தீ இதழ்
உன்னையே நினைத்து
இதழ்கள் ஏங்க,
ஏங்கிய நொடி
மறந்தேன்,
மறந்த நொடியில்
தொலைந்து போனேன்,
தொலைந்த நொடியைத்
தேடவே,
தேடிய பொழுதில் மனமும் கனமாக வாட,
வாடிய பொழுதில் இதயமும் வீழ்ந்தது,
வீழ்ந்த வேகத்தில் விழி
நோக்கவே,
நோக்கிய பொழுது
அவள் பிறந்த
பொழுது,
கண்கள் கசிய இதயம் காதலில் ஏங்க,
நான் வீழவா எழவா!!!
வீழ்ந்தால் என் வாழ்வு
சொர்க்கம்,
எழுந்தால் அவளுடன் வாழும்
நரகம்!!!
அன்புள்ளோருடன் நாம் வாழும் வாழ்க்கை நரகம் என்றாலும் ஆனந்தமே!!
#நரகத்தில்_நான்
பூவிதழாக,
தமிழினியன்

கருத்துகள்
கருத்துரையிடுக