வெண்பா
7. மருத்துவரும் கார்மேகமும்
சரி வாங்க கதைக்குள்ளே போவோம். பீங்கானை எடுத்துக்கொண்ட கான்ஸ்டபிளும் இன்ஸ்பெக்டரும் அந்த பீங்கானில் இருக்கும் ரத்த மாதிரியை உடனே கண்டுபுடிக்க வேண்டும் என்று அங்கிருந்து புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார். அங்கிருந்து கிளம்பிய அவர்கள் தங்களுக்குள்ளே பின்வருமாறு பேசிக்கொண்டனர். கான்ஸ்டபிள் நம்மகிட்ட இருக்கும் இரண்டு க்ளூ. ஒன்று அவள் ஆடையில் பட்டிருந்த ரத்த மாதிரி, இன்னொன்னு இந்த பீங்கானில் இருக்கும் ரத்தமாதிரி. இதுரெண்டும் ஒரே மாதிரியான ரத்த வகையாக இருந்தால் நமக்கு நல்லது. இல்லையென்றால் இந்த கேஷ் கொஞ்சம் கஷ்டமா இருக்கும்.
ஆமா சார் இந்த ரத்தம் மனிதனோடதா இருக்கும் பட்சத்தில் சரி. இல்லையென்றால் மேலும் நமக்கு கஷ்டம் தான் எனச்சொல்லி கான்ஸ்டபிள் சிரித்தான். எவ்வளவு கஷ்டமா இருந்தா என்ன கான்ஸ்டபிள் நமக்கு இதுஒரு அனுபவம் தானே எனச்சொல்லி இன்ஸும் கூட சேர்ந்து சிரித்தார். ஆமாங்க சார். சரி வாங்க வேகமாக போவோம் இல்லையென்றால் அந்த மருத்துவர் இன்னொரு அடிவாங்க வேண்டியிருக்கும் என்று சொல்ல. கான்ஸ்டபிள் வண்டியை வேகப்படுத்தினார்.
இருவரும் மருத்துவமனையை அடைந்தனர். உள்ளே பூட்ஸ் கால்களுடன் வேகமாக சத்தம் கேட்கவே அந்த டாக்டர் வெளியே வந்து நோக்கினார். அவரின் பார்வையில் போலீஸ் வருவது தெரிந்தவுடனே புன்னகையுடன் வாங்க சார் எண்ணவேண்டும். போலீசார் இருவரும் தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டனர். பார்த்திங்களா கான்ஸ்டபிள்! நேத்து கொடுத்த குடுப்பு எப்படி வேலை செய்து பார்த்தீங்களா எனச்சொல்ல. இருவரும் சிரித்துக்கொண்டே டாக்டர் அருகில் வர சரியாக இருந்தது. அவருக்கும் கொஞ்சம் காதில் விழுந்த மாதிரி அவரும் தனது முகத்தை கொஞ்சம் சரித்தார் சிரிப்பில் இருந்து.
அருகில் சென்ற அவர்கள் டாக்டரிடம் தாங்கள் கொண்டுவந்த பீங்கான் அடங்கிய கவரை எடுத்துக்கொடுத்தனர்.அதை எடுத்து தூக்கிப் பார்த்தார் டாக்டர். ஏதும் சொல்லாமல் இருங்க சார் ஒரு முப்பது நிமிடங்களில் சோதனை செய்து ரிப்போர்ட் கொண்டுவந்து தருகிறேன் என்றுசொல்லி விடைபெற்றார்.
இருவரும் ரிசப்ஷன்ல கொஞ்சம் நேரம் உட்கார்ந்து இருந்தனர். அந்த இடமே இருபது நிமிடங்கள் அமைதியாக கடந்து சென்றது எந்தவொரு சத்தமும் இல்லாமல். போலீஸ் உட்கார்ந்து இருந்தால் அனைவரும் பயம்கலந்து பேசாமல் தானே இருப்பார்கள். இந்த நாதரிப்பயலுக எதுக்கு இங்க வந்திருக்கோ என்று நினைத்து. இப்படியே அமைதியாக சென்றுகொண்டிருக்க இருவரும் கடிகாரத்தையே நோக்கிக் கொண்டிருந்தனர்.
