எரியும் சுள்ளிகள்
அதிகாலை நேரம் மணி ஒரு ஏழு இருக்கும். விவேக்
நல்ல கனவுகளோடு மனநிம்மதியாக ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். மாடு
கத்தும் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது அதனுடன் சேர்ந்து வேகமாக யாரோ நடந்து வரும் காலடி சத்தமும் கேட்டுக்கொண்டே இருந்தது. எந்த
விதமான உணர்வுகளும் இல்லாமல் விவேக் தன் கனவுக்கன்னி சமந்தாவிற்கு முத்தங்கள் பரிமாறிக்கொண்டு இருந்தான். காலடி
சத்தம் அவனுடைய அறைக்குள் நுழைகிறது என்பது ஏதும் அறியாமல் நம்ம ஹீரோ சமந்தாவிற்கு உதடுகளை அசைத்து கொண்டே “இச்சு
இச்சு” என்று கொடுத்துக்கொண்டு இருந்தான். காலடி
சத்தமும் நின்று விட்டது.
அவன் “இச்சு
இச்சு” எனக்கொடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் உள்ளே நுழைந்த மனிதர் தன் கையில் இருந்த தண்ணீரை இச்சு இச்சு என்று சத்தத்தை கொடுத்த வாயிலேயே ஊற்றினார். கனவுகளோடு
முத்தம் கொடுத்துக் கொண்டிருந்த விவேக் அப்படியே திடுக்கிட்டு எழுந்து கண்விழித்து பார்க்கவே. சமந்தா
உருவில் ஒரு பெண் நிற்பதாக அவன் கண்களுக்கு புலப்பட. தான்
போத்தி இருந்த போர்வைகளை எடுத்து எறிந்து,
"கனவில் வந்த தேவதை நேரில் வந்து என் மோகத்திற்க்கு தன்னை கொடுப்பாள் என நான் நினைக்கவே இல்லையே"
என்ன ஒரு வாழ்க்கை எனசொல்லிக் கொண்டே அந்த பெண்ணை கட்டி அணைத்து முத்தமிட முயன்றான்.
அந்தப்பெண் டேய் என கத்திக்கொண்டு தன் கையில் இருந்த குவளையை வைத்து அவன் தலையில் ஒரு அடி அடித்தாள். டொக்
என்று சத்தம் கேட்கவே அம்மா என அலறினான் விவேக். ஆமாடா
அம்மா தான், அப்படி
என்னடா உருப்படாத பயலுக்கு கனவு ஒருகேடு என்றாள். சமந்தா
மயக்கத்தில் இருந்த விவேக் ஒரு கைய வைத்து தலையில் தடவைக்கொண்டும் ஒரு கையால் கண்களை துடைத்துக்கொண்டும் அம்மா என்னமா நீங்களா! எப்போமா வந்தீங்க. சமந்தா
எங்கம்மா. சமந்தாவா
அப்படியே கொமட்டுல குத்துனனா பாரு. போடா
பொய் மாடு ரொம்ப நேரமா கத்திட்டே இருக்கு என்னனு பாரு. விவேக்
வாய்க்குள்ளே சொல்லிக்கொண்டான், கொஞ்சமாவது
அம்மா மாதிரி நடந்துக்குதா பாரு.
வரவர சின்னம்மா மாதிரி ஆகிட்டாலே நம்ம அம்மா என சொல்லிக்கொண்டே சென்றான். அவங்க
அம்மா காதில் விழுந்தும் விழுகாத மாதிரி போறயா அப்பறம் சுடுதண்ணி தான் நாளைக்கு என்றாள்.
விவேக் முறைத்து பார்த்துக்கொண்டே நீ செஞ்சாலும் செய்வ அம்மாவா நீ பிசாசு என்றான் மறுபடியும். அப்படியே
சொல்லிவிட்டு சென்ற விவேக் தொழுவத்திற்குள் நுழைந்தான். மாட்டு
தொழுவம் அப்படியே ரொம்ப அசிங்கமா இருந்தது. அதை
பார்த்துவிட்டு தொடப்பம் எங்க வைத்தோம் என்று தேடிக்கொண்டு இருந்தான். வேகமாக
வந்த மகி இந்தா இதைத்தானே தேடிக்கொண்டு இருக்க என கொஞ்ச தூரத்தில் இருந்தே தூக்கி எறிந்தாள். அடியே
கையில சிக்குன்ன கொன்னு புடுவேன் என்று சொல்லிக்கொண்டே அவளை புடிக்க ஓடினான்.
தொப் என்று ஒரு சத்தம் அம்மா என்ற அழைப்புடன் கலந்து மிக ஒலியுடன் கேட்கவே வீட்டிற்க்குள் இருந்த அவன் சித்தி வெளியே ஓடிவந்தாள் மகி மகி எனச் சொல்லிக்கொண்டே. வெளியே
வந்து பார்த்தவள் மகி இல்லாது விவேக் கீழே விழுந்து கிடந்ததை கண்டாள். அய்ய
நீதாணக்கோம் நானோ மகினு நினைச்சேன். போ பொய் வேலைய ஒழுங்கா பாரு வர்ற நேரத்த பாரு என்றாள்.
உங்களுக்கு எல்லாம் ஒரு நாள் இருக்கு அப்போ வச்சுகிறேன் மொத்த குடும்பத்தையும் எனச்சொல்லி வேலையை ஆரம்பித்தான். அப்படி
ஒன்னும் பெரிய வேலை இல்லைங்க? அவனுக்கு கொடுக்கப்பட்டது ஒரே ஒரு வேலைதான். மாடு
மாடு மாடுதான் அவன் வாழ்க்கை இப்போ எல்லாமே. அவங்க
வீட்டுல ஒரு ஐந்து மாடு இருக்கு. அதற்கு
மரியாதை நிமித்தமாக இவன்தான் எஜமான்.
அவன் சித்தி வீடும் விவேக்
வீடும் பக்கத்து பக்கத்துல. இரண்டு வீட்டுக்கும் இடையில் தொழுவம். சித்தின்னா
அவங்க அப்பாக்கு ரெண்டு மனைவின்னு நினைக்காதீங்க மக்களே. இது
அவன் அம்மா கூட பிறந்த தங்கை. இருவரும்
ஒரே ஊரில் ஒரே தெருவில் அருகே அருகே வாழ்ந்து வந்தார்கள். நம்ம
விவேக் தான் அந்த குடும்பத்துலயே படிச்ச அரியர் உள்ள முதல் பட்டதாரி அவங்க அப்பா மற்றும் அம்மா வழியில். ஆனால்
அவனுக்கு வெளிப்படையாக மரியாதை ஒன்றும் கிடையாது. யார்
இவனை எப்போ பார்த்தாலும் என்ன மகனே மருமகனே மாப்ள அண்ணன் தம்பி எனக் கூப்பிடும் போது சேர்த்து “மாடு
நல்லா இருக்கா” எனச்சேர்த்து கேட்போர் அதிகம். இவனும்
சிரித்துக்கொண்டே ஆன் நல்லா இருக்கு மாடு எனச் சொந்த பந்தத்திற்க்கு தகுந்தவாறு பதில் சொல்லுவான் சிரித்துக்கொண்டு.
