குருதி குடிக்கும் ஓநாய்கள்
1. அறிமுக நன்றி
அனைவருக்கும் வணக்கம். முதலில் எனது உடன் பிறவா மற்றும் நான் முகம் பாரா சகோதரர் கார்த்திக்கேயன் அவர்களுக்கும், அவர்களின் நண்பராக இருக்கும் அனைவருக்கும் நன்றி. ஏனென்றால் எனது மனதில் தோன்றிய சிறு புள்ளியை வைத்து நான் கோலமோ கோடோ போட நினைத்தபோது அது வெகுஜன மக்கள் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற நினைப்புடனும், திறமை உள்ள ஒருவன் அதை வெளிப்படுத்த நினைக்கும்போது அதற்கு நம்மால் முடிந்ததை செய்யவேண்டும் என்ற மனம் அவரிடம் நிறையே உள்ளது. அதனால் அவருக்கு நன்றி கூறுகிறேன். நன்றி சகோ கார்த்திக்.தமிழ் மக்கள் என்பவர் வேறு, இலங்கை தமிழ் மக்கள் வேறு என நினைப்போருக்கு ஒரு வேண்டுகோள், நாம் இங்கு நம் குடும்பம் இருக்கே என்ற நிம்மதியுடனும். களிப்புடனும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஆனால் இலங்கையில் இருந்து திரும்பிய பல தமிழ் சொந்தங்கள் தங்களுக்கென ஒரு ரத்த பந்தம், சொந்தம் இல்லாத உறவை அணைத்து ஒன்றாக வாழ்கின்றனர். ஆனாலும் அவர்களின் வாழ்வும் இதயமும் மனவேதனையுடனும் வலியுடனும் உள்ளது. அவர்களுக்கு என்று நம்மால் என்ன செய்யமுடியும் என்பதை நானும் அறியாதவனே. ஆனால் அவர்களுக்கும் தமிழ் மக்களாக இந்தியனாக வாழும் அளவுக்கு வழிவகை செய்யப்படவேண்டும் என வேண்டுகிறேன்.
என்னடா இவன் சொல்ல வந்த கதைக்கு எதிராக ஏதோ சொல்றானே என நீங்கள் நினைக்கலாம். என் மனதில் இதைப்பற்றி சொல்லவேண்டும் எழுத வேண்டும் என நினைத்த என் இதயம் உயர்ந்தது என்றே நான் எண்ணுகிறேன். எனது இதயத்தில் எழுந்த ஒரு புள்ளியின் கருத்தை கொண்டு நான் பயணிக்க ஆரம்பித்த போது என் உயிர் என்னுடன் இருந்தது, கருத்துக்களை நான் கேட்டுப்பார்த்து, தேடலில் நான் இறங்கியபோது போது அவை இறந்துவிட்டது.
வெறும் காசுக்காக பொன்மானைத் தேடும் வேடன் அல்ல நான். மனிதம்,மனிதன் என்ற உணர்வோடு, இறந்துபோன என் இதயத்தில் இருந்த கருத்தை சொல்லத் தொடங்குகிறேன்.
2. டக் டக் டக்
இரவு நேரம் அது போர் ஒலிகள் ஏதும் இல்லாத காலம், ஆனாலும் மனிதர்கள் அங்கு பல விதமான இன்னல்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகினர். இரவு நேரங்களில் அவர்களின் கதவுகள் தட்டப்படும். பகல் நேரங்களில் திடிரென்று நால்வர் வந்து மது பாட்டில்களுடன் வந்து கும்மாளம் போடுவார். சரக்கிற்கு சைடிஸ் இருக்க என தட்டுமுட்டு சாமான்களை எல்லாம் தூக்கி தூக்கி வீசுவர். அங்கு இருப்பதே உடைந்து போன தட்டுமுட்டு சாமான்கள் தான் என்பதை அறிந்தும் சில நாய்கள் வருகிறதென்றால் என்னசெய்வார்கள் நம் மக்கள். போர் முடிந்து விடுதலைப் புளிகள் தோற்றுப்போனார்கள் என்பதை அறிந்தும் சிலர் அங்கே குடியிருந்தனர் என்றால் அவர்களின் மனதில் காயங்களைவிட பிரிவு, தனிமைபடுத்தப்பட்டு விட்டோமே என்ற மனக்குமுறல் தான் இதயத்தை கிழத்துக் கொண்டு இருந்தன.ஒரு தாய் தன் பெண் உறுப்பிலிருந்து சிசு வெளிவரும் போது என்ன விதமான உணர்வுகளையும், வலிகளையும் வேதனைகளையும் அனுபவிப்பாளோ அதைவிட பலநூறு மடங்கு வேதனையை நம் மக்கள் அனுபவித்தார்கள். இந்த அனுபவங்களை எல்லாம் கொண்டு காசு, பணம் சம்பாதிக்க முடியுமா? இன்பமான வாழ்க்கை அனுபவங்கள் தான் வழி காட்டும் வாழ்க்கைக்கு. 2008 அதன்பின் 2009 ஆண்டு இன அழிப்பின் உச்சம் எனலாம்.
2009ம் ஆண்டு போர் முடிந்து இலங்கையில் அமைதி நிலவுகிறது என நாம் படித்த நிகழ்வகள் யாவும் பொய்யானவையே. 2009யை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பலர் தன் சொந்த நாட்டைவிட்டு நகராமல் உயிர் இல்லாத உடம்புடன் வாழ்ந்தனர் என்றால் அதற்கு ஒரே காரணம், இன்றோ, நாளையோ, நாளை மறுநாளோ நம் பிறப்புகள் உறவுகள் நம்மை தேடிவராதோ என்ற நப்பாசையில் வாழ்ந்தனர்.