அமைதியாக இருந்த இடத்தில் டெலிபோன் ஒலிக்க அனைவரும் சுற்றும் முற்றும் திரும்பி பார்த்தனர். ரிசப்சனில் தான் ஒலிக்கிறது என்பதை உணர்ந்தனர். ரிசப்சனில் இருந்து நேரே போலீஷை நோக்கி வந்த அந்த பெண், சார் உங்களுக்கு தான் போன் வந்து இருக்கு என்றார். கான்ஸ்டபிள் யார் எனக்கேட்க? பேர் சொல்லவில்ல சார் . அப்படியா என்று கான்ஸ்டபிள் போய் வாங்கி பேச. இரண்டு நிமிடங்கள் பேசிய அவன் சப்-இன்ஸிடம் சார் அம்மா போன் பண்ணி இருக்காங்க.போய்ட்டு வந்துருறேன் எனச்சொல்லி கிளம்பினான்.
கான்ஸ்டபிள் சென்ற இரண்டு நிமிடங்களில் டாக்டர் ரிபோர்ட்டோடு வந்துவிட்டார். அதை வாங்கிக்கொண்டு சப்-இன்ஸ் டாக்டரிடம் ரெண்டு ரத்த மாதிரியும் ஒத்துபோகுதா எனக்கேட்க. ஆமா சார் ரெண்டுமே ஒத்துபோகுது. அப்பறம் நீங்க நினைக்கிற மாதிரி இது ரெண்டுமே மனிதர்களோட ரத்தம் தான். சரி டாக்டர் உங்களோட டைம்லி உதவிக்கு நன்றி எனச்சொல்லி அடுத்து என்ன செய்யவேண்டும் என்று சிந்தித்து கொண்டே சென்றார்.
அங்கிருந்து விடைபெற்ற அவன் குழப்பத்திலே சென்றான். யாரையும் நம்புவதில்லை என முடிவுஎடுத்து அவனே விசாரணையை துவங்கி தேடினான். தேடலில் கிடைக்காத விடை ஒன்று உள்ளதா என்ன.
சோலையன் வேலை பார்த்த இடம் கொஞ்சம் அடர்ந்த காட்டுப்பகுதி அங்கிருந்து வெளியே வரவேண்டும் என்றால் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவு நடந்து வரவேண்டும். காரில் செல்பவர்களுக்கு ஒருவழியும், நடந்து செல்வோருக்கு ஒத்தையடி பாதையும் ஒன்று இருக்கும்.
அவள் இறந்து கிடந்ததோ ஒத்தையடி பாதையிலே அதாவது நடந்து செல்வோர் பயணிக்கும் வழியில். ஆனாலும் அவள் ஒரு முட்புதரின் அருகிலேயே மறைத்து கிடத்தப்பட்டு கிடந்தாள். ஆக அவள் இறந்து கிடந்த போது யாராவது நடந்து சென்று இருக்கவேண்டும். அவர்களின் காலில் பீங்கான் குத்தி இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டான் சப்-இன்ஸ்.
அவள் இறந்துகிடந்த இடத்தின் அருகே இருந்துகொண்டே சுற்றுமுற்றும் பார்த்தான் எதுவும் அவன் கண்களுக்கு புலப்படவில்லை. அங்கே இருந்து வெளியே வந்தான். குவாரிக்கு உள்ளே நுழையும் இடத்தில் சில கடைகள் இருந்தன. அதைப்பார்த்து வண்டியை நிறுத்தினான்.
நேரா அங்கிருந்த டீ கடையை நோக்கி போனான். அவனை பார்த்த உடனே வாங்க சார் வாங்க உட்காருங்க என்றார் டீ கடை முதலாளி. இருக்கட்டும் பரவாயில்லை. இங்க யாரு சடையன். அந்தா அவரு தான் சார். அவன் சொல்ல சடையனும் அருகில் வந்து நின்றான் சாரத்தை கழட்டிவிட்டு மரியாதையுடன்.