அவங்க அம்மா இப்போ எல்லாம் ரொம்பவே பிஸியா இருக்காங்க. காலையில்
எழுந்தவுடன் தன் புள்ளைங்களுக்கு ஜாம் அண்ட் ப்ரட் தான் சாப்பிடவே கொடுத்து பள்ளிக்கு அனுப்புவாங்க. ஆனால்
நம்ம விவேக்கிற்கு மட்டும் பழைய சோறு தான், நோ அதர் பூட்ஸ். அம்மா
இப்போ வீட்டுல எந்த வேலையும் பார்ப்பது இல்ல. மாடு
கத்துன சத்தம் கேட்ட உடனே எழுந்து வேலைய ஸ்டார்ட் பண்ணவேண்டியது தான் அவனோட ஒரே வேலையாக கொடுக்கப்பட்டு இருந்தது. வீட்டில்
கொஞ்சம் வசதியாகவும் செல்லமாகவும் வளர்ந்தவன் ஒரு ஆறு மாதங்களுக்கு முன்னாடி. ஏன்
என்னாச்சு இப்போ? தொடர்ந்து
படியுங்கள்.
வசதியான வீடு என்றாலே பசங்க இப்டி தானே இருப்பாங்க என்று கேட்கலாம். ஆனா
இவங்க வீட்டுல ரொம்பவே வேறுவிதம் அவனுக்கு மட்டும். ஏன்னா பையன் கெட்டுப் போய்ட்டானாம். அப்படி
என்ன கெட்டு போய்ட்டான் எனக்கேட்டால் பையன் படிப்பு முடிக்கவில்லையாம். அரியர்
இருக்குதாம். அதனால
அவனுக்கு கொடுக்கப்பட்ட வேலை. தினந்தோறும்
மாடு மேய்க்க போகணும், மாட்ட
குளிப்பாட்டனும், தண்ணிகாட்டணும்,
உச்சா மற்றும் கழிவை போகும்போது அள்ளணும், உணவு
கொடுக்கணும், கோமியம்
கேட்போருக்கு கோமியம் கொடுக்கணும், பால்
கறந்து விற்கணும். மாட்டுல
இருந்து வரும் எல்லாத்தையும் காசாக்கணும். அதுதான்
அவனோட வேலை.
அவனுக்கு இந்த வேலை வாங்கி கொடுத்தது வேற யாரும் இல்ல அவங்க அம்மா தான். அவன்
வீடும் அவன் சித்தி வீடும் ஒட்டி ஒட்டி தான் இருக்கும். மாடு
கத்துனா ஐந்து நிமிடத்தில் அவன் எந்திரிக்க வேண்டும்.இல்லையென்றால் அவ்ளோ தான் மேலே நடந்த மாதிரி தான் நடக்கும்.
ஆறு மாதங்களுக்கு முன்னாடி நம்ம பையன் விவேக் தான் ராஜா
மாதிரி வாழ்ந்தான் அந்த குடும்பத்துலயே. அப்போ
அவங்க அப்பா அவனுக்கு புடிச்சத எல்லாமே அவனைக்கேட்டு தான் செய்வார். அவனுக்கு
என்ன பைக் வேணும் என்பதில் இருந்து என்ன கலர் ஜட்டி? என்ன பிராண்ட் வேணும்? என்பது வரை. அவங்க
அப்பா ரொம்ப வருடம் முன்பு சிங்கப்பூர் சென்றவர் சாதாரண ஹோட்டல் சப்ளையர் வேலைக்கு. இப்போ
அவர் நம்பர் ஒன் ஹோட்டல் ஒன்றோட மேனேஜர். உழைப்புனா
என்ன? கஷ்டம்னா
என்னனு? தெரிஞ்ச
மனிதர். அப்படியே ரொம்ப நல்லவரும் கூட. தான்
மக்களுக்கு புடித்தத செய்வதற்கு ஏங்குபவர். இவனுக்கு
ரொம்ப ரொம்ப செல்லம் கொடுத்து வேண்டியதெல்லாம் வாங்கி கொடுத்து வளர்த்தார்.
நான் BBA தான்
படிப்பேன் என்று சொன்னதன் காரணமாக மிகப்பெரிய கல்வி நிறுவனத்தில், அவனது
சிறிய ஆசையை கனவை மிகப்பெரியதாக நினைத்து செய்தவர். ஆனால்
அவன் படித்து முடித்து வெளியே வரும்போது அவனுக்கு எட்டு அரியர். எதையுமே
வீட்டில் சொல்லவே இல்லை விவேக். இரண்டு
மூன்று மாதங்களாக பையன் என்ஜாய் பண்ணட்டுமே என விட்டுவிட்டார். ஒருநாள்
அவனிடம் கேட்டார் அடுத்து என்ன பண்ணப்போற விவேக். நான்
என்ன பண்ணனும் வேலைக்கு போறயா இல்ல இங்க வெளிநாடு வாரியா என்றார்.
விவேக் அவன் அப்பாவிடம், நான்
கொஞ்சநாள் என்ஜாய் பண்ணனும் அப்பா. இப்போதான்
படிச்சு முடித்து இருக்கேன் என்றான். சரி
விவேக் உன்னுடைய
விருப்பம் நான் வெய்ட் பண்றேன் என்றார். இப்படியே
அவன் படித்து முடித்து ஆறு மாதங்கள் தாண்டியது. இரண்டு
நாட்களுக்கு முன்பு அவனுடைய அப்பா
வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்தார். அவருடைய
நல்லநேரமா இல்லை விவேக்கின் கெட்ட நேரமா தெரியல. அவங்க
அப்பா ஒரு கல்யாணத்திற்கு சென்றார் அங்கே அவர் எதேர்ச்சியாக அவர் நண்பரை சந்திக்க. அந்த
கல்யாண வீட்டில் அவர் அனைத்தையும் சொல்லிவிட. அன்றிலிருந்து
விவேக்கிற்கு கொடுக்கப்பட்ட வேலை தான், தான்
ஒரு மாடு போல் உழைக்க வேண்டும் உழைப்பின் அருமையை உணர வேண்டும்.
அவன் அப்பா எப்பொழுதும் உழைப்பு தான் ஒருவனை உயர்த்தும் பேராயுதம் என்பதை உணர்ந்தவர். இருந்தும்
தானே தன் மகனை கெடுத்து விட்டோமோ என நினைத்தார். அதற்காகவே அவனுக்கு இப்படி ஒரு பணியை தன் மனைவியின் சொல்கேட்டு கொடுத்தார். அப்பாவின்
பேச்சையும் அம்மாவின் பேச்சையும் ஒரு நாளும் மீறாத அன்பன் தான் விவேக். நமக்கான
வழி ஒன்று வாழ்க்கையில் உண்டு என்பதை உணர்ந்து ஓடிக்கொண்டு இருந்தான் மாடாக மாடு மேய்த்து கொண்டே. மாடுகளுடன்
பழகி உழைத்து களைத்த வேலை போக அவன் மற்ற வேலையாக புத்தகம் படிப்பது அறிவை வளர்ப்பது என ஓடிக்கொண்டே இருந்தான். இவை
போக பலநேரங்களில் நண்பர்களுடன் ஊர் சுற்றுவது, வீட்டுக்கு
தெரியாமல் கல்லூரி வாசலில் நிற்பது என்று சென்று கொண்டிருந்து. நாட்கள்
கடந்து செல்லவே ஐந்து மாடுகளாக இருந்த வீட்டில் இப்பொழுது பன்னிரெண்டு மாடுகளாக எண்ணிக்கை கூடியது.
இப்படியே தன் வளர்ச்சி தெரியாமல் ஓடிக்கொண்டு இருந்த விவேக்கின் வாழ்க்கையில் மாற்றங்கள் இதுதான் என உணராதவன் அவன். ஒருநாள்
நண்பர்களுடன் கல்லூரி வாசலில் நண்பர்கள் தம் அடித்து கொண்டிருக்க இவன் மட்டும் கடலைமிட்டாய் வாங்கி சாப்பிட்டு கொண்டிருந்தான்.
