வெண்பா
4. இதயத்தில் தோன்றிய அனல்
கதையின் போக்கைப் புரிந்து கொள்ள இதன் முந்தைய மூன்று பகுதிகளையும் வாசிக்கும்படி அன்புடன் வேண்டுகிறேன்.
சிக்னல் கிடைக்கவே பையப்பனஹள்ளியை விட்டு ரயில் நகரத்தொடங்க என்மனம் மட்டும் அங்கேயே பல சிந்தனைகளில் சிறைப்பட்ட பூனையாக ஆழ்ந்தன. எனக்குள்ளே நானே கேள்விகளை கேட்டுக்கொண்டேன். நான் யார், எதற்காக இந்த அடிமை சமூகத்தில் எனக்காக வாழாமல், யாரோ ஒருவருக்கு உழைத்து கொடுக்கும் ஓநாயாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என் வாழ்க்கையில் நான் செய்யவேண்டியது என்ன? என் வாழ்க்கைக்கான பாதை எது? அதை எப்படி நான் அணுகி வழிநடத்திச் சொல்லப்போகிறேன். எங்கே எப்படி அதற்க்கான வழிகள் எனக்கு அமையும் எனப் பலவிதமான சிந்தனையில் என்னையே நான் தொலைத்தேனா? இல்லை எனக்குள்ளே என்னைத்தேடிப் பார்த்தேனா என்று தெரியவில்லை. ஆனால் என்னுடைய வாழ்க்கை இதுஅல்ல. எனக்குள் எதோ ஒன்று இருக்கிறது அதை நான் செய்யாமல் என்னையே நான் ஏமாற்றியுள்ளேன் என்பதை மட்டும் என் மனம் அறிந்து கொண்டது. அது இதுதான் என என்னால் முடிவு எடுக்க முடியவில்லை. இப்படியே என் சிந்தனையில் நான் இருக்கவே என் இதயத்தில் மென்மை ஏற்பட்டது. எப்போது எல்லாம் நான் சிந்தனை எனும் கடலில் மூல்கிறேனோ அப்போ எல்லாம் என் இதயத்தில் வந்து செல்லும் ஒரு அனல் காற்று அவள்.
யார் அவள்! யார் அவள்!
அவள் தான் என் மனதுக்குள் சிந்தனை எனும் சிற்பத்தை செதுக்கியவள்! அவள் தான் எனது
நிரந்தரமில்லாத வாழ்க்கையில் நான் தொலைத்த இன்பம் சுகம் துக்கம் தூரம், எல்லாமே அவள் தான் என்று சொல்வதே அவளுக்கு சிறப்பு. அவள் இல்லையென்றால் என் வாழ்க்கை என் குடும்பம் எல்லாமே காரிருளில் அடைபட்டு கரை தெரியாமல் கரைந்துபோன ஓடமாகவே இருந்திருக்கும்.
அவளே என் காதல்! அவளே என் காதலி! அவளே எனது உயிர்! என் மனைவியாக, என் குழந்தைக்கும் எனக்கும் தாயாக தோழியாக இருந்திருக்க வேண்டியவள். என்னைவிட்டு எங்கோ மறைந்து செல்லும் மேகமாக சென்றுவிட்டால் எனது உயிரை உடலில் இருந்து பறித்து. வாழ்க்கையில் நான் தொலைத்திட்ட மிகப்பெரிய தாரம் அவள், நான் செய்த பாவமும் அவள். என்னையே எனக்கு அடையாளம் காட்டியவள். என் வாழ்க்கையில் என்னைவிட்டுப் பிரிந்து சென்றாலும் என் உயிரின் அடையாளம் அவள், என் கண்ணீரின் இன்பமே அவள். அவள் என்னுடன் இல்லா வாழ்க்கையில் நான் பயணிக்கிறேன் என்றால் அதற்கு காரணமும் அவளே.
அவளால் தான் இந்த அடிமைத்தனமான வாழ்க்கையில் மனிதம் மறந்து, பணம் எனும் போதையை என் மனதுக்குள் புகுத்தி ஓடிக்கொண்டு இருக்கிறேன். பல வருடங்களாக சுயசிந்தனை இல்லாமல் சுயநலவாதியாக வாழ்ந்து வீழ்ந்து கொண்டிருக்கிறேன். இவையெல்லாம் எனக்காக நான் செய்தவை அல்ல. குடும்பம் என்ற போர்வைக்குள் என்னுடன் இருக்கும் என் தாய்க்காக தந்தைக்காக, எனது அருமை தங்கைக்காக எனது அருமை உடன் பிறந்தவனுக்காக என பல நேரங்களில் சிந்தனையை என்னுள் புதைத்து வைத்திருந்தேன். இவை எல்லாம்விட நான் நேசித்த ஆத்தி பூவே என்னை விட்டு எங்கோ சென்றது என்றால், நான் என் செய்யேன் என நினைத்து என் வாழ்க்கையை வழிமாற்றினேன்.
