்சட்டிய தூக்கியோட இருந்த நேரத்துல எழுந்த மலையன்.

அடியே எங்க போறவா? ஏன் ஆத்தா கூப்டாலாக்கும் களத்து வேளைக்கு அதான் போறேன் எனசொல்லி வெடுக்குனு ஓடிட்டா. அப்படியே கோபத்துடன் வேட்டிய மடிச்சு சாப்பிடாம கெளம்பி தோட்டத்து வேளைக்கு போய்ட்டான்.

தோட்டத்து உள்ள நுழைவத பாத்த அம்பலார் "என்னடா மலையா ஒன் பொஞ்சாதி வரலயா" இல்ல அய்யா அவ அவங்கம்மா வீட்டு வர நேத்தே பொய்ட்டா. சரி போ பொய் வேலயப்பாரு. சரிங்க அய்யா என்று தாழ்ந்து சொல்லி உள்ளே நடந்து சென்றான்.
மலையனுக்கு மரம் ஏறத்தெரியும். அம்பலார் நாப்பது ஏக்கர் தோப்பு வச்சிருக்கார். பெரிய பண்ணயார். சாதி, மத பேதம் இல்லாத நல்லவர் "காமராஜர்" வழிநடப்பவரு.

அவரு தோப்புல "தேங்கா பறிக்க" பறிச்சத உரிக்க பல ஆள் கூப்ட்டு இருக்கார். அவரு ஒசந்தவர், எல்லாரும் சமம் என்று பிறர தாழ்த்தி தீட்டு என நினைக்காத நல்ல மனுசன். பார்க்க வேளைக்கு கூலி ஒடனே கொடுத்துடுவாரு. தேங்கா பறிக்க உரிக்க நூறு ரூவா, உரிக்க அம்பது ரூவா கொடுப்பாரு. அதனாலயே எல்லாரும் கூப்டாமக்கூட வந்துருவாங்க வேள இருக்குனு தெரிஞ்சா.

தோப்புக்கு நடுவுல தட்டிவைத்து கட்டிய சிறிய வீடு. அதன் இடப்பக்கம் ஒரு சின்னத் தொட்டி, வலப்பக்கம் சின்னதா கொஞ்சம் இடம் தேங்கா உரிக்க.

மலையன் மரம் ஏறி வியர்வ களைப்புடன் தண்ணீர் குடிக்க தோப்புக்குள்ள இருந்த தொட்டிக்கிட்ட போய் கைகால் கழுவிட்டு நடந்தான். நடந்தவன் அஞ்சு நிமிசம் ஒக்காந்துட்டு தேங்காய் உரிக்கப் போனான். அங்க ரொம்ப பேரு தேங்கா உரிச்சுட்டு இருந்தாங்க. இவன் உரிச்சுட்டு இருந்தப்படியே இடப்பக்கமாக திரும்ப, "பாம்பு போல் நெளிந்த கருநிற மேனி" இவனுள் வெஷத்த ஊத்தியதப் போல உணர்ந்தான்.

தீடிரென "அம்மா என்ற ஓர் கூச்சல் ஒலிக்க" அனைவரும் ஒருவர ஒருவர் திரும்பித்திரும்பி பார்த்தனர். பார்க்க மலையன் கண்ண மூடி வலியால கைய உதறிக்கொண்டே முகத்தைச் சுழிச்சான்.
பாம்போட வெஷம் அவன் கைகள பதம் பார்த்துவிட்டது. தேங்காய் உரிக்க கூர்மையான கம்பிதான் உபயோகிப்பாங்க அப்போ எல்லாம்.

சுற்றி இருந்த முப்பது பேரும் கூடிவிட்டனர். சத்தம்கேட்டு வந்த அம்பலார் "யேம்மா சரசு" அந்த தட்டில துணி இருக்கும் எடுத்துட்டு வா. அவளும் எடுத்து அங்க வந்தாள். பக்கத்துல வரவே அவளும் அவனும் ஒருவர ஒருவர் பார்க்க. அவளக் காணாததால விழிகள் பொழியுர கண்ணீராகவே அவளும் அவனும் எண்ணினர் படிஞ்ச இரத்தத்த.

மலையன் என உணர்ந்த "சரசு" வேகத்த கூட்டி ஓடியாந்தாள். யாரயும் எதிர்பாராமல் துணிய கிழிச்சு அவன் இடது கையில் இறுக்கி கட்டினாள். அவ இதயமே வலிச்சு உடல் கனல் வீசியது அவன ஏங்கி. படிஞ்ச இரத்தத்த பாத்து. அவள் கொடுத்த காற்றயே அவன் சுவாசிச்சு தன்னெல அடைஞ்சான்.

இருவரும் சொர்க்க லோகத்தில் "பூக்கள் செறிந்த தோட்டத்தின்" நடு அமைந்த அந்தபுரத்தில் "அனிச்சம்" பூவினாலான சாரட்டில் மதனன் ரதிதேவி உருக்கொண்டனர்.

மீண்டும் அடுத்தவாரம் இன்னும் சில சுவாரஸ்யமான நிகழ்வுகளுடனும் கற்பனைகளுடனும் சந்திப்போம்.

பூவிதழாக,
தமிழினியன்

கருத்துகள்

Popular Posts

குருதி குடிக்கும் ஓநாய்கள்

குருதி குடிக்கும் ஓநாய்கள் 1. அறிமுக நன்றி  அனைவருக்கும் வணக்கம். முதலில் எனது உடன் பிறவா மற்றும் நான் முகம் பாரா சகோதரர் கார்த்திக்கேயன் அவர்களுக்கும், அவர்களின் நண்பராக  இருக்கும் அனைவருக்கும் நன்றி. ஏனென்றால் எனது மனதில் தோன்றிய சிறு புள்ளியை வைத்து நான் கோலமோ கோடோ போட  நினைத்தபோது அது வெகுஜன மக்கள்  தெரிந்து கொள்ளவேண்டும் என்ற நினைப்புடனும், திறமை உள்ள ஒருவன் அதை வெளிப்படுத்த நினைக்கும்போது அதற்கு நம்மால் முடிந்ததை செய்யவேண்டும் என்ற மனம் அவரிடம் நிறையே உள்ளது. அதனால் அவருக்கு நன்றி கூறுகிறேன். நன்றி சகோ கார்த்திக். தமிழ் மக்கள் என்பவர் வேறு, இலங்கை தமிழ் மக்கள் வேறு என நினைப்போருக்கு ஒரு வேண்டுகோள், நாம் இங்கு நம் குடும்பம் இருக்கே என்ற நிம்மதியுடனும். களிப்புடனும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஆனால் இலங்கையில் இருந்து திரும்பிய பல தமிழ் சொந்தங்கள் தங்களுக்கென ஒரு ரத்த பந்தம், சொந்தம் இல்லாத உறவை அணைத்து ஒன்றாக வாழ்கின்றனர். ஆனாலும் அவர்களின் வாழ்வும் இதயமும் மனவேதனையுடனும் வலியுடனும் உள்ளது. அவர்களுக்கு என்று நம்மால் என்ன செய்யமுடியும் என்பதை நானும்...