முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாவல் - வெண்பா - 6. கொலையரசி

வெண்பா

6. கொலையரசி 


வணக்கம் நண்பர்களே. அனைவரின் பயணங்களும் நாட்களும்  இனிதாகவே போய்க் கொண்டு இருக்கிறது என நம்புகிறேன். தெளிவான ஒரு நோக்கம், பார்வை இல்லாமல் எறியப்படும் எந்தொரு கல்லும் இலக்கை அடைவது இல்லை. அதுபோலவே லட்சியமும் புத்திசாலித்தனமும்  இல்லாமல் வெறுமனே இறைக்கை வீசிப் பறக்கும் பறவை கூட வேடனால் வீழ்த்தப்படும். ஒவ்வொருவரின் வாழ்க்கையும் கழிவுகள் போலவே தெளிவற்றதாக நகர்ந்து கொண்டிருக்கிறது.

லட்சியம் நோக்கம் தெளிவில்லாமல் தான் சோலையனின் வாழ்க்கையும் நகர்ந்து கொண்டிருந்தது. அவனைச்சுற்றி உள்ளவர்களால் அவன் மிகவும் சந்தோஷமாகவே இருப்பதாக உணர்ந்தான். ஆனாலும் அவனைப் பலர் தங்களின் இதழ் சிரிக்கப் பயன்படுத்தப்படும் பொழுதுபோக்காகவே நினைத்தனர். அவன் ஒரு சாதாரண க்ரானைட் குவாரியில் கல் அறுக்கும் உதவியாளாக பணிபுரிந்து வந்தான்.

எங்க ஊர் கொம்பள்ளி, ஒரு சிறு கிராமம் நாங்க எல்லாரும் கிருஷ்ணகிரி தான் அதிகமா படிக்க வருவோம். எங்க ஊருக்கும் கிருஷ்ணகிரிக்கும் ஒரு முப்பது நிமிடம் ஆகும் போக. ஆனால் சோலையன் அண்ணன் சூளூருக்கும் ஓசூருக்கும் நடுவில வேலை பார்த்தார். எங்க பஸ்ல   இப்போ இருக்கும் கிருஷ்ணகிரி டோல் வர வருவார் அங்கிருந்து சூளகிரி நோக்கி போவார். இப்படியே ஒரு இரண்டு வருடங்கள் அவர் சூளகிரி பக்கத்துல வேலை பார்த்தார். அப்போ எல்லாம் க்ரானைட் பிசினஸ் ரொம்ப பெரிசா போகாது. ரொம்ப பணக்காரர்கள் மட்டுமே விரும்பி வாங்குவாங்க. அவரோட முதலாளி வேற புதிதாக ஆரம்பித்து இருந்தார். கொஞ்சம் கொஞ்சமா முன்னேற்றி செல்ல நினைத்தார். ஆனால் அவருடைய கெட்டநேரம் ஒரு சின்ன கவனக்குறைவு விபத்தால் அத மூடிவிட்டார்கள்.

அதன்பிறகு தான் அவர் கிருஷ்ணகிரி பக்கத்துலயே ஒரு க்ரானைட் குவாரியில் வேலைக்கு சேர்ந்தார். இந்த வேலை கிடைக்கும் முன்பு ஒரு ஆறுமாதங்கள் ஒரே ஓசிக்குடிதான். அப்போ எல்லாம் கல் எங்க ஊர்ப்பக்கம் அதிகமா கிடைக்கும். கொடம் கொடமாக வைத்தாலும் கொடுத்தாலும் குடித்துவிடுவார்.

அந்த ஆறு மாதங்கள் நரக வாழ்க்கை வாழ்ந்தார். சின்ன சின்ன வேலைக்கு போவார் குடிப்பார் குடிப்பார், அது தான் எல்லாமே. இப்படியே சென்றது. அப்பறம் தான் அவர் வாழ்க்கையில மாறுதல் ஏற்படும்னு எதிர்பார்த்தாரோ இல்லையோ. மிகப்பெரிய மாறுதல் ஏற்பட்டது. அவர் வேலைக்கு சேர்ந்த மூன்று மாதத்துலயே அவர் வேலைபார்த்த சின்ன கம்பெனி கணக்கு பார்ப்பவர் செத்துப்போக. அங்கே அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டவள் தான் அரசி. அவங்களுக்கு ஒரு பதினெட்டு வயது தான் இருக்கும்.