அப்படி ஒரு நப்பாசையில் வாழ்ந்தவள் தான் யமுனா. அவள் தனது கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன், மாமியாருடன் ஒரு அன்பான அழகான வாழ்க்கையே வாழ்ந்து வந்தாள். அவளும் அவள் கணவனும் நன்கு படித்தவர்கள் மற்றும் புத்திசாலிகள். எத்தனையோ முறை புலிகளின் அழைப்பை மறுத்து ஆனந்தமான வாழ்க்கையே வாழ்ந்து வந்தனர். இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்.
3. ஆசிரியர் யேசு
பல வருடங்களாக தமிழ் மக்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டது. பலவிதமான நிபந்தனைகள் இருந்தன. யேசு படித்து முடித்து தமக்கு ஒரு அரசாங்க பணி கிட்டவேண்டி மிகவும் துணிந்து போராடினார். ஆனால் அப்படி ஒருநாள் போராடிக் கொண்டிருக்கையில் முதலமைச்சர் ஒருவர் அந்த வழியேச் செல்ல காவல் துறையினரும், இராணுவத்தினர் அவரை பிடித்து இழுத்துப்போட அவர் கீழே விழுந்தார். வண்டி போகும் வழியே சத்தத்தை உணர்ந்த முதலமைச்சர் என்னவென்று அதிகாரிகளை கேட்க அவர்கள் பதில் கூறினார்கள் நடந்ததை.
முதலமைச்சரும் யேசுவை அழைத்து பேசலானார். அமைச்சரைப் பார்த்து கோபத்துடனும் மனக்குமுறலுடன் சென்ற யேசுவை அமைச்சர் கண் சிமிட்டால் பார்த்துக் கொண்டே இருந்தார். வேகமாகவே யேசுவும் நடந்து சென்றான், இவன் வருவதைக் கண்டதும் அவர் எழுந்து நடந்து கொண்டிருந்தார். இவன் அருகில் சென்றதும் சடாரென்று யாரோ யாரையோ அடித்த சத்தம் ஒலிக்க. வெளியே நின்று கொண்டிருந்த காவலாளிகள் துப்பாக்கி முனையுடன் உள்ளே ஓடிவந்து யேசுவைச் சுற்றி நின்றனர். அவன் சுற்றும் முற்றும் பார்த்து விழிபிதுங்கி கிடந்தான்.
அடித்தது வேறு யாருமில்லை, முதலமைச்சர் நடந்து கொண்டிருந்தார் அல்லவா. யேசு நடந்து வருவதையும் அவன் முகத்தில் எறிந்த நெருப்பைக் கண்ட அவர், அவன் அருகில் வந்ததும் சடாரென்று அவன் எதிர்பாராத நேரத்தில் அறைந்தார். அவன் அருகில் இருந்த மேசையில் தலைபட்டு கீழே வீழ்ந்தான். இவையனைத்தும் ஒரு நொடிப்பொழுதில் நடந்து முடிந்தது. இவையேதும் அறியாமல் உள்ளே வந்த காவலாளிகள் வீழ்ந்தவன் தலைமேல் துப்பாக்கியை வைத்தனர்.
யேசு எழுந்து நிற்கவே, காவலாளிகளை வெளியேறினர் முதலமைச்சரின் கண்ணசைவின் பேரில். அவர்கள் வெளியேரவே, முதலமைச்சர் யேசுவிடம் பேசலானார். என்ன வேண்டும் தாங்களுக்கு, எதற்காக அங்கே நீ சத்தம் செய்து கொண்டு இருந்தாய் என்றான். யேசு தன்னைப்பற்றி முழு விவரமும் கூறினான். அதைக்கேட்டு முதலமைச்சர் இங்கே ஏன் வந்தாய் என்றார். இந்த நாட்டில் வாழும் எனக்கு உரிமைகள் வேண்டும், ஏன் எங்களுக்கு மறுக்கப்படுகிறது உரிமைகள் என்றான். தமிழ் மக்களுக்கு எந்தவித உரிமைகளும் இல்லை எங்கள் நாட்டில். நீங்கள் இங்கே அடிமைகளாக வந்தவர்கள் உங்களுக்கு நாங்கள் ஏன் எதிலும் முன்னுரிமை தரவேண்டும். இருந்தால் இருங்கள் இல்லை என்றால் நாய் மாதிரி ஓடிப்போ, அதுவும் இல்லையென்றால் செத்துப்போ என்றார்.
இதைக்கேட்டு யேசு ஆவேசமாக எழுந்து அவரை அடிக்கப் போகவே, அவர் இவனை தனது அருகிலிருந்த குடையை வைத்து தலையிலே ஓர் அடிஅடிக்க அவன் கீழே விழுந்தான். மறுபடியும் உள்ளே ஓடிவந்த காவலாளிகளைப் பார்த்து சிங்கள மொழியில் இவனைத் தூக்கிக் கொண்டு எறியுங்கள் என்றார். அவர்களும் அவனைத் தூக்கி சென்றனர். சிறிது தூரத்தில் அவனைக் கொண்டு வந்து ஒர் குப்பைத் தொட்டியின் அருகில் எறிந்தனர்.