சார் சொல்லுங்க சார் என்றான் பணிவுடன். நீங்க தானே முதல போலீஸ்க்கு சொன்னது. ஆமா சார். நீங்க எங்க அங்க போனீங்க? இல்ல சார் டீ கிளாஸ் வாங்க போனேன் சார். எங்க போனீங்க. தருமர் இண்டஸ்ட்ரி இருக்கு சார் உள்ள அங்க தான் போனேன். அதுஎங்க இருக்கு. அந்த ஒத்தையடி பாதையில இருந்து வலதுபக்கம் போனா மீனா குவாரி. இடது பக்கம் போனா தர்மர் இண்டஸ்ட்ரி சார். எத்தனை மணி இருக்கும் நீங்க பார்த்தது? ஒரு ஆறுமணி இருக்கும் சார். சரி உங்கள்ல யாராவது பாத்தீங்களா, ஒரு மூன்று மணில இருந்து ஏழு மணிவரை யாரெல்லாம் உள்ள போனாங்க வந்தாங்கனு.
சார் எப்பவுமே ரெண்டு மணில இருந்து ரெண்டரை மணிக்குள்ள மீனா குவாரி முதலாளி போவார் போனார் சார். அப்பறம் இங்க சாபிடவந்து போறவங்க போனாங்க சார். வேற யாராவது புதிதா போனாங்களா. அப்படி யாரும் போகல சார் என்றார்கள் அங்கிருந்த அனைவரும். சரி அந்தப்பொண்ணு கூட யாராவது வர்றது போறது பார்த்திருக்கீங்களா. அப்படி யாரும் அந்தப்பொண்ணு கூட வரமாட்டாங்க சார். ஆனா ரொம்ப நல்ல பொண்ணு சார் காது கேட்காது வாய் பேச வராது. ஓகோ! அதுவேறயா என பெரு மூச்சிவிட்டார் சப்-இன்ஸ்பெக்டர்.
இதெல்லாம் கேட்டு முடித்துவிட்டு அங்கிருந்த இருவரை அழைத்துக்கொண்டு உள்ளேபோனார் மீனா மற்றும் தர்மர் இண்டஸ்ட்ரிக்கு. உள்ளேசென்ற அவர்கள் ஒருவரை அழைத்து, கூட்டத்தை கூட்டினர். ரெண்டு நாள் முன்னாடி நடந்த கொலைப்பற்றி சொல்லி. அன்று சாப்பிட சென்றவர்களை அழைத்தனர். அவர்களும் முன்னே வர, உங்க யாருக்காவது இந்த கொலைபற்றி தெரியுமா. எங்களுக்கு ஏதும் தெரியாது சார். ஆனா நாங்க சாப்பிட போகும்போது ரெண்டு மணி இருக்கும் மீனா குவாரி முதலாளி வந்தார் சார். அவரு மட்டும் தான இல்லை வேற யாரும் வந்தாங்களா. அவர் மட்டும் தான் சார்.வேரேதும் உங்களுக்கு தெரியுமா.
இதைக்கேட்டு அவர் எத்தனை மணிக்கு வெளிய போனார்னு டீ கடை ஆட்களை கேட்க அவர் நாலு மணிக்கே போய்ட்டார். அவரு எப்படி என்றார். அவரு ரொம்ப நல்ல இறக்கப்பட்ட மனிதர் சார் எனச்சொல்ல. அங்கிருந்து வெளியே வந்து, மீனா க்ரானைட் நோக்கி சென்றனர்.
மீனா குவாரி உள்ளே நுழைந்ததும் அங்கே இருந்த அனைவரும் இவர்களை நோக்கி வந்தனர். கூட்டத்தில் சோலையனும் இருந்தான். எல்லாரும் வந்த உடன் உங்களுக்கு அரசி கொலைப்பற்றி எதாவது தெரியுமா. எங்களுக்கு ஏதும் தெரியாது சார். நாங்க எல்லாரும் ஐந்து மணிக்கே கிளம்பி போய்ட்டோம். போகும்போது அந்த பொண்ணு அங்க இருந்து கணக்கு எழுதிட்டு இருந்தது என்றார்கள் அனைவரும். ஆனால் அவர் அறிந்தார் சோலையன் ஐந்தரை மணிக்கு கிளம்பினான் என்று.