ரொம்ப அழகான தோற்றம். வசீகரமான உடல்வாகு கொண்டவள், அரசி என்ற பெயர்க்கு ஏற்றாற்போல். அவங்க தாண்டிக்குப்பம் எனும் ஊரிலிருந்து கிரிஷ்ணகிரிக்கு வேலைக்கு வருவாங்க.
எல்லாருக்கும் கிருஷ்ணகிரி சேலம் தர்மபுரியை சுற்றி சொல்லப்படும் சிறுகாதல் கல்யாணம் என்றாலே கொஞ்சம் பயமாகவும், அந்த காதல் ஜாதி மதம் சார்ந்து ஏதாவது பிரச்னை சந்திக்கும் என்று தோன்றும். அதுபோக வேகமாக சென்று கொண்டிருக்கும் பாதையில் வேகத்தடையாக காதலே வரும் என்று எதிர்பார்ப்போரும் பலர் உண்டு இங்கே. ஆனால் இது அப்படிப்பட்ட ஒரு காதல் இல்லைங்கோ. என்னவென்று நீங்களே வாசித்து தெரிந்துகொள்ளவும்.

அந்த க்ரானைட் குவாரி அமைந்து இருந்த இடம் கொஞ்சம் அடர்ந்த பகுதியாகவே இருந்தது. வியாபாரமும் ஓரளவு நன்றாகவே இருந்தது.
நன்றாக வியாபாரம் சென்றது என்றால் வேலையும் அங்கே அதிகமாகவே இருக்கவேண்டும் அல்லவா. பலநேரங்களில் இரவு பகல் என்று பாராமல் வேலை சென்றது. சோலையன் பலநேரங்களில் வீட்டில் இருந்ததைவிட அந்த குவாரியில் இருந்தது தான் அதிகம் இப்போ எல்லாம். ஆனாலும் எப்போ எல்லாம் ஊர்ல இருப்பாரோ எங்க கூட பஸ்க்கு காத்திருப்பாரோ அப்போ எல்லாம் எங்களுக்கு எதாவது வாங்கி கொடுத்துக்கொண்டே இருப்பார். காசு பணம் என்பதைவிட அன்பு சிறந்தது என்றே நினைத்துக்கொண்டு இருந்தார். ஆனால் அப்படி நினைப்போரின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் உண்டாகும் என அறிந்ததில்லை அவர் என்று தான் சொல்ல வேண்டும்.

இப்படியே இரண்டு வருடங்கள் சென்றது. அவருடைய வயதும் கல்யாணம் என்ற காமத்தை வெளிக்கொணரும் நிலையை அடைந்தது. வீட்டிலும் பெண் பார்த்துக்கொண்டு இருந்தனர். எங்க ஊரு பக்கத்துலயே தனம்பட்டினு ஒரு ஊரு இருக்கு அங்கேயே ராஜாத்தி என்ற ஒரு பொண்ணப் பார்த்துக்கட்டி வைத்தனர். அவருடைய வாழ்க்கையும் ரொம்ப சந்தோசமாக போய்க்கொண்டிருந்தது.

கல்யாணம் முடிந்து ஒன்றை வருடத்தில் செய்யவேண்டிய சரியான வேலைகளை எல்லாம் அருமையாக செய்து முடித்ததன் பெருமையாக அவருக்கு ஒரு அழகான ஆண்மகன் பிறந்தான். அவனுக்கு குகன் எனப்பெயர் வைத்தார். எவ்வளவு குடித்தாலும் வீட்டில் உள்ள யாரையும் வதைக்க மாட்டார். குடித்துவிட்டால் தன் வேட்டியை வைத்தே தெரு மூலையில், மண்டபத்தில், காடு கரையிலே வாடை காற்றை அனுபவித்து உறங்குவதே அவருடைய சுகமான வாழ்க்கை.