அது இன்று இந்த ரயில் மனிதர் குத்திய வார்த்தை எனும் அம்புகளால் எனை மீண்டும் சிந்தனை எனும் சிற்பத்தை என்னுள் வடித்தது. அவளையும் நினைக்க வைத்தது. ஏன் அவள் எனச்சிலர் யோசிக்கலாம். மூடனாக இருக்கும், இருந்த ஒருவனை ஞானியாக மாற்றினால் என்றால் அவள் எப்படிப்பட்டவள்? மனதால் இறந்த ஒருவனை மதியால் வென்று தன்வசப்படுத்தினால் என்றால் எப்பேர்பட்டவள் அந்த ஆத்தி பூ.
அனல் என அவளை நான் சொல்வது, அவள் என்னுள் இன்னும் நெருப்பாக எரிந்து கொண்டுதான் இருக்கிறாள் என் இதயத்தில். என் உயிரை எரித்து கொண்டும் இருந்தவள்.
அவளைப்பற்றிய சிந்தனைகளை என்னுள் எழுப்பிய இந்த மனிதன் ஏன் இப்படிப்பட்ட கேள்விக்கணைகளை எறிந்தார் எனவும் என் மனம் யோசித்து கொண்டிருந்தது. அவர் வீசிய கணை முடிந்துவிட்டதோ என நான் இந்தவிதமான சிந்தனைகளில் இருந்தபோது அவர் மறுபடியும் பேசலானார்.
என்னத்தம்பி ஏதும் பேசாம இருக்கீங்க. நான் ஏதும் தப்பா உங்க மனசு பாதிக்கிற மாதிரி ஏதும் பேசலயே என்றார், இல்லை சார் நீங்க ஏதும் பேசல என்றேன். ஆனால் மனதில் அவர் அடுத்து என்ன பேசுவார் எனச்சிந்தித்து கொண்டேயிருந்தேன். அவர் மேலும் சொல்லலானார் தம்பி இந்த உலகமே அடிமையா தான் தம்பி இருக்கு, நீங்க நான் எல்லாருமே. தண்ணீர் இல்லா கிணற்றில் தவிக்கும் தவளை மாதிரி தான் நம் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது.
நீங்க தனியார் கார்ப்ரேட் சமூகத்தில் அடிமையாக இருக்கீங்க நான் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கார்பரேட் சமூகத்தில் அடிமையாக இருக்கிறேன் என்றார்.
அதெப்படி சார் வேலை செய்யும் ஒன்றை அடிமை அப்படினு உங்களுக்கு எப்படி சார் சொல்ல முடியுது என்றேன்.
அதெப்படியா என்று நான் கேட்டவுடனே என்ன நினைத்தாரோ தெரியவில்லை, என்ன தம்பி நாட்டு நடப்பு தெரியாம முட்டாள் மாதிரி பேசுறீங்க என்றார். என் கண்களில் கண்ணீர் வரவில்லை என் இதயத்தில் வலி ஏற்பட்டு ரத்தம் வந்ததோ என்று தான் நினைத்தேன். அப்படி ஒரு வலி என்னுள்.பொதுவாக நான் எங்கு சென்றாலும் எவருடனும் பேசவே மாட்டேன், ஏனென்றால் எங்கே எனது பழைய நினைவுகள் என்னை குடிகொள்ளுமோ என்று தான். அவளை பிரிந்து வந்த நாட்களில் இருந்து நான் என்னை மறந்தேன், என்னுள் இருந்த அவளை மறந்தேன். உலகம் மறந்தேன் என் வாழ்க்கை வழி எல்லாமே என் குடும்பம் என்று தான் இருந்தேன்.
ஆனால் இன்று தன்னை ஒருவர் முட்டாள் எனச்சொல்லும் அளவிற்கு நான் இருக்கிறேன் என்பதை உணர்ந்ததால் என் உயிர் என்னுடன் இல்லை என்பதே உண்மை. இப்படி எல்லாம் ஒரு கணம் தோன்றி மனம் அணையும் முன் பேசலானார் அவர் தொடர்ந்து.
இங்க பாருங்க தம்பி கார்பரேட் கம்பெனி பத்து ரூபாய் எடுத்துக்கொண்டு உங்களுக்கு ஒரு ரூபாய் பிச்சை போடுறாங்க. திறமை இருக்கும் ஒருவனை பணம் என்ற ஒற்றை சொல்லுக்குள் அடைத்து வைத்திருக்கிறார்கள். உங்களது திறமை எல்லாம் நம் நாட்டு மக்களுக்கு எங்கே பயன்படுது தம்பி. எவனோ ஒருவன் சொகுசா வாழ நீங்க உழைக்கிறீங்க. ஆனால் அவன் இருக்கற மாதிரியே நாமும் வாழனும்னு நாம பண்ற செயல் நம்மல இஎம்ஐ கட்டத்தான் வைக்கிறது என்றார்.