அப்போ நீங்க எல்லாரும் இங்க இருந்து ஐஞ்சரை மணிக்குள்ள கிளம்பிட்டிங்க. ஆமா சார் என்றார்கள் அனைவரும். அவர்களிடம் இருந்து வந்து மீனா க்ரானைட் முழுவதும் சுற்றி பார்த்த இன்ஸ் மனதில் சிந்தனை செய்தது என்னவென்றால்.
நாலு மணிக்கே முதலாளி போய்ட்டார். இந்த கணக்கு எழுதுற அறைக்கு இரண்டுவழி இருக்கு. இந்த அறைக்கும் மக்கள் வேலை பார்க்கும் இடமும் ரொம்ப தள்ளி இருக்கு. சோ அந்த பொண்ண கற்பழித்து அங்க உட்கார வச்சு இருக்கலாம். நாலு மணிக்கு வெளியே போன முதலாளி இல்லை கொலையாளி திரும்ப பின்பக்கமா வந்து அவளை தூக்கி அந்த புதருக்கு உள்ளே போட்டு இருக்கணும். ஆனால் அவர்களின் கைரேகை ஏதும் இல்லை என நினைத்து கொண்டார் சப்-இன்ஸ். ஆனாலும் அவருக்கு சிறுகுழப்பம் அந்த ரத்த கறைகளை நினைத்து.
அங்கிருந்து தனது மோட்டார் சைக்கிளில் வெளியே வந்து மெயின் சாலையில் திரும்ப முயன்றார். யாரோ தன்னை கூப்பிடுவதாக உணர்ந்து வண்டியை நிறுத்தினார். அவரை நோக்கி ஒரு மனிதன் வருகிறான்.யார் யார் அவன். அவன் டீ கடையில் வேலை பார்க்கும் சின்ன பையன். அவனைப்பார்த்து வண்டியை நிறுத்திய போலீஸ் பக்கத்தில சென்ற அவன். சார் நீங்க தான் அரசி கொலையை பற்றி விசாரிக்கிறீங்கனு அங்க சொன்னாங்க சார் அதான் வந்தேன். என்ன தம்பி சொல்லுங்க. இல்லை சார் அன்னைக்கு நான் ஒண்ணுக்கு இருக்க உள்ள போனேன்னா.
அப்போ தான் சார் மீனா க்ரானைட் முதலாளி உள்ளே போனார். மணி ஒரு ரெண்டு மணி இருக்கும். அவர் போகும்போது பின் சீட்டுல ஒருத்தர் உட்காந்து இருந்தார். ஆனால் அவர் திரும்பி வரும்போது இல்லை சார் என்றான்.
மனதுக்குள் தேடலுக்கு விடைகிடைத்த மகிழ்ச்சி அவனின் மனதில். சரி நீங்க எங்கிட்ட சொன்ன விஷயத்தை யார்கிட்டயும் சொல்ல வேண்டாம். சரிங்க சார் எனச்சொல்லி விடை பெற்றார்கள் அவர்கள் இருவரும் தன் வழியே. அவனிடம் இருந்து விடைபெற்ற இன்ஸ்பெக்டர் தனக்குள்ளே ரத்த மாதிரியை சேகரிக்க விரும்பினான். அதற்காக சோலையனையும் அவன் முதலாளியையும் வரச்சொல்லி இருந்தான் மருத்துவமனைக்கு.
இருவரும் ஒரு ஏழுமணி இருக்கும்போது மருத்துவமனை வந்தனர். அவர்களின் ரத்த மாதிரி சேகரித்து ஆராய்ச்சி செய்யப்பட்டது. ரத்த மாதிரியை சேகரித்த உடனே அவர்களை அனுப்பிவிட்டார் சப்-இன்ஸ்பெக்டர். அவர்கள் விடைபெற்ற இருவது நிமிடம் கழித்து ரிப்போர்ட்யை வாங்கிய போலீஸ் அதிர்ந்து போய் நின்றார். ஆம் அவர்கள் சேகரித்து வைத்த ரத்த மாதிரி அனைத்தும் சோலையனுடையது. என்ன மக்களே அதிர்ந்துவிட்டீர்களா. எப்படி ரத்தக்கறை படிந்தது சோலையன் மேலும் இந்த கொலையிலும். மேலும் படியுங்கள் எனது வெண்பாவை.