"மேகங்கள் சுருங்கின
மனிதன் தொடும் அளவிற்கு,
காகங்கள் குறைத்தன
மனிதன் போலே வீதியில் நடந்தன,
நாய்கள் கரைந்தன,
மாடுகள் குயில்பாட்டு பாடின,
குயில்கள் மே என மாடு போல கத்தின,
வீதிகளில் சென்று கொண்டிருந்த வாகனகங்கள் எல்லாம்
பறவை போலே பறக்க ஆரம்பித்தன,
வீதியில் நின்று கொண்டிருந்த மக்கள் எல்லாரும்
எலும்பு கூடாக நடனம் ஆடினர்,
வான் பொய்க்கும் மழை மலராக பொழிந்தன"
என்னடா இது அதிசயம் நம் கண்களுக்கு மட்டும் இப்படி தோன்றுகிறதே என சுற்றும் முற்றும் பார்த்தான். அவளையும்
அவனையும் தவிர அவன் கண்ட காட்சிகள் அனைத்தும் மாறாமல் அப்படியே இருந்தது. அவள்
அவள் அவள் முகம் மட்டுமே இவனுக்கு ஒளியாக தெரிந்தது வீசியது. அப்படியே
பிரமித்துப்போய் நின்றான் சிறுநிமிடங்கள். அவன்
கண்ட காட்சிகள் தன் கண்களை விட்டு மறையத் தொடங்கிய நேரத்தில் அவளும் மறைந்து சென்றுவிட்டாள். ஆனால்
அவள் முகம் மட்டும் இவன் உயிரிலும் கலந்து, கண்களில்
பதிந்து, இதயத்தில்
ஒளியாக எரிந்தது. அங்கும்
இங்கும் அலைந்தான், ஓடினான்,
தாவினான் அருகில் இருந்த பார்க்கை, ஓடினான்
அவளைத்தேடி. அவளை
கண்டுபிடிக்க முடியவில்லை. காட்டாற்று
வெள்ளத்தில் போகும் காகிதம் போல் சென்றுவிட்டாள்.
அவனை அருகில் காணாது அவன் சென்றதை பார்த்த நண்பன் பின் ஓடினான் வண்டியை எடுத்துக்கொண்டு. அருகில்
சென்று நண்பன் பார்த்துக்கொண்டு இருக்க. விவேக்
அவனை கண்டுகொள்ளாது போய்ட்டாளே போய்ட்டாளே, எங்க
போனாளோ தெரியலையே என்று முடியை கலைத்துக்கொண்டும் பல்லை கடித்துக்கொண்டும் நின்று கொண்டு இருந்தான். இதை
எல்லாம் கண்ட நண்பன் டேய் விவேக் என்னடா ஆச்சு? என சத்தமாக அவனை கூப்பிட. மச்சான்
நீ எப்படா வந்த என்றான். ஆன்
நீ எதோ புலம்பிட்டு இருந்தயே அப்பவே வந்துட்டேன். சரி
மச்சான் யாரு அந்த பொண்ணு என்றான் நண்பன். தெரியல
மச்சான் அங்க காலேஜ் முன்னாடி பார்த்தேன். தேடி
வரும்போது அவளை காணவில்லை. ஐயோ
பரவா இல்லை மச்சான் இந்த காலேஜ் தானே நாம வச்சதுதான் சட்டம் வா பார்த்துக்கலாம் என்று கூட்டிப் போனான் நண்பன்.
ஆனால் அன்றிலிருந்து இருபந்தைந்து நாட்கள் கல்லூரி விடுமுறை என அவர்கள் மனம் அறிந்தது இல்லை என்றே சொல்லவேண்டும். யாருக்கு
பாஸ் நியாபகம் இருக்கும்.
விடுப்பு என்பது துக்கமான தேர்வு நிகழ்வுகளை
மறக்கவே. நாம படிக்கும்போது தேர்வுகள் என்பதே
நமக்கு துக்கமான விஷயம் தானே. ஆனால்
அந்த துக்கமான நிகழ்வு, நமக்கு
பிடித்த ஒன்றை நோக்கி இருந்தால் மனம் என்ன பாடுபடும். தூக்கமில்லாமல்
தன்னையே தொலைத்தான் அவளிடம். மாடுகளை
அவளாக நினைத்து முத்தமிட்டான். பாட்டு
பாடினான் ஆட்டம் ஆடினான், கனவுகளோடு
வாழ்ந்தான், கற்பனையில் மிதந்தான். அவனின்
வாழ்க்கையில் அவள் வந்து விட்டாள் என்பதை அவன் மனம் ஏற்றுக்கொண்டு மகிழ்ந்தான்.
நம் மனம் ஏற்றுக்கொள்ளும் காதலே எதையும் தாங்கி வெற்றியை அடையும். ஏனென்றால்
மனம் சலனப்படும் சிறு குழந்தை, மோகம்
கொள்ளும் முயல். இதுதான்
காதல் என்பதை நீ உணர்ந்தால் அதைநோக்கி பயணப்படு வெற்றி அடையும். இப்படியே
அவன் மகிழ்ந்தான் அவளை காண்போம் என்ற தன்னம்பிக்கையில். காலங்கள்
கடந்தன. நாளை
எப்படியும் அவளை கண்டுகொள்ளலாம் என்ற மகிழ்ச்சியில் ஆடிப்பாடிய அவன் மாடுகளை முத்தமிட அருகில்செல்ல எதிர்பாராத விதமாக மாடு முட்டி கீழே விழுந்தான். அதைப்பார்த்த
சித்தியும் அம்மாவும் அவனை திட்டி தீர்த்தார்கள். அவ்வளவாக
காயம் ஏதும் இல்லை. நம்மவருக்கு
தானே மூன்று வருடமாக பழகிப் போய்விட்டதே. வலியுடனே
தூங்க சென்றான். தூக்கம்
வராமல் அவள் நினைவுகளுடனே இருந்தான். வலது
இடது பக்கம் புரண்டு படுத்தான் குப்புற படுத்தான் நெடுநேரமாக தூக்கம் வரவே இல்லை.
பெண் மனமும் குணமும் அழகும் நம்மை சிதைக்கும் கருவியே. அது
சிலருக்கு மட்டுமே சிலை வடிக்கும் உளியாக இருக்கும் சிலரை சிதைக்கும். அப்படியே
அவள் நினைவுகளுடன் இருந்தவன் ஒருவழியாக அயர்ந்து தூங்கிவிட்டான் தன்னை அறியாமலே. ஆனாலும்
அவன் மனம் தூங்கவில்லை. அயர்ந்து
தூங்கிக்கொண்டு இருக்க மாடு கத்தும் சத்தம் கேட்டும் எழும்பவில்லை. அம்மா
வந்து தண்ணீர் ஊற்றவே எழும்பி காலை கடன்களை முடித்து பால் அனைத்தையும் விற்றுவிட்டு. வண்டியை
எடுத்துக்கொண்டு சென்றான்.
எந்தவொரு காரணமாக இருந்தாலும் அதை சிதறாமல் செய்யவேண்டும் என்ற எண்ணம் கொண்டவன் விவேக். சிதறிய
ஒன்று என்றால் அது அவன் வைத்த அரியர் தான். அதையும்
இந்த மூன்று வருடங்களில் எடுத்துவிட்டான். நேற்றைக்கே
நண்பர்கள் அனைவரிடமும் பேசிவிட்டான் தொலைபேசியில். அவர்களும்
அங்கே வந்து காத்திருந்தனர் காலை 8.30 யில்
இருந்து. வழக்கம்
போலே விவேக் தனது பணியை முடித்து வர தாமதம் ஆகவே நண்பர்கள் அனைவரும் அவன் வந்தவுடனே, ஏன்டா
மாடு கொஞ்சம் கூட சின்சியாரிட்டி இல்லாம மாடு மாதிரி அசைபோட்டு கொண்டு வரியே என்றான்.