தனது மனைவியையும் மகனையும் நல்லமுறையில் பாதுகாத்தே வந்தார். ஆனாலும் அவர்களை எமன் பின்தொடர்ந்து தான் வந்தது என்று சொல்லலாம். உயிரைக்குடிக்கும் எமனாக இருந்தால் கூட பரவாயில்லை என்றளவு. அவனின் வாழ்க்கை துன்பம் எனும் கடலில் துயில் கொண்டது. ஆம் அவனின் இரவு பகலில் அவன் செய்ய மறந்த செலுத்த மறந்த அன்பை பிறர் செலுத்தினால். வாழ்க்கை வழி மாறத்தானே செய்யும். அப்படியே இவன் வாழ்வும் வழி மாறியது என்று அவன் உணரும் போது அவனும் சிறைப்பட்டான்.

எங்கே எங்கே என ஏங்கும் அன்புநெஞ்சங்கள் ஏங்கட்டும் சோலையனின் வாழ்க்கையை மேலும் படிக்க.
சோலையனும் அவன் ராஜாத்தியும் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்கள், வாழ்ந்தவர்கள், வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எந்தவொரு ஏழைக் குடும்பத்திலும் கணவனும் மனைவியும் வேலை உழைப்பு என்ற பயணத்தில் இருப்பர். சோலையன் வேலைக்கு சென்ற நேரத்தில் ராஜாத்தியும் காடு கரைக்கு தோட்டத்திற்கு வேலைக்கு செல்வாள். இவர்களின் கல்யாணம் முடிந்த இரண்டு வருடத்தில் சோலையனின் பெற்றோரும் இறந்துவிட மாமியார் கொடுமை ஏதும் இல்லாமலே அவர்களின் வாழ்க்கை நன்றாக சென்றது.

சோலையன் இரவு பகலாக வேலை செய்யும் சிலசமயங்களில் மட்டும் ஒரு இரண்டு மணிநேரம் எடுத்துக்கொள்வான் உடல் அலுப்பை போக்கிக்கொள்ள. ஏனென்றால் இப்போதான் கல் அறுக்க பாலிஷ் பண்ண எல்லாமே இயந்திரம். முன்பெல்லாம் இயந்திரம் ஏதும் இல்லை. தன் கையே தனக்கு ஆயுதம் என்பது போல தான் அப்போ எல்லாம்.

அப்படியே ஒரு நாள் அலுப்பை போக்கிக்கொள்ள அதிகமாக ஒரு மணிநேரம் எடுத்துக்கொண்டான். அன்று அவன் எதிர்பாராத விதமாக வீட்டுக்கு வந்திருந்தான்.

ஏழு மணிக்கு வீட்டிற்க்கு வந்து சாப்பிட்டு விட்டு ஒன்பது மணிக்கு செல்லலாம் என நினைத்தான். வீட்டில் அவன் சாப்பிட்டு கொண்டிருந்த நேரத்தில் அவன் மகன் வெளியே விளையாடிக் கொண்டிருந்தான். அவள் மனைவி அவனுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள். இரவு ஒரு எட்டு மணி இருக்கும் வெளியே அவன் மகன் விளையாடிக் கொண்டிருந்தான் அல்லவா.

யாரோ இருவர் அவனைநோக்கி வேகமாக வருகின்றனர். அவன் மகனும் அவர்கள் வருவதைக்கண்டு அவன் விளையாட்டை தொடர்கிறான். அருகில் வந்தவர்கள் அவனை நோக்கி தம்பி இங்கே சோலையன் வீடு எது என்று அவனை கேட்டனர். அது எங்கப்பா தான் என்று சொல்ல அந்த மூன்று வயது சிறுவன். அவர் எங்கே இருக்காரு, உங்க வீடு எங்கே இருக்கிறது என்று அவர்கள் கேட்க. இந்த இதுதான் என்று அவர்கள் சொல்ல. எதுவும் கேளாமல் அவர்கள் உள்ளே நுழைந்தார்கள்.