மீனா கிரானைட் முதலாளி பெயர் தாஸ்.அதிகமாக யாரும் முதலாளி அறைக்குள் செல்வது இல்லை. ரொம்ப நல்ல மனிதர். ஆனால் அவருடைய தொழில் வளர்ச்சிக்காக்க பாடுபட்டவர். அந்த தொழில் முடங்கும் நிலையில் வீழ்ந்தால். செய்யக்கூடாத வேலையை செய்து தானே ஆகவேண்டும். சோலையனின் மீதும் தாசின் மீதும் சந்தேகத்துடன் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் அடுத்து என்ன செய்வதென்று சிந்தனையில் தன் வீட்டை அடைந்தார். இரவு உணவை முடித்து உறங்க முயற்சித்தார்.
தூக்கம் ஏதும் வராமல் துக்கமே அவர் விழிகளையும் தொண்டையையும் அடைத்தது அரசியை நினைத்து. ஒரு வாய் பேசத்தெரியாத காது கேட்காத பெண் எப்படியெப்படி உருகியிருப்பாள் தனக்கு நடந்த கொடுமையை எண்ணி என்று கோபமே அவன் மனதில் வந்தது.
அதிகாலை நேரம் தாஸ் தனது வீட்டில் உணவருந்தி கொண்டிருந்தார். காலிங்பெல் சத்தம் இரண்டு மூன்று தடவை கேட்கவே "எந்த குரங்குனு தெரியலையே" என்று திட்டிக்கொண்டே கதவை திறக்க போனாள் அவனுடைய மனைவி. கதவை திறந்து யாருய்யா நீ எதுக்கு சும்மா அடிச்சுட்டே இருக்க பொறுமையா வெயிட் பண்ணமாட்டயா. கான்ஸ்டபிள் உர்ரென்ற மூஞ்சியுடனே "தாஸ் இல்லையா". நீங்க யாரு.
கான்ஸ்டபிள் கீழே குனிந்து தனது சூவை சரிசெய்தார். அதைப்பார்த்த உடனே தாஸ் மனைவி "என்ன வேணும் சார்? அவர் உள்ளே சாப்டுட்டு இருக்கார். கொஞ்சம் உட்காருங்க எனச்சொல்லி உள்ளே சென்றாள். யாருடி என தாஸ் கேட்க போலீஸ் வந்திருக்கார்ங்க. என்னது போலீசா எனக்கேட்டு தாஸ் முகம் பயத்துடன் மாறியது. உடனே கை கழுவிவிட்டு எழுந்துசென்றான் ஹால்யை நோக்கி. அவன் வருவதைகண்ட இன்ஸ்பெக்டர் உட்காருங்க தாஸ்.
என்ன சார் வேணும் உங்களுக்கு. நீங்க வேணாம் உங்க பொண்டாட்டி வேணும்னு சொன்னா குடுக்கப் போறீங்களா என்ன என கிண்டலுடன் கேட்க. தாஸின் முகம் நெருப்பில் வெந்த கோழிபோல் அவனையே வெறித்து பார்த்தது.
இங்கவச்சு பேசலாமா இல்ல வெளிய போகலாமா எனகேட்டுக்கொண்டே வெளியே நடந்தான் இன்ஸ்பெக்டர். பின்னையே தாஸும் நடந்து சென்றான்.
சரிங்க தாஸ் நேராவே கேட்குறேன் உங்களுக்கு அரசி கொலைப்பற்றி எண்ணத்தெரியும். நீங்க தான் அந்த நேரத்துல யார் கூடையோ வந்துட்டு தனியா போனீங்கன்னு கேள்வி பட்டேன். யார் அந்த மனிதர். உங்களுக்கும் அந்த மனிதனுக்கும் என்ன சம்மந்தம். பேந்த பேந்த முழித்த தாஸையே கோபக் கனலுடன் இரு நிமிடங்கள் பார்த்துக்கொண்டு கான்ஸ்டபிள் இருக்க. எனக்கு ஏதும் தெரியாதுங்க சார், அந்தப்பொண்ணு ரொம்ப நல்லப்பொண்ணு. பாவம் பொழைப்புக்கே வழியில்லைனு சொல்லி வேலை கொடுத்தேன்.