இரண்டு மூன்று மணிநேரம் எந்த உணர்வுகளும் இல்லாமல் மயங்கிய நிலையில் இருந்தான். அவன் தலையில் அடிபட்டு இரத்தம் கசிந்து கொண்டிருந்த காரணத்தால் குப்பைத் தொட்டியில் சுற்றிய ஈக்கள் அவனைச் சுற்ற ஆரம்பித்தன. அந்த வழியே இரைதேடி வந்த மாடு ஒன்று அவனை தன் வாயால் தடவிப் பார்த்துவிட்டுப் போனது. இவை எல்லாம் நடந்து முடிந்து 30நிமிடங்கள் கழித்து அவன் சுயநினைவு அடைந்தான். கண்விழித்துப் பார்க்க தான் உயிர் உணர்ந்து, தலையில் வலியை உணர்ந்தான்.
4. பேருந்தில் ராதா
எழுந்து நடக்கமுடியாமல் நடக்க, அருகில் பேருந்து நிலையம் இருப்பதைக் கண்டான். தன் கையில் பணத்தை வைத்து ஊர் திரும்ப எண்ணி காத்திருந்தான். பேருந்தும் வந்தது. அதில் ஏறிப் பயணச்சீட்டு பெற்று அமர்ந்தான். பலவிதமான சிந்தனைகள் அவனுள் எழுந்தன. நாம் தற்கொலை செய்து கொல்லலாம் எனகூட தோன்றியது. எனினும் தனது குழந்தை குடும்பத்தை எண்ணி வாழவேண்டும் என்ற உணர்வும் அவனுள்ளே வந்துபோனது. தான் தற்கொலை செய்து கொண்டால் தன் குடும்பமும் கஷ்டப்படும் தன்னால் தன்இன மக்களுக்கும் எந்தவொரு நன்மையும் செய்யப்படாமல் இருக்கும் என உணர்ந்து, மனதை மாற்றிக் கொண்டான்.அவன் இப்படி யோசித்துக் கொண்டிருக்கவே அடுத்த பேருந்து நிறுத்தம் வந்தது. அதில் நிறைய பேர் பேருந்தினுள் ஏறினார்கள் ஆண், பெண், குழந்தைகள் என்று. ஏறிய அனைவருக்கும் இருக்கை கிடைக்கவே பெண் ஒருத்தி மட்டும் இருக்கை இருந்தும் அமராமல் நின்று கொண்டு இருந்தாள். அவள் பெயர் ராதா. ஆண்களின் அருகில் பெண்கள் அவ்வளவு சீக்கிறம் அமர்ந்து விடுவார்களா என்ன. தயக்கத்துடன் அவள் அவனருகில் நிற்கவே அவன் தயக்கம் ஏதும் வேண்டுடாம் தாங்கள் இங்கே அமரலாம், எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. நான் திருமணமானவனும் கூட என்றான். இல்லை பரவாயில்லை நீங்கள் அமருங்கள் என்றாள். நீங்கள் அமரவில்லை என்றால் நானும் எழுந்து விடுவேன் என எழநினைத்தான் யேசு. அவள் வேறுவழியின்றி அமர்ந்தாள். இருவரும் ஒரு 10 நிமிடம் அமைதியாகவே பயணித்தனர். அவள் மனதில் கரைப்பான் பூச்சியைப் போல் மனம் அரித்துக் கொண்டிருந்தது. இவ்வளவு நளினமாக பேசும் ஒருவர் உடை அழுக்காகவும் தலையில் அடிபட்டு இரத்தம் சிறிது கசிந்தவாறு இருப்பதை மறந்து, ஏதும் மருத்துவம் செய்யாமல் பயணிக்கிறாரே என நினைத்தாள்.
அதை அவரிடம் கேட்டும் விட்டாள், அவனும் நடந்ததைக் கூறவே அவள் நகைத்தாள். அவனுக்கு மனதிலும் கண்களிலும் அடக்கமுடியா கோபம் வந்து அவளை அடித்தும் விட்டான். அவளும் ஏதும் சொல்லாமல் நம் தமிழ் மக்கள் அனைவரும் சிறுபான்மை மக்களாகவும் அடிமையாகவுமே கருதப்படுகிறோம். நீங்கள் மிகப்பெரிய செயல் செய்து வாழ்க்கையின் அனுபவத்தைப் பெற்றுள்ளீர். இனி நீங்கள் உங்களுக்காக உங்களை அர்ப்பணிக்காவிடிலும் நம் வருங்கால சந்ததியினருக்கு எதாவது செய்ய முயலுங்கள் என்று தனது இருப்பிடம் வந்ததும் இறங்கிச் சென்றுவிடவே.
அவனும் நிமிடம் யோசிக்காமல் இறங்கி அவளைப் பின்தொடர்ந்தான். நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லை என்றான். அவள் அவளைப்பற்றிச் சொல்லினாள். தான் ஒரு பெண்புலி எனவும். நம் மக்களின் நலனுக்காக வீழ்வதாகவும் கூற, ஒரு பெண் ஒரு இனத்தின் மீதும், சமுகத்தின் மீதும், தன் உரிமைகள் மீதும் கொண்ட பேரன்பு நம்மிடம் இல்லையே என வெட்கித் தலை குணிந்தான். தனக்கு என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை, தன் மக்களும் தன் குடும்பமாவது உரிமைகள் கொண்டு வாழவேண்டும் என எண்ணினான். புலிகள் இயக்கத்தில் தனக்காக அல்ல, தனது மக்களுக்காக எதிர்க்கும் சமுதாயத்தில் இணைந்தான்.