அவர்கள் வீடு ஒருசிறு ஓட்டு வீடுதான். எங்க ஊரே அருகருகே அமைந்த வீடுகளைக் கொண்டது. அவர்கள் உள்ளே நுழைந்த உடனே அவர் மனைவி எழுந்து யாருங்க நீங்க உங்களுக்கு என்ன வேணும். தொறந்த வீட்டுக்குள்ளே நாயி நுழையிற மாதிரி வர்றீங்க எனச்சொல்ல. வந்தவர்களில் ஒருவன் அவளை கைய ஓங்கி அடிக்க முயன்று நிப்பாட்டினான். இந்த சத்தங்களை எல்லாம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தோர் ஒன்று கூடிவிட்டனர். ஆனால் சத்தம் மட்டுமே அவர்களின் காதுகளில் கேட்டது. எவரும் வீட்டுக்குள் செல்லவில்லை.ஏனென்றால் ராஜாத்தி கொஞ்சம் ஒரு மாதிரி.



காசுக்கு அடிபணியும் ஆமை, பணத்தை பார்த்தால் பிடுங்கிச்செல்லும் குரங்கு என்றே சொல்லலாம். அப்படியும் வெளியில் இருந்த கூட்டங்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு ஒருவர் செல்கிறார். அவர் பெயர் முருகன். அவர் தான் ஊர் பெரியவர். ஊர்ல முக்கியப்புள்ளி. உள்ளே சென்ற அவரே அதிர்ந்து நின்றார். ஏனென்றால் இதுவரை அவர்களின் ஊருக்குள்ளே எந்தவொரு போலீஸும் வந்தது இல்லை. ஏதுவாயினாலும் பஞ்சாயத்து தான். ஆனாலும் வந்திருந்த போலீசை அவருக்கு கொஞ்சம் தெரிந்து இருந்தது. அவர் உள்ளே சென்றது வணக்கம் தம்பி என்றார்.

வந்திருந்த போலீஷுகோ இவரை கொஞ்சம் நியாபகம் இருந்தது எங்கோ பார்த்தது போலே. இவர் வணக்கம் சொல்ல அவரும் பதிலுக்கு வணக்கம் சொன்னார். என்ன தம்பி இந்தப்பக்கம் என்ன பிரச்சனை ஏன் பொம்பள புள்ளைய கை நீட்டுகிறீர்கள் என்றார். அவர் உள்ளே நுழையும் போதே பார்த்துவிட்டார் அவன் கை ஓங்கியதை. இல்லை சார் விசாரிக்க வந்த இடத்துல இந்த அம்மா ஏதும் பேசவிடாம மரியாதையை இல்லாம பேசுறாங்க சார் என்றான்.

அவள் நடந்ததை என்னவென்று சொல்ல இருவருக்குள்ளும் சொல்லி சமாதானப்படுத்தினார் முருகன். சொல்லி முடித்து போலீசிடம் கேட்டார். தம்பி என்ன தம்பி எதுக்கு வந்து இருக்கீங்க சொல்லுங்க. இல்லை சார் இவரு வேலை பார்க்கும் குவாரி பக்கத்துல இருந்து எங்களுக்கு ஒரு செய்தி வந்தது யாரோ இறந்து கிடப்பதாக சொல்லி. நாங்க சென்று பார்த்தபோது அது ஒரு பொண்ணு என மட்டுமே தெரிஞ்சது.

அப்பறம் அதப்பத்தி விசாரிக்க அவளுடைய பெயர் அரசி என்றும் அவள் மீனா குவாரியில் வேலை செய்கிறார் என்றும் தெரியவந்தது. அதான் இவரிடமும் விசாரித்து விட்டு செல்லலாம் என்று வந்தோம் என்றார். இதைக்கேட்ட அவன் வெடவெடத்து நின்றான். என்னடா ஆச்சு நாம ஐந்தரை மணிக்கு கிளம்பும்போது உள்ளதானே கணக்கு எழுதிக்கொண்டு இருந்தாள். என்னடா ஆச்சு என தனக்குள்ளே நினைத்துக் கொண்டான். அவன் நினைத்துக் கொண்டிருந்த போது போலீசார் மேலும் கேட்டனர்.