பொழப்புக்கு வழியில்லன்னு கொடுத்து நீங்களே அனுபவித்து தூக்கி எறிந்துவிட்டிங்க. இப்படி நீங்க சொன்னா பச்சபுள்ளன்னு சொல்லி போங்கன்னு சொல்லிருவேனோ. சார் எனக்கேதும் தெரியாது. நீங்க சொல்ற மாதிரி யாரும் என் க்ரானைட் உள்ள வரல. அய்யோ தாஸ் உங்கள பார்த்தவுடனே பட்டுனு சுடக்கூடாதுனு சொல்லித்தான் துப்பாக்கியை எடுக்காம வந்து இருக்கேன் எனச்சொல்லி ஒரு அறைகொடுக்க அவன் மயங்கி கீழே விழுந்தான்.
விழுந்தவன் எழுந்து சார் உண்மையிலேயே எனக்கு ஒன்னும் தெரியாது. அந்த பொண்ணு இறந்தது எனக்கே அதிர்ச்சியா தான் இருந்தது. அப்போ உன்கூட வந்த நபர் யாரு. அவரு கவர்ன்மெண்ட் ஆபீசர் வேல். அவரு எதுக்கு வந்தார். என் க்ரானைட்ல எந்தவொரு பாதுகாப்பும் இல்லைனு சொல்லி சீல் வைக்க வந்தார். வந்தப்ப இதுதான் நடந்தது.
எனக்கு நோட்டீஸ் வந்தது சார் பாதுகாப்பு இல்லைனு சொல்லி. கொலைநடந்த அன்று விசிட் செய்த அரசு அதிகாரியை அழைத்து வந்து பேசிக்கொண்டு இருந்தேன். அவருக்காகவே உயர்தர மது வாங்கிவைத்து ரெண்டு பேரும் சாப்டுட்டு இருந்தோம். நாங்க அங்கயிருந்த நேரம் எல்லாரும் சாப்பிட போய்ட்டாங்க. ஆனா அரசி பொண்ணு மட்டும் கணக்கு எழுதிட்டு இருந்துச்சு. எனக்கு அந்தநேரம் பார்த்து போன் வந்துருச்சு. நான் பேச வெளியே வந்துட்டேன். முப்பது நிமிடம் பேசிட்டு உள்ளே போகும்போது வேலோட பார்வை பூரா அந்த பொண்ணு மேலயே இருந்துச்சு.
நான் தான் உடனே அந்த பொண்ண சைகையால சாப்பிட போகச்சொன்னேன்.
அவளும் என்னோட சொல்லக்கேட்டு அவளோட கூடையை எடுத்திட்டு சென்றுவிட்டாள். அவள் சென்றவுடன் நான் வேலுகிட்ட என்ன சார் அந்த பொண்ண இந்தப்பார்வை பாக்குறீங்க. ரொம்ப மூடா இருக்குயா. இவ்வளவு அழகான மல்லிகைப்பூவை பக்கத்துல வைத்துக்கொண்டு எப்படியா சும்மா இருக்க.பாவம் சார் அந்தப்பொண்ணு வாய்பேச தெரியாது காதும் கேட்காது. எப்பிடி இருந்தா என்னய்யா? இதுக எல்லாம் நமக்கு நாய் மாதிரிதானே! தேவைப்பட்டால் அடித்து சாப்பிடணும்.
அப்படி எல்லாம் இல்லை சார் ரொம்ப நல்லபொண்ணு. யோவ் ரெண்டு நாள் டைம் தர்றேன் யோசித்து சொல்லு எனச்சொல்லி அவர் அங்கிருந்து சென்றுவிட்டார். இதுதான் சார் நடந்தது.
