நடத்துனர்
வெள்ளிக்கிழமை இரவு நேரம் நான்கு நண்பர்கள் தங்களுக்குள்ளே பேசிக்கொண்டு இருக்கின்றனர். வார இறுதி நாட்கள் என்றால் இளைஞர்கள் என்ன செய்து கொண்டு இருப்பார்கள் என சொல்லவா வேண்டும்.
மச்சான் இந்த லூசுப்பய கீதன் கிட்ட முன்னமே சொன்னேன் சீக்கிரமே வந்து சைடிஷ் வாங்கி வச்சிக்கோ, நான் சரக்கோட வரேன்னு. ஆனா லூசுப் பண்ணி இன்னும் ஆபிஸ்ல இருந்து வராம இருக்கான். இவன வச்சு என்னடா பண்ண எனச்சொல்லி முடித்தான் கணேஷ்.
மற்றொரு நண்பன் சரத், மச்சி அவன பத்தி தான் உனக்கு நல்லாவே தெரியுமே, அப்பறம் எப்படி அவன நம்பி இவ்ளோ பெரிய காரியத்தை ஒப்படைச்ச என்றான்.
சர்க்கடிக்க சைடிஷ் எவ்ளோ முக்கியம் தெரியுமா என கர்ஜித்துக் கொண்டே ஓர் குரல், சால்ட் இல்லா உப்பும் சரக்கில்லா இல்லா சைடிஷ்ம் நல்லாவே இருக்காது மாமே என்றான் அன்பு.
அன்பு எப்பயுமே இப்படித் தானுங்கோ, வெள்ளிக்கிழமை ஆனா தனியா பார்க்கு போய்ட்டு குடிக்காம ரூம்க்கு வரவே மாட்டான். வந்து ஒளரிக்கொண்டே இருப்பான்.
தெரியும் சரத், என்ன பண்ண நான் என் ஆளுகூட வந்தேன். சோ சைடிஷ் வாங்குனேனா அவ்ளோ தான் என்றான். நேயர்களுக்கு கீதன் பற்றி சொல்ல வேண்டும் அல்லவா. கீதன் நண்பன் படத்தில் வரும் சத்யராஜ் மாதிரி, எல்லாத்துலயும் டைமிங் மற்றும் கவனமாக இருக்க முயற்சி பண்ணும் காமுகன்.
உதாரணமாக ஒருநாள் கீதன் அவனோட நண்பர்கள் கூட ஷாப்பிங் போகலாம்னு ப்ளான் பண்ணி கிளம்ப. எல்லாரும் அவசர அவசரமாக கிளம்பி இருக்காங்க. கிருஷ்ணராஜபுரம் டூ மாரத்தஹள்ளி சுமார ஒரு 20நிமிடம் ஆகும், ட்ராபிக் இருந்தா 40நிமிடம் வர ஆகும் சுமாராக.
இவனுங்க ஷாப்பிங் போனதோ ஞாயிற்றுக்கிழமை. ட்ராபிக் இருக்கவே இருக்காது மோஸ்ட்லி. கிளம்பி போய்க்கொண்டே இருக்க, சரத் மற்றும் கீதன் ஒரு வண்டில போனாங்க. மகாதேவ்புரா நெருங்க சரத் கீதன் கிட்ட மச்சான் உச்சா வருது, நிப்பாட்டு மாமே எனச்சொல்ல அவனும் வண்டியை சைடுல நிப்பாட்ட, இவன் சரத் போய்ட்டு வந்து பார்க்க கீதன ஆளக்காணோம். வண்டி கீழே விழுந்து கிடக்கு.
நம்ம தல என்ன பன்னாருனு தெரியுமா, ரெண்டு பேரும் வண்டிய ஒதுக்கி நிப்பாட்டும் போது ஒரு பஸ் க்ராஸ் ஆனது.
நிறைய பேர் கீழிறங்க அந்த பக்கமாக பார்த்து கொண்டிருந்த கீதன் கண்ணில் ஒரு வியப்பு.
வியப்பிலே பார்த்து கொண்டிருந்தவன் வேகமாக ஓடிபோய்ட்டான் அங்க. ஸ்டாண்ட் போட்டு இருக்கா இல்லையானு கூடப் பார்க்கவில்லை. வந்து பார்க்க வண்டி கீழ விழுந்து ஃப்ரண்ட் சைடுல லெஃப்ட் இன்டிகேடர் ஒடைந்து தொங்க, ரெண்டு பேரும் மாறி மாறி திட்டித் தீட்டிக் கொண்டனர் வசவுச் சொற்களால்.