நீங்க அங்க இருந்து எத்தனை மணிக்கு கெளம்புனீங்க என்றார். நான் ஒரு ஐந்தரை மணிக்கு கெளம்புனேன் சார் என்றான். நீங்க கடைசியா கிளம்பும் போது அந்தப்பொண்ணு இருந்ததா இல்லையா என்றார் அங்கே தான் சார் இருந்தது என்றான். அவர்கள் வேலை செய்யும் இடத்தில இருந்து அவள் இருக்கும் இடத்தைப் பார்க்க அவள் உக்காந்து இருப்பது போலயே தெரிந்தது அவனுக்கு. ஆனால் அவள் உட்கார்ந்து தான் இருந்தாள் என்பதல்ல உட்கார வைக்கப்பட்டாள்.

அடுத்த கேள்வியை போலீசார் கேட்டனர் உங்களுக்கு வெத்தலை பாக்கு போடும் பழக்கம் ஏதும் இருக்கா என்றான். அப்படி ஏதும் இல்லை சார் என்றான். சரி நாங்க வர்றோம் நாங்க கூப்பிடும் போதெல்லாம் உங்களின் உதவி எங்களுக்கு தேவை என்றான். கண்டிப்பாக வருகிறேன் சார் என்றான். இதெல்லாம் முடித்துவிட்டு போலீசார் கிளம்பும் தருவாயில் கூடி இருந்த மக்கள் என்ன என்னமோ பேசிக்கொண்டனர். அவளை இவன் தான் கொலை செய்து இருப்பான். இவனுக்கு காம உணர்வுகள் அதிகம் அதனால் சீறிப்பாய்ந்து இருப்பான் என்றெல்லாம் பேசினார். ஊரு வாயில ஓலக்கயை வச்சு இடிச்சாலும் நிக்கவே நிக்காது என்பது உலகம் அறிந்த ஒன்று.

ஆனால் இதெல்லாம் கேட்டு வருந்தாத அவன் மனம் அவளை நினைத்த போது வருந்தியது. ஏனென்றால் அவளுக்கு காது கேட்காது வாய் பேசத்தெரியாது. இருந்தும் அன்பும் பண்பும் மிக்கவள். அவளுக்கு நடந்த இந்தக்கொடுமைக்கு காரணம் அவளின் அழகு என்று தான் சொல்லவேண்டும்.

அங்கிருந்து கிளம்பிய போலீசார் தனக்குள் பேசிக்கொண்டனர் போகும் வழியில். அதில் ஒருவர் போஸ்ட் மாடம் ரிப்போர்ட் எப்போ வரும் என்றார். சார் இரண்டு நாட்கள் ஆகும்னு சொன்னார் மருத்துவர். அவர்கிட்ட சொல்லி கொஞ்சம் சீக்கிரம் முடிச்சு கொடுக்க சொல்லுங்க. இல்லைனா இன்ஸ் நம்மள திட்டுவார்யா. சரிங்க சார் என்றான் கான்ஸ்டபிள். அப்பறம் அந்தப்பொண்ணு கொலை செய்யப்பட்டு இருப்பாளா இல்லை கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருப்பாளா கான்ஸ்டபிள் என்றார் சப் இன்ஸ்.

பார்த்தா பொண்ணு ரொம்ப அழகா தான் சார் இருக்கு அதனால கற்பழித்து தான் கொலை செய்யப்பட்டு இருக்கும்.
நானும் அதே தான் நினைத்தேன். ஆனால் அவளுடைய உடையில் இருந்த சிவப்பு கலர் கறை ரத்தமா இல்ல பாக்கா என்று தெரியவில்லை. அத நாம கன்பார்ம் பண்ணனும்னு சொன்னான் சப் இன்ஸ். சார் அது பார்க்க பாக்கு வெற்றிலை மாதிரி தான் இருக்கு என்றான் கான்ஸ்டபிள். ஓகே இவனுக்கு குடி பழக்கம் தவற வேற எந்த பழக்கமும் இல்லை என்கிறான் சார். எனக்கு என்னமோ இவன் பண்ணி இருப்பான் தோணல சார்.