போனவரை நீ பார்க்கவே இல்லையா, பார்த்தேன் சார். அவருக்கு வேற ஒரு பொண்ண ஏற்பாடு பண்ணிகொடுத்து ரூமும் போட்டுக்கொடுத்தேன். இதுதான் உண்மைனு நான் எப்படி நம்ப? இந்தாங்க சார் ஹோட்டல் ரூம் புக் பண்ண பில், அப்பறம் அந்த பொண்ணோட போன் நம்பர் மற்றும் முகவரி எனக்கொடுத்தான் தாஸ். வாங்கிக்கொண்ட இன்ஸ்பெக்டர் அங்கிருந்து விடைபெற்றான்.
நாம் தோற்று விட்டோமோ என்ற ஏக்கத்துடன் கீழே கிடந்த வாளியை ஒரு எத்து எத்தினான், அது பறந்து போய் விழுந்தது.
அடுத்ததாக சோலையனை சந்திக்க கிரானைட் சென்றான் இன்ஸ்பெக்டர். அங்கு அவன் வருவதை கண்ட அனைவரும் கூடிவிட்டனர். சோலையனை மட்டும் இருக்கச்சொல்லி அனைவரையும் போகச் சொல்லிவிட. சோலையன் உங்களோட ரத்தக்கறை தான் எங்களுக்கு ஆதாரமா இருக்கு. நீங்க தான் குற்றவாளியாக எங்களால் முன்னிறுத்தப்படுவீங்க. உங்களோட ரத்தக்கறை தான் அரசி இறந்துகிடந்த இடத்துல இருந்தது. எப்படி உங்க ரத்தம் அங்க படிந்தது.
சார் நான் அந்த ஒத்தையடி பாதையில நடந்து போனப்போ என் கால்ல பீங்கான் குத்தியது எனக்காட்ட. இங்கும் ஏமாற்றமே மிஞ்சியது எனநினைத்து சுற்றினான் க்ரானைட் மற்றும் இண்டஸ்ட்ரியை சுற்றி.
சுற்றி அலைந்தவன் கண்ணில் சாமிக்கு அணிந்த பூமாலை ஒன்று கண்ணில் பட்டது. அதைக்கண்டவன் வெளியேவந்து டீக்கடையில் விசாரிக்க அவர்கள் ஏதும் தெரிவில்லை எனச்சொல்ல. ஒருமனிதர் மட்டும் சார் அங்க வந்து வருடம் ஒருமுறை வைகாசி மாதம் ஒரு குடும்பம்வந்து சாமீ கும்புடுவாங்க என்றான். வேற எதாவது விவரம் தெரியுமா எங்கயிருந்து வருவாங்க என்னஏதுனு. இல்லை தெரியாது சார் ஆனா நல்ல வசதியான குடும்பம். இந்த வழிய போகமாட்டாங்களா. இல்ல சார் அந்தப்பக்கம் வேறுஒரு வழியிருக்கு.
அதாவது மக்களுக்கு சொல்வது என்னவென்றால் ஓருமலை வலதுபக்கம் தர்மர் இண்டஸ்ட்ரி இடது பக்கமா மீனா க்ரானைட் இருக்கு. பின்னால போன குப்பம் வர போக வழிஇருக்குனு சொல்ராங்க சார். முன்னாடி வந்தா இப்போ இருக்கும் நேஷனல் ஹைவேய் இருக்கு.
கொலை நடந்தன்று நடந்தது என்னவென்றால். தாஸ் அங்கிருந்து கிளம்பவே. கணக்கு எழுதிக்கொண்டிருந்த அரசி சிறுநீர் கழிக்க எழுந்து சென்றாள். அவள் அங்கே இருந்து கொண்டிருப்பது அவளுக்கு நேரெதிரே செடிகளுக்கு பின்னே மது அருந்தி கொண்டிருப்போர் ஒருவரின் கண்ணில்பட. அவன் மற்றவர்களை கண்ணசைக்க. அவர்களில் ஒருவன் எழுந்து பாம்புபோல வந்து படமெடுத்து நின்றான் அவள் பின்னே.