பயம் மறந்து, தன்னம்பிக்கை வளர்ந்து எவறையும் நியாய தர்மத்திற்கு எதிர்க்கும் வீரனாக புதிய மனிதனாகப் பிறந்தான். இப்படியே இரண்டு மூன்று வருடங்கள் ஓட. ஒருநாள் தன் அன்புமகள் பூப்படைந்தாள் என மகிழ்ச்சிப் பெருக்கில் தன் கூட்டத்தாருடன் வந்து கொண்டிருந்தான். வரும் வழியில் எதிர்பாராத விதமாக வாகனம் சேற்றில் சிக்கி நகர முடியாமல் இருக்கவே. துரதிர்ஷ்டவசமாக இராணுவம் அந்த வழியே வந்துவிட இருவருக்கும் இடையே பெரும் களேபரம் ஆனாது. அதில் மகிழ்ச்சிப் பெருக்கில் வந்த அனைவரும் கொல்லப்பட்டனர். யேசு மட்டுமே சிறிது உயிர் இருக்க தப்பியோட என அவன் நினையவில்லை. தன் மகளைப் பார்த்து மகிழ்ச்சிப் பெருக்குடன் வீழவே விரும்பினான். ஆனாலும் கொடிய அரக்கன் எப்படி நல்லெண்ணம் உள்ள மனிதர்களை மகிழ்ச்சி கொள்ளவிடுவார். அவன் அங்கிருந்து தப்ப நினைத்து போகவே ஆர்மிக் காரன் சடசடவென்று சுட்டனர். அதுயேதும் பொருட்படுத்தாமல் வேகமாக ஓடினான். அவன் நல்லநேரம் மழை வரவே வழுக்கி கீழே விழுந்து மறைந்தான். மறைந்தவன் பெருமூச்சு விட்ட பத்தாவது நிமிடம் அவன் தலையில் குண்டுகள் பாயந்து இறந்தான்.
அவன் வாழ்க்கை மட்டுமே அன்று விழ்ந்தது அன்று, ஒட்டுமொத்த தமிழினமும் வீளும் என எவரும் எண்ணியதில்லை. அவனுடைய வீழ்ச்சிக்குப் பின் தனது பிள்ளைகளை அதிகமாக நிகழ்ச்சிகள் நடப்புகள் உணரவிடாமலே வளர்த்து வந்தாள் யேசுவின் மனைவி கவிதா. இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். ஆனாலும் அவள் மனதில் தன் கணவனின் இழப்பிற்கு எந்தவொரு பலனும் எட்டப்படவில்லையே என ஏங்கியே வாழ்ந்தாள். காலம் கழிந்தது, மங்கைப் பருவத்திலிருந்து அரிவைப் பருவத்தை அடைந்தாள். தன் மகனும் மகளும் வளர்ந்திருந்தனர்.
5. கதகதப்பு
தம் மக்களை நல்ல முறையில் வளர்த்து ஆளாக்கி இருந்தாள் கவிதா. கவிதா ஒரு ஏழைவீட்டில் பிறந்தவள் எவ்வளவு கஷ்டங்கள் துயரங்கள் இருந்தாலும் அதை கடந்து செல்லும் தன்னம்பிக்கை கொண்டவள். சிறுவயது முதலே அவள் வாழ்க்கையின் அத்தியாயங்களை அதிகமாகப் படித்து வந்தாள். தனது தந்தை ஒரு குடிகாரப் பேர்வழி எனத் தெரிந்து அவள் தனக்கென ஓர் சிறு சைக்கிள் கடைவைத்து அதில் வரும் வருமானத்தில் படித்தும் வந்தாள். அவளின் தன்னம்பிக்கை அவளின் அழகு, எதையும் தைரியமாக எதிர்த்து பேசும் குணம் யேசுவிற்கு பிடித்த ஒன்று. அதனாலே எப்போதும் அவன் அவள் பின்னாலே செல்வதும், அடிக்கடி சைக்கிள் வாடகைக்கு எடுப்பதும் தன் சைக்கிளுக்கு காத்து அடிப்பதுமாக இருந்தான். பின் இருவரின் மனதிலும் காதல் காற்று அடித்துக்கொண்டது.இருவரும் கல்லூரிப் பருவம் முடித்து திருமணம் செய்து கொண்டனர் தன் பெற்றோர்களின் இசைதலுடன். காலங்கள் செல்லவே அவர்களுக்கு முதலாவதாக ஒர் ஆண் குழந்தை பிறந்தது, பின்னாடியே ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. அவர்களுக்கு சுந்தர் சுகந்தி எனப் பெயரும் வைத்தனர். சுந்தர் சுகந்திக்கு இடையே இரு வயது வேறுபாடு. இருவரும் நாடு இன ஒருமைப்பாட்டுடன் அன்பும் பண்பும் மிகுந்தவர்களாக வளர்ந்தனர். யேசுவின் பிரிவில் அவர்களின் வாழ்க்கை நகர்ந்தாலும், அந்த வாழ்க்கை அழகுடனும் ஆரவாரத்துடன் தான் சென்றது. தன் மக்களும் இனம் பாராமல் மனிதம் பார்த்து நட்புடனே வளர்ந்தனர்.