உண்மை தான் சார் எனச்சொல்லி தலையசைத்தேன்.
என்ன நேயர்களே உண்மை தானே உங்களுக்குள் இருக்கும் திறமையை செய்து கொண்டு இருக்கீங்களா. இல்லை அடிமை சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கீங்களா. இருந்தால் விழித்து கொள்ளுங்கள், எதோ ஒருவழியில் உங்களுக்கு பிடித்ததை சந்தோசமாக செய்து கொண்டே இருங்கள். இல்லையென்றால் நம் வாழ்வும் சாவும் அர்த்தமே இல்லாமல் போகும்.
ஆனால் எல்லாருக்கும் எல்லாமே அமைந்து விடுவது இல்லை, அமையும் நேரத்தில் உங்கள் மனம் விரும்பும் ஒன்றை செய்து கொள்ளுங்கள். சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக அமையும் என்பதை எல்லாரும் ஏற்று கொள்ளலாம்.
உனக்கு தேவையான வாழ்க்கையை நீயே உருவாக்கு, இல்லையென்றால் உளி எடுத்து உன் இதயத்தில் செதுக்கு,வலிக்கும் போதெல்லாம் விழித்துக்கொள்.
மேலும் அவர் தொடர்ந்தார் முற்காலத்தில் நாம் அனைவரும் ஆங்கிலேயர் கீழ் அடிமைப்பட்டு கிடந்தோம், நம் கனிமங்கள் அழிக்கப்பட்டன, நாம் அடிமையானோம், இது தெரிந்து நடந்தது. ஆனால் அதே ஆங்கிலேயர்கள் இப்போது புதிய அவதாரமாக கார்பரேட் என்ற பெயரில் வீறுகொண்டு எழுந்திருக்கின்றன.
மனிதனின் அத்தியாவசியம் பணம் என்று அவர்கள் மனமே ஒத்துக்கொள்ளும் அளவுக்கு மாற்றியும் விட்டனர். இப்போ சொல்லு தம்பி நாம விடுதலை அடைந்து விட்டோமா? எனக்கேட்டார்.
எந்த ஒரு சிந்தனையும் கேள்விகளும் என் மனதில் இல்லாமல் சடாரென்று ஆமா சார் உண்மை தான் என்றேன்.
இல்லை என்று நேயர்களாலும் சொல்லமுடியாது என்றே நினைக்கின்றேன்.
கேள்விக்கணைகளை எறியும் மனிதர் யார் அவர் வாழ்க்கை என்ன? எந்த அரசாங்க வழியில் அவர் பயணிக்கிறார். ஏன் இந்த ஆழமான கருத்துக்களை எறிகிறார் என்று நேயர்கள் யோசித்துக்கொண்டே இருங்கள். நீங்கள் யோசிக்கும் யோசனை, உயரத்தைவிட ஆழமான மனிதர் அவர்.
எவ்வளவு ஆழம் என உங்கள் மனம் உணரும்போது உங்களின் மனம் உணர்ந்த ஒன்றை கமண்ட் ஆகாத் தெரியப்படுத்துங்கள் எமக்கு. அதுவரை தொடருங்கள் எனது வலைப்பக்கத்தை, சிந்தித்து கொண்டே இருங்கள்! சிந்தனையின் ஆழமே வாழ்க்கையின் அடையாளம். அடையாளம் மறந்து மறித்து போவதைவிட ஏமாற்றம் ஒன்றும் இல்லை. ஆழமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் எண்ணத்துடன் நகருங்கள். உங்கள் வாழ்வை அர்ப்பணியுங்கள் பிறரின் வாழ்வுக்கு, வாழ்க்கைக்கு அல்ல.
ஒவ்வொரு சனிக்கிழமை இரவு 8 மணிக்கு எனது படைப்பான வெண்பா'வின் தொடர்ச்சி எனது இணையத்தில் பதிவிடப்படும்.
கற்று கொண்டு இருக்கிறேன் பிழைகள் இருப்பின் என்னை திருத்திக்கொள்வேன். தாங்களும் தங்களது புன்சிரிப்பால் எனக்கு உதவி செய்யுமாறு வேண்டுகிறேன். மன்னியுங்கள் இந்தவாரம் கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டது.
அடுத்த வாரம் சனிக்கிழமை நாளில் உங்களைச் சந்திக்கிறேன் எனது எழுத்துக்கள் மூலமாக. அதற்கிடையே சிறுகதைகள், கவிதை, விமர்சனம் மூலமாக சந்திக்கிறேன். விடைகொடுங்கள்.

கருத்துகள்
கருத்துரையிடுக