சரி அது நாம இப்போ முடிவு பண்ணக்கூடாது. சரிங்க சார். வேற எதாவது அந்த இடத்துல கிடைச்சதா என சப் இன்ஸ் கேட்க. இல்லை சார் என்றான் கான்ஸ்டபிள். சரி வாங்க மருத்துவமனைக்கு போவோம். அவர்கள் இருவரும் மடுத்துவமனை நோக்கி தங்களது பயணத்தை தொடர்ந்தனர். சென்று மருத்துவரை அணுகினர். மருத்துவரை பார்த்தவுடனே சப் இன்ஸ் சார் வணக்கம் என்றான். ஆன் சொல்லுங்க, சார் இது கொஞ்சம் சீரிஸ் ஆன கேஷ். பொண்ணு கொஞ்சம் தாழ்த்தப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர். உங்களுக்கே தெரியும் நாம டிலே பண்றது ரொம்ப ஆபத்து என்று சொல்ல.

அதுக்கு என்ன பண்ணமுடியும் இப்பவே கத்திய எடுத்து அறுத்துறவா. சார் அப்படி இல்ல பிரச்சனை பெரிசாகுறதுக்குள்ள முடிக்கணும் இல்லைனா. இல்லனா என்னப்பா? பொறுங்க நாங்க ஒன்னும் சும்மா இல்ல. பாருங்க எவ்ளோ பேர் இருக்காங்கனு என்றார் திமிராக.

அவர் சொன்ன அடுத்த நிமிடம் பளார் பளார் என்று ஒரு சத்தம் கேட்டு எல்லாரும் திரும்பினார். அந்த இடத்தில தன் தம்பிக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்த அக்கா தனது க்ளாஸ்யை கீழே போட்டாள் பதறிப் போய். சடாரென்று அங்கிருந்த நர்ஸ் பின்னாடி திரும்பி பார்த்தார். இவர்கள் எல்லாம் பார்க்க, டாக்டர் தனது இடது கையால் வலது இடது கன்னங்களை தடவிவிட்டு கொண்டிருந்தார் சுற்றும் முற்றும் பார்த்து.

விழுந்த அடி வேறு யாருக்கும் இல்லை மருத்துவருக்கு தான் விழுந்தது. அடித்தது வேறு யாருமில்லை நம்ம கான்ஸ்டபிள் தம்பி தான். சப் இன்ஸ் கண் அசைக்க கான்ஸ் பளார் என்று அறைந்தார் மருத்துவரை. என்ன சார் இப்போ கொடுக்கலாமா என்றார் சப் இன்ஸ். நாளைக்கு காலையில வாங்க சார் தர்றேன் என்றார். நாளைக்கு காலை ஒன்பது மணிக்கு வருவான் இவன் கொடுக்கணும்னு சொல்லி விடை பெற்றனர்.

வெளியே வந்ததும் சார் ஏன் இவ்ளோ அவசரப்படுறீங்க என்றான் கான்ஸ்டபிள். இங்க ஜாதி மதக்கலவரம் நடந்தா நாம்தான் பொறுப்பு. ஒரு சின்ன தீக்குச்சி காட்டை அழித்துவிடும்னு கேள்விப்பட்டது இல்லையா நீங்க. இங்க தாழ்த்தப்பட்டோருக்கு நிறைய அநீதி நடக்கு. அதேநேரம் அவங்களால அரசியலும் நடக்குது. கான்ஸ்டபிள் ஏதும் பேசவில்லை. இருவரும் காவல் நிலையத்தை நோக்கிச்சென்று நடந்த விஷயங்களை இன்ஸிடம் சொல்லினர். அவரும் சப் இன்ஸை பார்த்து நீங்க பார்த்துக்கோங்க என்றார். சரிங்க அய்யா எனச்சொல்லி இருவரும் விடைபெற்றனர், மறுநாள் காலை மருத்துவமனையில் சந்திப்பதாக பேசிச்சென்றனர்.