6. கல்லூரி நாட்கள்
கல்லூரிப் பருவத்தில் சுந்தர் அறிவிலும் ஒழுக்கத்திலும் பண்பிலும் செறிவு மிகுந்தவனாகவே இருந்தான். அவனை கல்லூரியில் அனைவருக்கும் பிடிக்கும் சிங்கள மாணவர்களைத் தவிர. சுந்தரும் சுகந்தியும் ஒரே கல்லூரியில் படித்து வந்தனர். சுகந்தி செந்தாமரை மலரைப் போன்று அழகானவள். அவள் செல்லும் இடமெல்லாம் அவளை நிழலாகத் தொடர்ந்தவன் மகிந்தன்.அவளை எங்கு கண்டாலும் முரட்டுத்தனமாக ஓர் காதலை உணர்த்துவான். அவள் அது ஏதும் சட்டை செய்யாமல் நகர்ந்து சென்றுவிடுவாள். பலமுறை அவனிடம் எடுத்துரைத்தாள் தனக்கு காதலில் எந்தவொரு ஈடுபாடும் இல்லையென்று. அவன் அதுயேதும் பொருட்படுத்தாமல் அவளைப் பின்தொடர்ந்தான். ஒருநாள் கல்லூரியின் படிகளில் அவள் நடந்து சென்று கொண்டிருக்க பின்பக்கமாக வந்த மகிந்தன், ஹாய் என்றான் அவள் நடுங்கத்துடன் பின் திரும்ப அவன் அவளுக்கு பின்புறமாக மிக நெருக்கமாக நின்றான்.
இருவரின் இதழ்களும் இமைகளும் ஒன்றோடொன்று பார்த்துக் கொண்டிருக்க. அவர்கள் இருவருக்கும் இடையேயான இடைவெளி ஒருவிரலின் அளவே இருந்தது. இதைக்கண்ட அவள் நெஞ்சம் படபடத்தது, அவள் அவள் சுவாசித்த காற்றை அவள் விட்ட பெருமூச்சிலிருந்து சுவாசித்தான். அவன் அவளது விழிகளைப் பார்த்து சொல்லிய வார்த்தை,
"நீ என்னுடனே இருக்கிறாய், என் உயிர் பிரியும் வரை உறவாக என்னுடன் வலம் வருவாயா என்றான்"
அவள் அவனிடம் ஏதும் சொல்லாமல் நகர்ந்து சென்றுவிட்டாள். சுந்தரும் சுகந்தியும் கல்லூரிப் பருவத்தை முடித்தனர். சுந்தருக்கு கொழும்புவிலுள்ள ஓர் உயர்ந்த தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் வேலை கிடைக்கவே. அவன் வார இறுதி நாட்களில்
7. விடுமுறை நாட்கள்
தவறாமல் தனது பெற்றோரையும், தங்கையையும் பார்க்கத் தவறாமல் இருந்தான். அப்படி ஒருநாள் அவன் செல்லும் பேருந்தில் கண்ட முல்லை மலர்தான் யமுனா. கண்ட நொடியில் விழ்ந்தான் அவள் மேல். ஆமாங்க தண்ணீர் பாட்டில் வாங்க அவன், வாங்குவதற்காக வேகமாக இறங்கி வாங்கச் சென்றான். திரும்பிவந்து அவன் பேருந்தின் படிக்கட்டில் வேகமாக கால் வைக்கவே வழுக்கி கீழே விழுந்துவிட்டான் என நினைக்கவே அப்போது, வலதுபக்கமாக தும்பைப்பூவைப் போன்ற கைகளை உடைய பெண்ணொருத்து தாங்கிப் பிடிப்பது போன்ற ஓர் உணர்வு அவன் கனவில், ஆனால் அவை அனைத்தும் நிசமாகவே நடப்பது என்பதை மறந்தே விட்டான்.அவனுக்கே தெரியவில்லை எப்படி நாம் வீழ்ந்தோம் என்று. இருந்தும் அவன் மனம் நினைத்து வலதுபுறம் திரும்பி நோக்கவே அந்த தும்பைப் பூவை போன்ற பெண் தாங்கியதைக் கண்டான். பின் அவன் நேராக நின்று நன்றி சொல்ல ஏங்கவே அவனிடத்தில் அவள் சாரி என்றாள். என்னாட நாம நன்றி சொல்ல நினைத்தால் சாரி என்கிறாள் என பேந்த முழித்துக் கொண்டே மனதில் புன்னகையுடன் படியை நோக்கவே அங்கே ஒரு பார்சல் கீழே விழுந்து அசிங்கமாக கிடந்தது. அவன் பாரத்து என்னவென்று கேட்கும் முன்பே அவள் என் டின்னர் படியில் ஏறும்போது கீழே வீழ்ந்துவிட்டது என புன்னகை தவழும் மோகனத்தில் அவள் சொல்ல. டிரைவர் உள்ளே இருந்து தம்பி அந்தப் பொண்ணு போன் பேசிக்கிட்டே ஏறுச்சுப்பா அப்போ கையில் வச்சிருந்த பார்சல் கதவுல சிக்கி விழுந்துவிட்டது என்றார்.