மச்சான் “பொறுமை
கடலினும் பெரிது” என்றான் விவேக். ஆன்
நீ இப்படி பொறுமையா இரு நாங்க போறோம் என்றான் ஒருவன். என்ன
மச்சான் இப்படியெல்லாம் கோபப்படகூடாது. நம்ம
பசங்கள பத்தி தான் தெரியுமே கேப் கிடைக்கும் போதெல்லாம் ஒட்டகமே வெட்டுவானுங்கோ. நைசா
ஒருத்தன் சரி மச்சான் ரொம்ப பசிக்குது அண்ணன் கடையில கேசரி, டீ,
வடை ஆர்டர் பண்ணா ரொம்ப நல்லா இருக்கும் என்று வயிறை பிடித்து தடவினான்.
ஓசில ஆள் கிடைச்சா
காலேஜ் எதிர்க்க இருக்கும் அண்ணன் கடை தான் இவனுகளுக்கு எல்லாமே. அங்க
எது நாம பருகினாலும் சாப்பிட்டாலும் ஐயர் வீட்டு மாமி ஓசில முத்தம் கொடுத்த மாதிரி அழ்கா இருக்கும். அத நம்ம பசங்க விடுவானுங்களா. நல்லா
வயிறு முட்ட தின்னுட்டு, மணியை
நோக்கவே காலை 9 ஆனது.
எல்லாரும் தின்ன தீனியில கண்ணு எல்லாம் சொக்கிப்போனது காலையிலே. இருந்தும்
மங்கிய கண்களுடனே காலேஜ் வாசலை நோக்கிய வண்ணமே இருந்தனர். அவள்
வருவாளா இல்லை காணாமல் போய்விட்டாளா, இல்லை
நமக்கு முன்னமே வந்து காலேஜ் உள்ளே சென்றுவிட்டாளோ என அவன் மனம் கலங்கியது. கண்களில்
எண்ணெய்விட்டு நோக்கியது போலே நோக்கிக்கொண்டு இருந்தான் விவேக். நண்பர்களும்
இவளா அவளா என அவனை வெறுப்பேத்திக் கொண்டிருந்தனர். அவன்
அதுஏதும் கண்டுகொள்ளாமல் பார்த்துக்கொண்டே இருந்தான். வேகமாக
ஒரு ஆட்டோ வந்து நின்றது காலேஜ் வாசலில் அதன் பின்புறமே ஒரு மாருதி ஸ்விப்ட் கார் ஒன்று வந்து நின்றது. அதையே நோக்கி கொண்டு இருந்தான் விவேக், யார்
இறங்குகிறார்கள் இறங்க போகிறார்கள் என்று.
ஆட்டோவும்
காரும் முன்பின்னாக நின்று கொண்டிருந்த வேளையில் ஒரு பேருந்து ஒன்று கிராஸ் செய்துபோக. உற்று
நோக்கி கொண்டிருந்த இவன் கண்கள் ஒரு நொடி மூடித்திறக்கவே. இந்த
மூன்று வண்டிகள் நகரத்
தொடங்க, இடதுபக்கமாக செல்ல சிறுவழி இருக்கவே அதனூடே புகுந்து சென்றுவிட்டாள் அவள் தன் ஆக்டிவாவில். நெடுநேரமாக
காத்துகொண்டு இருந்தோர் நெஞ்சிலும் கண்களிலும் ஏமாற்றமே தென்பட்டது. என்ன
மச்சான் இவ்ளோ நேரமாச்சு எந்த ரியாக்சன் இல்லாம இருக்க. இல்ல
மச்சான் அவளை காணோம், போய்ட்டாளா
இல்லை வர வில்லையா எனத்தெரியவில்லை. சரி
மச்சான் விடு லஞ்ச் பிரேக் இருக்கு அப்பறம் காலேஜ் முடிஞ்சு வெளிய தானே வரணும் கண்டுபுடிக்கலாம். சா சா போ மச்சான் மிஸ் பண்ணிட்டோமேடா என தனக்குள்ளே சொல்லிக்கொண்டான் விவேக். இருந்தும்
நம்பிக்கை தளராமல் இருந்தான். அவனுக்கு
என்னவென்றால் மாலை 5 மணிக்குள்
வீட்டுக்கு செல்லவேண்டும். இல்லையென்றால்
திட்டுவிழும் என அவன் அறிவான்.
மதிய உணவு இடைவேளையில் தேடித்தேடி பார்த்தனர். அவன்
கண்களுக்கு அவள் முகத்தை விஜயம் கொடுக்கவில்லை. வறண்ட
பூக்களைப் போலே அவன் உள்ளம் வறண்டாலும் இதழில் புன்னகை உடனே இருந்தான் விவேக். மதிய
உணவும் அண்ணன் கடையிலே ஆனது. அவர்களின்
பயணம் சாயங்காலம் நோக்கி நகர்ந்தது. இடையில்
ஒரு மூன்று மணி இருக்கும், நண்பர்கள்
மச்சான் இப்போ டீ வாங்க வாட்ச்மேன் வருவார் அவரிடம் வேண்டுமானால் விசாரிக்கலாமா. யாருனு
விசாரிக்க மச்சி? அவனுக்கு அவள் முகம் தவற வேற ஒன்றும் தெரியாதே. ஆமா
அதுவேற இருக்கே, மறந்துட்டேன்
மச்சான் என்றான் சிரித்துக்கொண்டே. எப்படியும்
அவளைக்கண்டு புடிக்கவேண்டும் என நண்பர்கள் மற்றும் விவேக் நாளு பேரும் சேர்ந்து ஒரு ப்ளான் போட்டனர்.
காலேஜுக்கும் அண்ணன் கடைக்கும் இடையே சாலை இருப்பதால் நம்மால அவள் யாருன்னு கண்டுபிடிக்க முடியாது. அதனால
காலேஜ்க்கு வெளியே இருக்கற செக்யூரிட்டி ரூம் கிட்ட போய்
நீ நில்லு விவேக். நான்
செக்யூரிட்டி அண்ணன் முத்தையா கிட்ட பேசிட்டேன். ரொம்ப
பேர் நிக்க முடியாது. நாங்க
ரைட் சைடுல ரெண்டு பேர் லெஃப்ட் சைடுல ரெண்டு பேர் நிக்கிறோம். நம்ம
விஷ்ணு பைக்ல ரெடியா நிப்பான் நீ அந்த பொண்ண பார்த்த
உடனே கேட்ல இருக்கும் விஷ்ணுக்கு சிக்னல் கொடு அவன் ரெடி ஆகினதும் நீங்க அவளை தொடர்ந்து போங்க. நாங்க
உங்கள தொடர்ந்து வர்றோம் என்றான் முனிஷ். மச்சான்செம
மச்சான் செம என்று அனைவரும் சொல்ல. காலேஜ்
விடும் நேரமானதால் விவேக் செக்யூரிட்டி ரூம் அருகில் சென்று வாசலில் நின்றான் சிறிது நேரம்.