மறுநாள் காலையில் மருத்துவமனைக்கு சென்ற கான்ஸிடம் ரிப்போர்ட் எல்லாம் ஒப்படைக்கப்பட்டது. ரிப்போர்ட் பார்த்த கான்ஸ்டபிள் மற்றும் சப் இன்ஸ் அதிர்ந்து போயினர்.
ஆம் அவள் கற்பழிக்கப்பட்டால், அதுவும் போதை மருந்து கொடுத்து கற்பழிக்கப்பட்டு இருக்கிறாள் என்று அவர்களிடம் பரிசோதனை செய்த மருத்துவர் சொன்னார்.

இதை அறிந்த அவர்கள் அவள் உடையில் இருந்த கறையை பற்றி கேட்க அது பாக்கு கறையோ வெற்றிலையோ இல்லை. ரத்தம் தான் என்றார். அவர்கள் இருவரும்ஒருவரை ஒருவர் பார்த்து திகைத்து நின்றனர் சொல்வது கேட்பது ஏதும் அறியாமல். பின் கான்ஸ்டபிள் என்ன சொல்றிங்க உண்மையாவே அது ரத்தம் தானா என்று கேட்க. ஆமா சார் அது ரத்தம் தான் என்று மறுபடியும் சொல்ல. அந்த ரத்தம் என்ன குரூப்னு கண்டு புடிச்சீங்களா என்றான் இன்ஸ். அந்த ரிப்போர்ட்ல  தகவல் எல்லாமே இருக்கு.

அதை வாங்கிக்கொண்டு கிளம்பிய போலீசார் இரு நிமிடம் தனது மோட்டார் அருகிலே  திகைத்து போய் நின்றனர். நாம நினைத்தது சரி இது கற்பழிப்பு தான். ஆனால் ரத்தம் எப்படி வந்தது என்று யோசனை செய்யலானார் இன்ஸ்பெக்டர். யோசித்து கொண்டிருக்கும் போதே கான்ஸ்டபிள்சொன்னான். சார் அப்போ நாம எதையோ மிஸ் பண்ணிருக்கோம் சார். ஆமா நாம மிஸ் பண்ணிருக்கோம். இங்க அவள் கொலை செய்யப்பட்டது ஐந்து மணின்னு இருக்கு ஆனால் சோலையன் அவளை ஐந்தரை மணிக்கு பார்த்தேன் என்கிறான்.

எங்கயோ இடிக்குது என்றான் இன்ஸ்பெக்டர். ஆமா சார் ஒருவேளை அவன் பொய் சொல்லுவானோ. இருக்கலாம் என்றான் இன்ஸ். ஆனால் கான்ஸ்டபிள் பின்வருமாறு சொல்லலானான் சார் நான் நல்ல விசாரிச்சேன், அவன் அங்க இருந்து ஐந்தரை மணிக்கு தான் கெளம்புனான் என்று அக்கம் பக்கத்துல இருந்த எல்லாரும் சொன்னாங்க. சோ அவனே கொலை செஞ்சுட்டு போய் இருக்கலாமே என்றான்.

இல்லை கான்ஸ்டபிள் அவன் கொலை செய்து இருந்தால் அவன் நான்கு மணிக்கு கிளம்புனேன் என்று மணியை மாற்றி சொல்லி இருக்கலாம். ஆனால் அவன் சொல்லும் நேரமும் நீங்க விசாரித்தவர் சொல்லும் நேரமும் ஒத்துபோகுது. அதனால இதை வேறு யாரோ செஞ்சு இருக்கணும்.
அப்படியே இருக்கலாம் சார் என்று முடித்தான் கான்ஸ்டபிள். சார் இப்போ நாம என்ன சார் பண்ணனும்னு. வாங்க நாம ரெண்டு பெரும் அந்த பொண்ணு இறந்து கிடந்த இடத்துக்கு போய் வேற ஏதாவது கிடக்குதான்னு பார்ப்போம்.