அவள் அதை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தாள் டிரைவரை, உன்கிட்ட கேட்டோமா என்றபடி. இவையனைத்தும் பார்த்தும் கேட்டுக் கொண்டிருந்த அவன் மனதில் அவளும் அவள் மனதில் அவனும் குடி கொண்டார்கள் என்பதை உணராமலே இருவரும் இருந்தனர். இருவருக்குள்ளும் இதயத்தில் பட்டாசு சத்தம் போல் படக் படக் என வெடித்துக் கொண்டது. அந்த சத்தத்துடனே இருவரும் பேருந்தில் ஏறி அமர்ந்தனர். பேருந்துப் பயணப்படவே, இருவருள்ளும் இதயங்கள் இடமாறிக் கொண்டன. இருவரும் வலது இடது புறமாக அமர்ந்து இருந்தனர். அவள் வலதுபுறம் நோக்கினால் அவன் தெரியும்படியும், அவன் இடதுபுறம் நோக்கினால் அவள் தெரியும்படியும் இருந்தனர்.
இருவருக்குள்ளும் மனம் மேகத்தைப் போல் கலைந்தே இருந்தது. எங்கே திரும்பி நோக்கினால் ஹாய் சொல்லிவிடுவோமோ என்ற நினைப்பு இருந்தது. இருந்தும் மனதில் கண்இமைக்கும் நொடியில் இதயத்தை பறித்தவரிடம் பேசாமல் எப்படி என்று நினைக்கவே அவள் நோக்க அவன் நோக்க, எந்தவொரு இகோவும் இல்லாமல் இருவரும் ஒரே சலனத்தில் ஹாய் என்றனர். ஹாய் என ஆரம்பித்த நட்பு காதலாக மாறவேண்டும் என்ற உணர்வே இருவரின் இதயத்திலும் ஏற்பட்டது. காதல் என்பது கண்ட கண்ட நேரத்தில் காணும் எல்லோரிடமும் வருவதில்லை இதயத்தில். உயிர் பிரியும் நேரத்தில் மௌனமாக குடிகொள்ளும் அதுவே காதலின் சிறப்பு. ஆனால் காதலை உணர்ந்து அதன் முடிவு எடுப்பது மிகச்சிறந்தது. இவர்கள் மிகச்சிறந்தவர்கள் என்றே சொல்லவேண்டும். நீ சாப்பிடவில்லையே எனக்கேட்க அவள் பரவாயில்லை எனச் சொல்லி பேக்கில் இருந்த பிஸ்கட் சாப்பிட ஆரம்பிக்கவே. அவன் வா என்னுடைய உணவை பரிமாறிக் கொள்ளலாம் என்று கேட்க. எப்போதுடா கேட்பான் என ஏங்கிக் கொண்டிருந்தாள் போல் சரி எனத் தலையசைக்க இருவரும்இதயத்தை உணவாகப் பறிமாற்றிக் கொண்டனர். உணவு அறிந்தி முடித்தவுடன் அவள் அவனிடம் எனக்கு உங்களை ரொம்ப பிடித்திருக்கு, நாம் கலியாணம் செய்து கொண்டு வாழ்வோமா என்றாள். எல்லாரும் கேட்கலாம் எப்படிடா தாங்கிப் பிடிக்கும் போதெல்லாம் காதல் வருமென. உலகத்திலயே எல்லா விதமான நோயையும் கண்டு பிடித்து விடலாம். ஆனால் காதல் நோயை மனம் உணர்ந்த போதே மருந்து கொடுக்கப்பட வேண்டும். இல்லையென்றால் ஆயுள் முழுதும் மரணம் தான் அதன் மருந்து. இங்கு பலரும் மனதில் ஒருவருடனும், மனதால் பிறருடனும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
அவள் சொல்லவே அவன் நான் உன்னைப் பார்த்த நொடி முதலே உன்னுடனே வாழ்ந்து கொண்டிருக்கறேன் எனச்சொல்ல இருவரும் புன்னகைத்தனர். அந்தப் புன்னகை சுந்தரையும் யமுனாவையும் கல்யாணத்தில் கொண்டு போய் விட்டது. இருவருக்கும் இடையே ஒரு பெண் குழந்தை ஒர் ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைகள் வளர்ந்து பள்ளி செல்லும் பருவத்தை அடைந்தனர். சுகந்திக்கும் கல்யாணம் செய்து வைக்கப்பட்டது. அவள் வாழ்க்கையும் நன்றாகவே போய்கொண்டிருந்தது.
8. இருண்டவீடு
எப்போது எல்லாம் அவர்களுக்கு ஊருதோ அப்போதெல்லாம் சோதனை என்ற பெயரில் வீடுகளில் புகுந்து அட்டகாசம் செய்வர். எவரையேனும் கூட்டிக்கொண்டு போவர். போனவர் வருவாரோ வரமாட்டாரோ என்ற ஏக்கத்துடனே இறந்தவர் அதிகம். பெரும்பாலும் நம் மக்கள் அங்கே தன் மேனியில் அலங்காரம் செய்வதே கிடையாது. அழகுமேனியை நம் மக்கள் எவரேனும் இவள் இன்று அழகாக இருக்கிறாள் என உணரந்தால் அவளைத் தனியே கூப்பிட்டு அவளை அழகில்லாமல் ஆக்கிவிடுவர். காரணம் எல்லோருக்கும் புரியும் என நம்புகிறேன்.