காலேஜ் பெல்லும் அடித்தது, ஒவ்வொருவராக
வெளியே வந்து கொண்டிருந்தனர். கண்
மாறாமல் செக்யூரிட்டி ரூம் வாசலில் நின்று வருவோரை ஒவ்வொருவராக பார்த்துக்கொண்டு இருந்தான் விவேக். அவள்
பைக் பார்கிங்கில் இருந்து பைக் எடுத்துவர கொஞ்சம் தாமதமாகிவிட்டது. ஏனென்றால்
பார்க்கிங்கில் வண்டிகள் அங்கங்கே குறுக்கும் நெடுக்குமா நிறுத்தப்பட்டு இருந்தது. அவள்
வெளியே வரும் வேளையில் மேகங்கள் கருநிறத் தோல் போர்த்திருந்தன. மழை
பொழியும் நிலைபோல் இருந்தது. அவள்
வண்டியை எடுத்து
வெளியே வந்து கொண்டிருந்தாள். தன்
பட்டுப்போன்ற கைகள் மேலே சிறு பூ விழுந்தது போலே இருந்தது.
அதுயேதும் அவள் பிரமிப்பாக நினைக்காமல் வண்டியில் சென்றால். செக்யூரிட்டி
ரூமை நெருங்கும்போது அதிகமான பூக்கள் மழையாக பொழிவதை உணர்ந்தாள். மனம்
எதோ நினைக்கத் தொடங்கிய வேளையில்
" ஏன்மா கயல் மழை கொஞ்சம் அதிகமா பெய்யுதே" வந்து
உட்கார்ந்து இருந்து போமா என்றார் செக்யூரிட்டி முத்தையா. என்னது
மழை பெய்யுதா என இருவிதமான குரல்கள் ஒலித்தன. ஆம்
அவனுக்கும் அவளுக்கும் மழை பொழிவது ஏதும் தெரியவே இல்லை. அவர்கள்
கண்களுக்கு பூக்கள் விழுவது போலவே தோன்றின.
அவளும் அவனைப் பார்த்தாள் அவனும் அவளைப் பார்த்தான். இருவரின்
கண்களும் ஒருசேர எதிரெதிரே பயணித்தன. அவள்
அவ னைப் பார்த்தும் அவன் அவளைப் பார்த்தும் சிரித்தார்கள். முத்தையா
இதை அனைத்தும் பார்த்துக்கொண்டு இருந்தார். ஆனால்
அவருக்கு இவன் வந்த காரியம் இவளுக்காக என்பது மட்டும் தெரியாது. ஆனால்
ஒரு பொண்ண பார்க்கத்தான் வந்து இருக்கிறான் எனத்தெரியும். மழைவிட்டது
போலத்தெரிய முத்தையா அவளைப்பார்த்து யம்மா கயல் மழை விட்டுவிட்டது. மெதுவாக
பத்திரமா போமா அப்பாவை கேட்டதாச் சொல். சரி
எனச்சொல்லி அவளும் புறப்பட்ட்டாள். இனி
நாம் அவளை பின்தொடரத் தேவை இல்லை இவரிடமே கேட்டுவிடலாம் என எண்ணினான். கயல்
கிளம்பிவிடவே எதிர்புறமாக நண்பர்களும் வந்தார்கள். வேகமாக
வந்த விஷ்ணு மச்சான் என்னாச்சு பார்த்தியா. அதுயேதும்
காதில் விழாமல் அவள் சென்ற பாதையை அவன் பார்த்துக்கொண்டு இருந்தான்.
என்ன மச்சான் உன்னைத்தான் கேட்டேன் எனச்சொல்ல, சுயநினைவை
அடைந்தான் விவேக். மச்சான்
பார்த்தேன் பார்த்தேன் மச்சான் என படபடத்து தலையசைத்து சிர்த்துக்கொண்டே சொன்னான் விவேக். அப்பறம்
ஏன்டா கூப்பிடல என்றான் முனிஷ், மச்சான்
முத்தையா அண்ணனுக்கு அவளை பத்தி தெரியும் போல. அதான்
கூப்பிடல. என்னது
முத்தையா அண்ணனுக்கு தெரியுமா. எப்படிடா
சொல்ற. பூ மழை பேஞ்சதா அப்போ அவ இங்க தான் ஒரு இருவது நிமிடம் இருந்தா. முத்தையா
அண்ணன் தான் அவளை கயல் என்று விழித்து இங்கே இருந்துவிட்டு போகச்சொன்னார். என்னது
பூ மழையை! என்னடா
சொல்ற என்றான் விஷ்ணு. அதற்கு
முனிஷ் டேய் இந்த காதல் வந்தாலே எல்லாமே இப்புடி தான் கிறுக்கு புடிக்கும். நீ அப்பறம் சொல்லு என்றான் முனிஷ். அப்போ
முத்தையா அண்ணன் கயல் மழை பெய்யுது மா உள்ளே வந்து இருந்துட்டு போ என்றார். அவளும்
உள்ளே வந்து இருந்துவிட்டு நீங்க வரும்போது எதிரே போனாலே அவள் தான் என்றான் விவேக். ஆனால்
மழை பொழிந்ததை மற்றோர் உணர்ந்தனரே தவிர அவளுக்கும் அவனுக்கும் அது பூமழை போன்று தான் தோன்றியது.
விவேக் சொல்லி முடித்ததும் நண்பர்கள் அனைவரும் முத்தையாவை நெருங்கினர். அவர்
அருகில் சென்றதும் முனிஷ், முத்தையா
அண்ணன் நல்லா இருக்கீங்களா. நல்லா
இருக்கேன் பா முனிஷ் நீ எப்படி இருக்க? நான்
இன்னும் அரியர் எழுதவருவது உங்களுக்கு தெரியுமே! அப்பறம்
என்ன அண்ணன் என சிரித்துக்கொண்டே பேசினான். நலம்
விசாரித்து முடித்து, முத்தையா
அண்ணன் அந்த பொண்ணு கயல் யார் அண்ணன்? எந்த
ஏரியா என்று கேட்டான் முனிஷ். அடப்பாவிங்களா
கடைசியில நீங்க பார்க்க வந்த பொண்ணு அந்த பொண்ணா என வியந்து கேட்டார். ஆமா
அண்ணன் என விவேக் மெல்லிய குரலில்
சொல்ல. தம்பி என்ன பத்தி தான் உனக்கு நல்லா தெரியுமே டீடைல் வேணும்னா முக்குக்கடை பார் எட்டு மணி என்றான் முத்தையா முனிஸிடம். சரி
அண்ணன் எட்டு மணி முக்குக்கடை மறந்துறாதீங்க என்றான் முனிஷ். நான்லாம்
சரக்குன்னா சாமி ரூம்ல வச்சே அடிப்பேன் எனசொல்லி விடைபெற்றார் முத்தையா
மச்சான் எட்டு மணிவரை நான் எப்படிடா காத்து இருப்பேன். இருபத்தைந்து
நாளா காத்திருந்த உனக்கு ஒரு நான்கு மணிநேரம் காக்க முடியாதா எனச்சொல்லி விவேக்கை கடிக்கப்போனான் விஷ்ணு. மச்சான்
காதல் மன்னன் உனக்கு தெரியாத ஒன்றும் இல்ல. சரி
விடு ஒரு நான்கு மணிநேரம் தானே. நான்கு
மணிநேரத்தில் அவன் தனது கடமைகளை செய்து முடித்து முக்குக்கடை பார்க்கு எல்லோருக்கும் முன்னமே வந்து காத்திருந்தான். சரியாக
ஏழே முக்கால் மணி இருக்கும் மற்ற நண்பர்களும் வர, அவர்கள்
வந்து ஐந்து நிமிடம் கழித்து முத்தையா வந்தார். முத்தையா
வந்த உடனே முனிஷ் மட்டும் உள்ளே சென்று அவருக்கு வேண்டிய அனைத்தும் செய்து கொடுத்து, எக்ஸ்ட்ரா
ஒரு ஐந்நூறு ரூபாயும் கொடுத்து முகவரி மற்றும் இதர டீடைல்ஸ் வாங்கி வந்தான். அவனுடைய
வருகைக்காகவே காத்திருப்பவன் போலே இருந்தான் விவேக்.முனிஷ் வெளியே வந்து மச்சான் நம்ம விஷ்ணு வீட்டுக்கு பின்னாடி தெருல தான் மச்சான் இருக்கா கயல்.