இருவரும் அங்கே சென்று  கழுகு பார்வையிலே அலசினர். அங்கும் இங்கும் சுற்றி தேடவே ஒன்றும் கிடைக்கவே இல்லை. குழப்பத்துடன் தனது மோட்டரை எடுத்து கிளப்பலாம் என்று வண்டியை எடுக்கவே ஏதோஒன்று  உடைந்து தான் பூட்ஸ் காலில் குத்தி இருப்பதாய் உணர்ந்தான் இன்ஸ்பெக்டர். என்னவென்று எடுத்து பீன்கான என பார்த்து தூக்கி எறிந்தான் இன்ஸ்பெக்டர். தூக்கி எறியும் ஒரு நொடியில் சிவப்பு கலர் இருப்பதாய் உணர. .

மறுபடியும் விழுந்த இடம் நோக்கி சென்று அந்த பீங்கானை எடுக்க, அதன் மறுமுனையில் அவன் நினைத்தது போலே சிறு ரத்த கறை படிந்திருந்தது ஒருமுனையில். ஆக இங்கே நடந்து சென்றவர் ஆர் கொலை செய்தவர் காலில் இந்த பீங்கான் குத்தி இருக்கும் என்று எண்ணிக்கொண்டான். எதாவது மிருகங்களும் சென்று இருக்கலாம் அல்லவா! மனித மிருகங்களோ இல்லை நிஜ மிருகங்களோ.

இப்படி பலவிதமான திருப்பங்கள் உண்டு என்னுடைய வெண்பாவில். சோலையன் உயிர் இல்லாதவனாக நினைவு இல்லாதவனாக இருக்கும் நிலையின் காரணம் உணர அறிய தொடர்ந்து வாசியுங்கள். நம்ம தளபதி விஜய் சொல்வது போலே சஸ்பென்ஸ் ஓடையே சாகுங்கள் என்று சொல்லமாட்டேன். சஸ்பென்ஸ் உடனே இருங்கள். அடுத்த வாரம் சந்திக்கிறேன்.

பூவிதழாக,
தமிழினியன்

கருத்துகள்

Popular Posts

குருதி குடிக்கும் ஓநாய்கள்

குருதி குடிக்கும் ஓநாய்கள் 1. அறிமுக நன்றி  அனைவருக்கும் வணக்கம். முதலில் எனது உடன் பிறவா மற்றும் நான் முகம் பாரா சகோதரர் கார்த்திக்கேயன் அவர்களுக்கும், அவர்களின் நண்பராக  இருக்கும் அனைவருக்கும் நன்றி. ஏனென்றால் எனது மனதில் தோன்றிய சிறு புள்ளியை வைத்து நான் கோலமோ கோடோ போட  நினைத்தபோது அது வெகுஜன மக்கள்  தெரிந்து கொள்ளவேண்டும் என்ற நினைப்புடனும், திறமை உள்ள ஒருவன் அதை வெளிப்படுத்த நினைக்கும்போது அதற்கு நம்மால் முடிந்ததை செய்யவேண்டும் என்ற மனம் அவரிடம் நிறையே உள்ளது. அதனால் அவருக்கு நன்றி கூறுகிறேன். நன்றி சகோ கார்த்திக். தமிழ் மக்கள் என்பவர் வேறு, இலங்கை தமிழ் மக்கள் வேறு என நினைப்போருக்கு ஒரு வேண்டுகோள், நாம் இங்கு நம் குடும்பம் இருக்கே என்ற நிம்மதியுடனும். களிப்புடனும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஆனால் இலங்கையில் இருந்து திரும்பிய பல தமிழ் சொந்தங்கள் தங்களுக்கென ஒரு ரத்த பந்தம், சொந்தம் இல்லாத உறவை அணைத்து ஒன்றாக வாழ்கின்றனர். ஆனாலும் அவர்களின் வாழ்வும் இதயமும் மனவேதனையுடனும் வலியுடனும் உள்ளது. அவர்களுக்கு என்று நம்மால் என்ன செய்யமுடியும் என்பதை நானும்...