கிழவி குமரி மழலை எனப் பாராமல் அழிக்கப்பட்டனர் அனுபவிக்கப்பட்டனர் சிங்களவர்களால். சாதரணமாக நம் மக்கள் கூட்டமாக எங்கும் நிற்கமுடியாது. இராணுவம் சோதனை இடுகிறது என்றால் மக்கள் தம் வீட்டில் இருக்கும் பெண்களை அழகற்றவளாக நிறுத்துவர். இப்படிப்பட்ட கொடூரமான வாழ்வைத் தான் நம் மக்கள் வாழ்ந்தனர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இப்படியே காலங்கள் ஒட ஒருநாள் சோதனையிட இராணுவத்தினர் சுகந்தியின் வீட்டிற்குள் நுழையவே அங்கு அவள் மகிழ்ச்சியாக தனது குழந்தையுடன் விளையாடிக கொண்டிருந்தாள். இராணுவம் சோதனையிடுவதை பார்த்தவுடன் வீட்டினுள் சென்றுவிட்டாள். வந்தவர்கள் சோதனையிட்டு திரும்பவே. எதிர்புறமாக ஓர் ஆண் தொலைவில் மிகக் கம்பீரமாக நடந்து வந்து கொண்டிருந்தான். எங்கோ பார்த்த முகமாக இருக்கவே அவள் அவனைப் பார்த்து புன்னகை செய்ய. அதையேதும் சட்டை செய்யாமல் அவன் வீட்டிற்குள் வந்தான். அவன் அருகில் வந்ததுமே தெரிந்தது அவன் யார் என்று. வேறு யாருமில்லை உங்கள் மனம் உணர்ந்தவன் தான். அவன் பெயர் மகிந்தன். அவளைப் பார்த்ததும் அவன் சொல்லிய வார்த்தை என்றோ ஒருநாள் ஏங்கினேன். ஏக்கம் இன்றுதான் என மறந்து போகவில்லை மறைத்து வைத்தேன் என்றான். அவள் ஏதும் அறியாது போலே நின்றாள். அடுத்து சில நிமிடங்களில் டமார் டுமீரென்ற சத்தம். குழந்தையும் அருகிலிருந்த தனது உற்றார் வீட்டிற்கு அழுதுகொண்டே ஓடிவிட்டது. அவள் கண்ணித் தன்மை அறுபது பேர் முன்னிலையில் கிழிக்கப்பட்டது. பத்து பதினைந்து பேர் அவளை உண்டனர். இரத்தம் கசிந்து அவள் ஏக்கத்துடனே இறந்தாள். அவள் இறக்கும் தருவாயில் அவன் சொல்லிய வார்த்தை,
"பல வருடங்களுக்கு முன்பே பசித்தது, பருக வேண்டிய கனி
இன்றுதான் என் கையில் கிடைத்தது என்றான்"
9. நரக வாழ்க்கை
அப்படிப்பட்ட தருணத்தை உணரந்தபோது அவள் தன் மகளுடன் கோவிலில் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தாள். உணர்ந்த உடனே அவளைத் தூக்கிக் கொண்டு ஓடினாள், ஓடும் போது பதினாறு திசைகளிலிருந்து இராணுவம் வருவது போல் உணர்ந்தாள். உணரவே தன் மகளை மட்டும் அவள் செல்லும் வழியில் இருந்த ஒரு பாலத்தின் அடியில் நிப்பாற்றி விட்டு பள்ளியை நோக்கி ஓடினாள். அவள் சென்று நோக்கவே பள்ளியில் இருந்து குழந்தைகள் அனைவரும் சென்றுவிட்டது போலே மனித நடமாட்டம் ஏதும் இல்லை. ஒருநொடி விடாமல் இராணுவம் தாக்கிக் கொண்டிருக்க. சுற்றி உலாவிய நேரத்தில் "டமார் டுமிர்" எனச் சத்தம் கேட்கவே மயங்கி விழுந்தாள். ஆனாலும் அவன் மனம் தன் குழந்தைகளைப் பற்றியை குமுறிக்கொண்டிருந்தது. பத்து நிமிடங்கள் கழித்து எழுந்துவிடும் உணர்வு பலத்தை அடைந்து எழுந்தாள். இராணுவத் தாக்குதல் நின்றபாடில்லை. குமுறலுடனே மறுபடியும் ஓடினாள் மகளைப் பார்க்க. வேகமாக ஓடியத் தருவாயில் இடரிக் கீழே விழுந்தாள். விழுந்தவள் எழுந்து நடக்க முனையவே இராணுவ ஆட்கள் சூழ்ந்தனர். அவளைச் சீண்டினர், அவள் ஒருவனின் கண்ணத்தில் படாரென்று அடித்தாள். அடித்த மறுகணமே அருகிலிருந்த ஒருவன் தனது துப்பாக்கியால் அவள் தலையில் வலது புறமாக காதோடு சேர்த்து ஒரு அடி அடித்தான். அது மட்டுமே அவள் மனமும் இதயமும் உண்ர்ந்த ஒன்று. அதன் பின்பு அவள் அருகிலிருந்த ஒருகிடங்கில் இருந்து உடலாக ஒரு உடுப்பு இல்லாமல் எழுந்தாள், உடலில் ஆங்காங்கே இரத்தக் காயம் நகங்கள் கீறப்பட்டு இருந்தது.