அவளோட அப்பா ஒரு தாசில்தார், அம்மா
இதே காலேஜ்ல ஆசிரியை. மச்சான்
என்ன மச்சான் சொல்ற நம்ம காலேஜ் லெக்சரர் பொண்ணா. யாருடா
அந்த லெக்சரர், வேற
யாரும் இல்லை நம்ம நம்ம மேக்ஸ் எடுத்தாங்களே அவங்க பொண்ணு தான். யாரு
நமக்கு மூன்றாவது செமஸ்டர்ல மேக்ஸ் எடுத்தாங்களே மீரா மேடம் அவங்க பொண்ணா என்றான் விஷ்ணு. ஆமாடா
அவங்களே தான். அய்யோ
நம்மள எல்லாம் அவங்களுக்கு ரொம்ப புடிக்காதே. ஆனால்
உனக்கு என்ன மச்சான் கவலை உனக்குத்தான், உன்னைத்தான்
அவங்களுக்கு ரொம்ப புடிக்குமே என்றான் முனிஷ். அப்படியே
பேசிக்கொண்டிருக்க மணி ஒன்பது ஆகியது. விஷ்ணுவிற்கு
மட்டும் வியப்பு இவ்ளோ அழகான பொண்ணு நம்ம கண்ணில் இவ்ளோ நாளாகப் படவில்லையே என்று. இருந்தும்
நம் நண்பன் நல்லா இருந்
தா சரியென்று நினைத்து கொண்டான்.
மறுநாளில் இருந்து விஷ்ணுவின் வீடு தான் காலை அனைவரும் சந்திக்கும் இடம். அங்கிருந்து
அவளை விரட்டிக்கொண்டு கல்லூரி. சாயங்காலம்
ஒன்று கூடுவர் காலேஜ்ல இருந்து விஷ்ணு வீடுவர வந்து அவளை ட்ராப் செய்துவிட்டு செல்வார்கள். அதன்பின்பு
விவேக்கிற்கு வேலை இருப்பதால் அவன் சென்று அதை முடித்துவிட்டு மீண்டும் விஷ்ணு வீட்டில் கூடுவர் அவளை பார்க்க முடியும் என்று.
இப்படியே ஒரு ஆறு மாதங்கள் சென்றது அவளை பின் தொடர்வது பார்ப்பது சிரிப்பது என்று ஆனால் ஒருநாள் கூட அவளும் இவனும் பேசியது இல்லை. ஒரு
நாள் வீதியில் பின்தொடர்ந்து போகும்போது திடிரென்று அவள் தடுமாறி கீழே விழுந்து
விட்டாள். அதுவொரு மும்முனை வளைவு, குறுகியதும்
கூட. யார்
எங்கே இருந்து வருவார் என்று தெரியாது இவள் ஒலியெழுப்பியே சென்று வலது பக்கமாக திரும்ப முற்பட்டாள். வலது
பக்கமாக இருந்து வந்த ஒரு வாலிபர் அவள் வண்டியிலே லேசாக இடிக்க அவள் தடுமாறி கீழே விழுந்தாள். இதைப்பார்த்த
விவேக் நண்பர்கள் ஏதும் செய்யாமல் அமைதியாக சிரித்தனர். விவேக்
மட்டும் அவளை தூக்கிவிட ஓடினான். அவளை
தூக்கிவிட அவள் அவனைப்பார்த்து நன்றி என்றாள் சிரிக்காமல் சிடுசிடுப்புடன். அதான்
அவன் நண்பர்கள் சிரித்தனரே அப்பறம் எப்படி அவள் சிரிப்பாள்.
டேய் எவ்ளோ நாள்டா இப்படியே பின்தொடர? போய்
சொல்றயா இல்ல நான் போய் நான் லவ் பண்றேன் சொல்லிருவேன் என்றான் விஷ்ணு. அய்யா
ராசா நீ சொன்னாலும் சொல்லுவ வாய மூடிட்டு இருயா என்றான் முனிஷ் அவனைப் பார்த்து. மச்சான்
நீ இப்டியே இருக்காத போய் சொல்லு பார்த்துக்கலாம். மறுநாள்
காலையில் அவளிடம் சொல்லவேண்டும் என அவன் தனக்குள்ளே முடிவு செய்தான். முனிஷ்யை
மட்டும் அழைத்துக்கொண்டு போனான். எப்போதும்
அவள் காலேஜ் செல்லும்முன் அருகிலிருக்கும் பிள்ளையார் கோவிலில் தரிசித்து செல்வது வழக்கம். அங்கேயே
அவர்களும் காத்திருந்தார்கள் அவளும் தரிசித்து வெளியேவர விவேக் மட்டும் அவளைப் பின்தொடர்ந்தான். பின்னேசென்று
அவளுக்கு முன்புறமாக வந்து அவள் வண்டியின் முன்னால் நின்றான். ஏன்டா
நடந்து வரும்போது பண்ணக்கூடாதா எனக்கேட்கும் உள்ளங்களுக்கு அவன் யோசித்துக்கொண்டு இருந்தான் இப்போ பண்ணலாமா வேண்டாமா என்று. முனிஷ்
தான் அவனை அடித்து பத்திவிட்டான்.
அவளும் நின்று அவனை நோக்கி புருவத்தை உயர்த்தி க்யாரே என்றாள். அவன்
தனது வலது கரத்தின் கட்டைவிரல் பெருவிரல் தொடவும்,மற்ற நான்கு விரல்களும் அவள் நெற்றியை நோக்கும் படி புன்னகையுடன் அசைத்து நீட்டி, உன்னோடு
நான் பேசவேண்டும். என்னுடன்
பேச என்ன? யார்
நீ? உனக்கு
இன்னா வோணும் என்றாள் ? இடது
கரத்தால் தனது முடியை அழகுபடுத்திக்கொண்டே நீ நீ தான் வேண்டும்! உன்
இதழ்கள் பருக தருவாயா? என்றான் விவேக். அவள்
வண்டியை விட்டு இறங்கினாள். என்ன
பண்ற நீ? யார்
நீ? எனப்
புருவங்கள் உயர்த்தி அவள் கேட்டாள். நான்
விவேக், எனக்கு
புடிச்சிருக்கு உன்ன என்றான். நான்கு
தடவ பார்த்து சிரிச்சு
இருக்கேன். அதுக்கு என்மேல உனக்கு காதலா? இது
காதலா மோகமானு? இல்ல ரூம் போடவானு எனக்கு எப்படி தெரியும். அவன்
அமைதியாக நின்றான். அவள்
மேலும் மாடு மேய்க்கிற பையன் தான நீ எனக்கோபக் கனலுடன் கேட்டாள். அவனுக்கு
எதுவும் தோன்றவில்லை கோபம் வரவில்லை அவளை எதிர்த்து கேள்வி கேட்கவில்லை அவள் பேசும் அழகை வெளிப்படையாக ரசித்து கொண்டு இருந்தான். ஆனால்
அவன் மனதில் நாம் இன்னும் ஏதும் செய்யவில்லை என்று தோன்றியது. அவள்
எனக்கு காதல் கல்யாணம் இதுல ஏதும் விருப்பம் இல்லை. சோ மன்னிக்கவும் என்று சொல்லி சென்றுவிட்டாள் புன்னகை உடனே.