சிறுநீர்கழித்து முடித்தவுடனே அவன் அவளின் வாயை பொத்த மற்றவர்கள் அனைவரும் சேர்ந்து அவளை தூக்கிவிட்டு சென்றுவிட்டனர். அதிலே இருவர் அவளின் கால்களையும் இருவர் கைகளையும் புடிக்க ஒருவன் அவளின் வாயில் மதுவை ஊற்ற. சிறிது நிமிடம் கழித்து அனைவரும் அவளை பருகினர். பருகிய அவர்கள் அவளை தூக்கிக்கொண்டு அவள் அரையிலே உட்கார வைத்தனர். அனைவரும் சென்றதை அறியும் வரை அங்கேயே இருந்தனர். சென்றுவிட்டார்கள் என நினைத்து அவளை புதரில் மறைக்கவே! ஒருவன் நடந்து வருவதை உணர்ந்து அதில் ஒருவன் தனது கையில் இருந்த பாட்டிலை உடைத்து போட்டான்.
அந்த பாட்டிலே சோலையனின் கால்களில் ஏந்தியது. வேறுவழி இருக்கு என்று டீகடை நபர்கள் சொன்ன உடனையே இதை சோலையன் செய்யவில்லை எனமுடிவு செய்தான் இன்ஸ்பெக்டர். ஆனாலும் அவனுக்கு எப்படி அவளுடைய உடையில் சோலையனின் ரத்தம்பட்டது என சந்தேகம் ஏற்பட்டது. அதை தீர்த்துக்கொள்ள மருத்துவமனைக்கு சென்றான்.அவன் வருவதைக்கண்டு டாக்டர் வேகமாக உள்ளே சென்றார். இன்ஸ்பெக்டர் ஏதும் காணாது போல் உள்ளே செல்ல.
பதற்றத்துடன் காணப்பட்ட டாக்டர் கொஞ்சம் கம்பிரமான குரலில் சொல்லுங்க சார். இல்ல சார் இந்த பூமாலைய யாருக்கு போடனு தெரியல, அதான் வந்தேன் என வலதுபக்கம் பார்த்துக்கொண்டே சொல்ல. உள்ளே இருந்த அறையிலிருந்து ஒருவர் வெளியே செல்வது போலே இருக்க வேகமாக எழுந்து ஓடினான் இன்ஸ்பெக்டர். இருந்தும் அவனை புடிக்க முடியவில்லை. ஒருஇடத்தில் நின்ற இன்ஸ்பெக்டர் பின்னே யாரோ வருவதுபோலே கையை நீட்ட அது சோலையன் என உணர்ந்தான்.
இருவரும் சென்று கொண்டிருந்த வேளையில் பின்னே வேகமாக வந்த அம்பாசிடர் கார் இடித்து கீழே விழ. கான்ஸ்டபிள் வண்டியை விட்டுகீழே இறங்க. கார்மேகம் நீயா. நானே! மருத்துவரும் நானும் நண்பர்கள் எனச்சொல்லி கான்ஸ்டபிள் சப்-இன்ஸ்பெக்டரிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து அவனையே சுட்டான். கீழே விழுந்த வேகத்தில் தூர விழுந்த சோலையன் கையில் துப்பாக்கியை வைத்துவிட்டு சென்றுவிட்டான். அன்றிலிருந்து இன்றுவரை சோலையன் தன்னை அறியாமலே சுற்றிவர அவன் மனைவி முருகனுடன் உலகம் சுற்றி வருகிறாள்.
இதைக்கேட்டு கொண்டிருந்த நம்ம ஹீரோ அந்த பெரியவரை உற்று சொல்வதேதும் அறியாமல் விழிபிதுங்கி நின்றான். அவர் மேலும் சொன்னார் இவ்வளவு தான் தம்பி வாழ்க்கை மோகத்தை மாலையாக அணிந்து காமத்தோடு வழிதேடி பறந்துவிடுகிறார்கள் மக்கள் சோலையனின் மனைவி ராஜாத்தி மாதிரி.
பூவிதழாக,
தமிழினியன்

கருத்துகள்
கருத்துரையிடுக