10. என்ன ஆனது
இந்த நகரமான தருணம் நடந்த தருவாயில் சுந்தர் கொழும்புவில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தான். அவன் தன்டுவன் நெருங்கும் போது உச்சபச்ச நிலையில் இருந்தது போர். அவன் தன்டுவன் நெருங்கிய பின்னர் பேருந்து அங்கயே கிடத்தப்பட்டது. அவன் செய்வதறியாமல் திகைத்தான். அவர்களை அழைக்கலாம் என போனை எடுத்த வேளையில் பின்புறமாக நின்ற இராணுவத்தினர் அவனை அழைத்துச் சென்றனர். அதன் பின் அவன் நிலை என்னவென்று எனக்கு கதை சொன்ன அன்பருக்கே தெரியவில்லை தேடிக்கொண்டு இருக்கின்றனர்.யமுனா தனது குழந்தையை பத்திரப்படுத்திய இடத்தில் அவள் சென்று பார்க்க அங்கே யாவரும் இல்லை. மனக் கலக்கத்துடன் சுருண்டு வீழ்ந்தாள். அவள் தனது மகளை விட்டு ஓடிய வேளையின் முன்பே பள்ளியில் நிலமை உணர்ந்து அனைவரும் சென்றுவிட்டனர். குமரன் மட்டும் வெகு நேரமாக நின்றுகொண்டு இருக்க அதைப் பார்த்த பள்ளி காவலர் அவனை அழைத்துச் சென்றுவிட்டார். அன்றிலிருந்து இன்றுவரை யமுனா அனைவரையும் தேடி என்று வருவார்கள் எனப் பலமுறை கற்பிழந்து காத்துக் கொண்டிருந்தாள் கொண்டிருக்கிறாள்.
11. அரக்க அதிகாரி
இப்படியே மூன்று ஆண்டுகளுக்கு மேலாக அவள் இராணுவத்தின் சித்ரவதைகளை தாங்கிக் கொண்டு அவர்களின் வருகையை எதிர்நோக்கி காத்திருந்தாள். இராணுவம் மற்றும் சிங்கள சித்ரவதை தாங்க முடியாமல் 2012ம் ஆண்டு வரை மக்கள் இந்தியாவில் தஞ்சம் அடைந்தனர். அதன் பின் இந்திய அரசு எவரையும் ஏற்றுக்கொள்ள வில்லை தஞ்சமாக. 2012ம் ஆண்டு இறுதியில் இந்திய அரிவிப்பைக் கேட்டு பலர் நம்பிக்கை இழந்து இந்தியா நோக்கிப் பயணப்பட ஆரம்பித்தனர். அவர்களில் பலர் யமுனாவை அழைத்தும் அவள் வருவதாக இல்லை என இருந்தவள் மனம் மாறி இந்தியாவில் தேடிப் பார்க்க விரும்பினாலோ என்னவோ. அவர்களுடன் இந்தியா வந்து சிறை தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறாள்.அனைவரும் இரவு இரண்டு மூன்று மணி அளவில் பயணத்தை தொடர்ந்தனர். எந்தவொரு தடங்கலும் இல்லாமல் இந்தியாவை அடைந்தனர். இப்படி திருட்டுத் தனமாக வருபவர்கள் கடலோர காவல்படையில் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன் பின்பே அவர்களுக்கு பெயரளவில் உரிமைகள் அளிக்கப்படும்.
கடலோர காவல் படையில் பணிபுரிந்த மூத்த அதிகாரி இவர்கள் தூரத்தில் நடந்து வருவதைப் பார்த்து அடிஅடி என்று அடித்து இருக்கிறார் அனைவரையும். அடித்துவிட்டு எப்படி வந்தீங்க, ஏன் வந்தீங்க என்றார். எங்களுக்கு அங்கே வாழ்க்கை என்ற ஒன்று இல்லை, இங்கே ஏதோ உடலாக வாழலாம் என வந்தோம் என்றார்கள். இந்திய அரசு ஆணை பிறப்பித்துவிட்டது. பதிவு செய்யக்கூடாது எனச்சொல்லி திரும்பப் போய் விடுங்கள் என்றார். எங்கள் உயிர் ஏற்கனவே போய்விட்டது உடலுக்கு கூட எங்கள் தமிழ்நாட்டில் இடமில்லையா என்றார் ஒருவர். யோய் போயா மண்டையை பொழந்துருவேன் என்றார். அவர்கள் கரைந்து கொண்டிருக்கவே. எல்லாரையும் பிரித்து பல முகாம்களுக்கு அனுப்பி வைத்துவிட்டு, யமுனாவை மட்டும் மண்டபம் முகாமில் தங்க அனுமதி கொடுத்தார். ஏனென்றால் அவருடைய முழு அதிகாரமும் இங்கே செல்லுபடியாகும். பலமுறை இரவு நேரங்களில் அவளைத் தொந்தரவு செய்துள்ளார் பல விதங்களில். அவள் அவளுடைய அசைவுகளுக்கு இசையாத காரணத்தினால் அவள் மீது பலவிதமான புகார் பதிவு செய்து அவளை காவலில் இட்டார். கதறவிட்டார்கள் கதறிக்கொண்டு இருந்தாள். இறந்தாள என்று மட்டும் தெரியவில்லை தெரிந்துகொள்ள ஆசையும் எனக்கு இல்லை. அவள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறாள் என்ற எண்ணத்துடனே நானும் இறக்க விரும்புகிறேன். ஒரு இனமே அழந்து கொண்டிருந்த வேளை நாம் இங்கு ஐபிஎல் பாரத்துக் கொண்டிருந்தோம் என்றே நினைக்கிறேன். வீழும் தமிழினமும் தமிழும் ஒருமை உணர்வு இல்லாவிட்டால்.
கலக்கத்தில்,
நாய்




கருத்துகள்
கருத்துரையிடுக