அவள் சென்றவுடன் முனிஷ் அவன் அருகில் வந்தான். என்ன
மச்சான் ரொம்பத் திமிறா பேசிட்டு போறா. விடு
மச்சான் இது எல்லாம் ஒரு விஷயமா. அப்படி
அவன் உதடுகள் உச்சரித்ததே தவிர மனம் யோசித்துக்கொண்டே இருந்தது நாம் என்ன செய்யவேண்டும் என்று. மனதில்
சிறுவருத்தத்துடன் வீட்டுக்கு சென்றான். அவனுடைய
அம்மா அவனை நன்கு உணர்ந்தவள் அவன் வந்தவுடனே அவன் முகத்தில் வருத்தம் கலந்த புன்னகையைப் பார்த்தாள். இருந்தும்
ஒன்றும் அவனிடம் கேட்கவில்லை. மூன்று
நான்கு வருடங்களாக அவன் தனது அம்மாவிடம் எந்தவொரு விண்ணப்பமும் கேட்கவில்லை.
இரண்டு நாட்கள் கழித்து அவன் தனது அம்மாவிடம் வந்தான். அம்மா
எனக்கு ஒரு இருபந்தைந்து ரூபாய் வேணும் என்றான். அந்த
பிரிட்ஜ் மேல இருக்கு எடுத்துக்கோ. அவன்
திரும்பி பிரிட்ஜ் மேல பார்த்தான். அம்மாவை
பார்த்து சிரித்துக்கொண்டே அம்மா எனக்கு இருபத்தைந்தாயிரம் வேணும். டேய்
அவ்ளோ ரூபாய் எதுக்குடா! அவன்
அம்மா வேணும் என்றான். சரி
இரு வரேன் என்று சொல்லி ஏடிஎம் கார்டை எடுத்து கொடுத்தாள். அவனும்
அதை வாங்கிக்கொண்டு கிளம்பினான். வெளியே
சென்று சிறிது நேரத்தில் வந்தவன் அம்மா நான் திரும்பி வர இருபது முப்பது நாள்கள் ஆகலாம். மாடுகளை
எல்லாம் பார்த்துக்கொள் எனச்சொல்லி சென்றான். முன்னமே
அவனுடைய உடைமைகளை எல்லாம் பேக் செய்து வைத்து இருந்தான்.
அங்கிருந்தது விடைபெற்ற அவனுடன் முனிஷும் சேர்ந்துகொண்டான். இருவரும்
இந்தியாவை சுற்றிவர விரும்பினார்கள். ஆனால்
அவை மட்டும் விவேக்கின் இலக்கு இல்லை என்பதே உண்மை. ஆம்
அவன் தனது பயணத்தை முதலில் நீலகிரி ஊட்டி என ஆரம்பித்தான். ஆரம்பித்த
பயணம் அசாம் டார்ஜிலிங் மும்பை என முடிவது போலே பிளான் பண்ணி இருந்தான். இந்த
பயணம் வருங்காலத்தை வளமாக்கும் பயணமாக இருக்க வேண்டும் என்று அவன் விரும்பினான். இதுயேதும்
அறியாமல் ஆனந்தமாக உடன் இருந்தான் முனிஷ். நீலகிரியில்
உள்ள அணைத்து சுற்றுலா தளத்திற்க்கும் சென்று தேயிலைத் தோட்டம் பற்றியும் தேயிலைகளின் நிறம், தரம்,
வகை என்று அனைத்து தகவல்களையும் சேகரித்தான் விவேக். அதற்கு
தான் கொண்டுசென்ற மொபைலையும் கேமராவையும் முழுவதுமாக யூஸ் பண்ணினான். ஊட்டி
முடித்து சென்னை வந்து அங்கிருந்து குவாகத்தி சென்று அங்கிருந்து டார்ஜிலிங் சென்று அங்கிருந்து மும்பை முடித்து சென்னை வருவதே விவேக்கின் பிளான். சென்னையில்
இருந்து மதுரை. இப்படியே
சென்று அனைத்து
விதமான தகவல்களையும் சேகரித்தான் விவேக்.
இதுயேதும் அறியாமல் இருந்த முனிஷ்க்கு டார்ஜிலிங்ல வைத்து சந்தேகம் எழுந்தது. இவன்
எதற்கு தேயிலை பற்றிய தகவல் அனைத்தும் சேகரிக்கிறான் என. அதை
அவனிடமும் கேட்டுவிட்டான். மச்சான்
சிறுதுளிப் பெருவெள்ளம். நாம
சிறியதாக செய்யும் ஒரு விஷயம் எப்போதுமே பெரியதாக நம்மல அடையாளம் காட்டும்னு இப்போ தான் புரிஞ்சது. கயல்
கேட்டாளே நீ யார்னு? விவேக்ன்னு
தான் சொல்ல முடிந்தது. அதுக்குமேல
நம்மகிட்ட ஒண்ணுமில்ல சொல்ல. மூன்று
நான்கு வருஷம் முன்னாடி எங்க வீட்டுல ஐந்து மாடு இருந்தது. இப்போ
பன்னிரெண்டு இருக்கு. நானும்
கொஞ்சம் உழைத்து தான் மச்சான் இருக்கேன். கேவலம்னு
பார்க்காம எங்க அப்பா அம்மா சொல்றங்கனு செஞ்சேன். அது
இப்போ எனக்கு லாபம் கொடுத்து இருக்கு அதிகமா ஏழு மாடு. எல்லாத்துலயும்
ஒருவிதமான வளர்ச்சி இருக்கு மச்சான். ஆனா
அது நமக்கு தெரிவது இல்ல. அவ அப்டி சொன்னவுடனே எங்கவீட்டு தொழுவத்துக்கு வந்து நின்னேன் நிறைய மாடு நிற்பது போல இருந்தது மச்சான்.
அப்பறம் புக் படிக்கும்போது யோசித்தேன் என்ன பண்ணலாம்னு. அதான்
ஏன் வீட்டுல மாடு இருக்கு. எந்தவொரு
டீ கடையும் அதிகமா மாட்டு பாலில் இருந்து டீ காபி கொடுக்கறது இல்லை. இப்போ
எல்லாம் பாக்கெட் பால் தான் என்று சொல்லிமுடிக்க. சூப்பர்
மச்சான் வாழ்த்துக்கள் என்றான் முனிஷ். மச்சான்
நான் மட்டும் உங்கள விட்டு பண்ணுவேன் நெனச்சியா? இல்லை
நாம எல்லாரும் சேர்ந்து தான் பண்ணப்போறோம். அப்படியே
முனிஷ் விவேக்கை கட்டியணைத்து தட்டிக்கொடுத்தான். அதன்
பின்பு அங்கிருந்து கிளம்பிய அவர்கள் மும்பையை அடைந்தனர். அங்கே
அவர்களின் வேலை ஒருபொருள் எப்படி மக்களிடம் கொண்டு சேர்க்கப்படுகிறது? எப்படி
விளம்பரப்படுத்துவது என்று தகவல் சேகரித்தனர். இங்கு
விவேக்கை விட முனிஷ் மிகவேகமாக செயல்பட்டான். தகவல்
சேகரிக்கப்பட்டது. இங்கே
அவர்களுக்கு உதவியாக விவேக் தனது நண்பன் குமாரை அழைத்து இருந்தான். ஏனென்றால்
மோடியை போலே விளம்பரம் முக்கியம் என்று விவேக் உணர்ந்தானோ என்னவோ. மற்ற
அனைத்து இடங்களிலும் ஆங்கிலத்தை பயன்படுத்தினான்.
அனைத்து தகவல்களும் சேகரித்து மதுரை வந்தடைந்தனர். மதுரை
வந்ததும் அனைத்து நண்பர்களையும் அழைத்து அவனுடைய திட்டங்களை விளக்கிக் கூறினான். அவர்களும்
இதற்கு சரி என்று சொல்ல. அடுத்த
நாள் முதல் இடம் தேட ஆரம்பித்தனர். அவர்களுக்கு
ரொம்ப நல்லநேரம் மதுரையின் மக்கள் அதிகமாக கூடும் இடத்தில் கிடைக்க மகிழ்ச்சியுடன் தொடங்கினர். இதற்காக
மற்ற நண்பர்கள் அனைவரும் அவர்களின் வீட்டில் வாங்கினார்
பணம். ஆனால் விவேக் தனக்காக தான் உழைப்பில் அவன் அம்மா சேர்த்து வைத்த ஒன்றையும் வாங்கவில்லை. அவனுக்காக
அவன் அம்மா செலவிற்கு கொடுத்த பணத்தையும் குப்பை கூளத்தை வைத்து சேகரித்த பணத்தை வைத்து தொடங்கினான். அவன்
எதிர்பாராத விருந்தாளியாக வந்தவர் அவன் அப்பா. அவர்
வருவாரோ மாட்டாரோ என்று ஏங்கி கொண்டு இருந்தான். அவருக்கு
விடுப்பு கொடுக்கப்படவில்லை என்பதை அவன் அறிந்தான். இருந்தும்
அவர் வந்துவிட்டார். மீரா
மேடம் அலையா விருந்தாளியாக வந்தார்.
மகனின் முயற்சியைவிட தன் முன்னேற்றம் முக்கியமா என்ன? பறந்து
வந்துவிட்டார். வந்தவரை
பார்த்த நண்பர்களும் விவேக்கும் மிகவும் மகிழ்ந்தனர். ஆரம்பம்
இதுதான்! இன்று
தான் என்று அறியாத வண்ணம் அபாரமாக இருந்தது முதல்நாளே. ஏனென்றால்
அவர்கள் செய்த விளம்பரம் அப்படி. நண்பர்கள்
மூலமாக சோசியல் நெட்ஒர்க் முழுவதும் கவர் செய்தனர். அதுவிடுத்து
அனைத்து காலேஜ் பள்ளி என்று சென்று விளம்பரமாக உதவி கோரினர். அவர்கள்
தங்கள் உதவியாக சமூக வலைத்தளத்தில் தாக்கம் ஏற்படுத்தினர்.
விவேக் மிகவும் தெளிவாக அனைத்துவித முன்னேற்பாடுகளும் செய்து இருந்தான். வெறும்
டீ மற்றும் காபி எனத்தெரிந்த நமக்கு பலவிதமான சுவை இருக்கிறது என்று உணர்ந்து, அனைவரும்
பருகும் அளவிற்கு குறைந்த விலையில் விற்பனை செய்தான்.
ஒரு வருடத்தில் சென்னையில் இரண்டாவது கிளையை தொடங்கினான். இன்று
இந்தியா முழுவதும் இருபதுக்கும் அதிகமான கிளைகள் உள்ளது இவர்களுக்கு. இவை
அனைத்தும் வெறும் மூன்று ஆண்டுகளில் நடந்தது. இன்றும்
அவர்கள் தனக்கென மாட்டுப்பண்ணை வைத்து இருக்கிறார்கள். அதன்
கிளை விரிந்தது விலை உயரவில்லை. சாதாரண
கடையில் குடிக்கும் அனைத்து விதமான சுகமும் இங்கு உண்டு. இப்படியே
காலங்கள் சென்றன நண்பர்கள் அனைவரும் கல்யாணம் முடித்தனர். வெற்றியை
கொண்டாடும் விதமாக அவர்கள் சுற்றுலா சென்று திரும்பிய தருணம் அது. அவன்
எப்போ வருவான் என்று அவன் வீட்டில் கேட்டுக்கொண்டே இருந்தனர். நீங்கள்
எதிர்பார்ப்பது சரியே உங்களை நான் ஏமாற்ற விரும்பவில்லை. அவன்
வீட்டிற்குள் வரும் வேளையில் வீட்டிற்கு வெளியே அதிகமான செருப்புகள் கிடக்கவே! என்னவோ
என்று நினைத்தான்.
உள்ளே வந்தான் அவனை வரவேற்க வந்தவர் மீரா மேடம். ஆம்
இவையனைத்தும் கயல்விழியின் நாடகமே. கயல்விழியின்
சித்தப்பா வீடு விவேக்கின் வீட்டிற்கு பின்புறமாக உள்ளது. அவள்
அடிக்கடி அவளின் சித்தப்பா மகள் நந்தினியை பார்க்க வருவது வழக்கம். அப்படி
வந்த ஒருநாள் இவனைக் கண்டாள். காதல்
கொண்டாள். பெண்கள்
எப்பொழுதுமே நம்மை ஊக்கப்படுத்தும் ஆயுதம் என்று தான் சொல்லுவேன். தன்
மனதிலே வைத்த காதலை அவள் பெற்றோருடன் வந்து பேசிவிட்டு சென்றுவிட்டால் விவேக் காதலை வெளிப்படுத்தி சுற்றுப்பயணம் சென்ற தருணத்தில். அன்றிலிருந்து
இன்றுவரை எல்லாமே நாடகம் தான் மக்களே. ஆனால்
நாடகத்தின் இயக்குனர் நான் அல்ல! என்
கதையின் நாயகர்கள் மட்டுமே. அவர்கள்
சொல்ல நான் எனக்கு தெரிந்த மொழியில் எழுதினேன்.
முடிவாக நான் சொல்ல வந்ததை சொல்லி விடுகிறேன். வாழ்க்கையில்
நம் மனம் உணர்ந்து செயல்படும் செய்யப்படும் எந்தவொரு செயலும் வெற்றியை அடையும். அது
நீ சாக்கடை அள்ளுவதாக இருந்தாலும் சரி. உன்
பெற்றோர்கள் உனக்காகவே வாழ்கின்றனர். அவர்களின்
செயல் உன்னை வலுப்படுத்தி உன்னை உனக்கே அடையாளம் காட்டும் துவண்டுவிடாதே. பிறப்பால்
அடையாளம் கொடுத்தவள் அம்மா. அவள்
உன்னை கொடுத்த உலகிற்கு உன்னையே அடையாளம் காட்டு. காதலை
நேசிக்க மறவாதே ஒவ்வோர் உள்ளத்திலும் ஏதோவொரு வலியில் நினைவுகளில் காதல் உள்ளது.
காதல் நம்மை எரியும் சுள்ளிகளாக வதைத்தாலும் அணைத்தாலும் எறிந்தாலும் அவை வாழ்க்கையின் இன்பங்கள் தான், நம் மனம் ஏற்று கொள்ளும் வரையில். பெற்றோருக்கு
அடிபணி. பெற்றோரை
வாழவை. நீயும்
பெற்றோராவாய் என்பதை மறவாதே.
பூவிதழாக,
தமிழினியன்

கருத்துகள்
கருத்துரையிடுக