கீதன் ஓடுனது வேறு யாருக்காகவும் இல்லை, அவனோட ஒன்சைடு காதலி காலேஜ் டேய்ஷ்ல. இப்படித்தான் கீதன் எல்லாத்திலும் கவனமாக இருப்பான், ஆனா பொண்ணப் பார்த்த தர்மத்தின் தலைவன் ரஜினிய விட மறதி அதிகம் உள்ளவன்.
இரவு ஒரு பத்து மணி இருக்க, கணேஷ் மொபைல் ஒலிக்க! டே லூசுக் கூ..கொய்யால..அராத்து.. என திட்ட கீதன் அப்படியே கால் டிஷ்கனெக்ட் பண்ணிடான். அப்பறம் ஒரு 30நிமிடம் கழித்து கால்லிங் பெல் கேட்டு டோர் ஒபன் செய்ய கீதன் நின்றான்.
பின்பு கீதன் மற்றும் அனைவரும் ரெஃப்ரஷ் ஆகி ஸ்டார்ட் பண்ண 11 மணி ஆகிவிட்டது. சரக்கடிக்க ஆரம்பமானதுலே இருந்தே ஓரே கும்மாளமாக இருக்க அந்த இடம், நம்ம அன்பு அதிகமாக குடிக்க சுயநிலை இழந்து டாய்லெட்ல வாந்தி எடுக்கவே, வித்அவுட்ல அப்படியே குளிக்க போய்ட்டான் அன்பு. மத்த மூன்று பேரும் சரக்கடிச்சுட்டு டான்ஸ் ஆட, அப்பப்பா ஒரே கூத்தா இருந்தது.
சரக்கடித்தா எல்லா இளைஞர்களுக்கும் பிடித்தமான பாடல் என்றால் அது,
"காத்தடிக்குது காத்தடிக்குது காசிமேட்டு காத்தடிக்குது, ஊத்திகின்னு படுத்தக்கவா,
படுத்துகின்னே ஊத்திக்கவா"
பாடல் தான் ரொம்ப ஃபேமஸ். இப்படியே சந்தோஷம், கும்மாளமுமாக போக. சரத்வும் கணேஷ்ம் வித்அவுட் டான்ஷ் ஆடிட்டே கீழே விழுந்துட்டுடானுக. எங்கேயாவது அவுz2ட்டிங் போகலாம்னு சுதிர் ப்ளான் சொல்ல. அனைவரும் லால்பார்க் போகலாம்னு முடிவு பன்றஅப்பதாAqZ3 கொஞ்சம் ரிலாக்ஸ்அ இருக்கும், சைட்டும் அடிக்கலாம்னு சரத் சொல்ல. அப்படியே முடிவும் கன்ஃபார்ம் ஆகுது. மறுநாள் காலையில் எல்லாரும் எழுந்து பார்க்க, எல்லாரும் ரூமுக்கு உள்ள வித்அவுட்யில் படுத்து இருக்காங்க. மணியை பார்த்தால் 2pm. அதனால ப்ளான் சன்டேக்கு தள்ளி வைக்கப்படுகிறது.
மறுநாள் மாலை 3pm எல்லாரும் கிளம்ப, அன்பு மட்டும் மீதியுள்ள சரக்க அடிததுவிட்டு கிளம்ப லேட் ஆகிருச்சு. இங்கிருந்து 3.30pm கிளம்பி 4.30pm ஆச்சு லால்பார்க் ரீச்ஆக.
உள்ளே போய் இடம் கிடைத்து உட்கார ரொம்ப அலையனும், ஏனெனில் அங்க அங்க இரண்டு பேர் சேர்ந்து உட்கார்ந்து எதாவது பண்ணிட்டு இருப்பாங்க. நம்ம பசங்க எப்போதும் நல்ல அழகான பொண்ணு இருக்கற இடத்துக்கு அருகில் தான் உட்காருவாங்க.
முதலில் முக்கோண வடிவில் அமைந்த கட்டிடத்தின் உள்ளே அமர்ந்தார்கள். அதனைச் சற்றி புல் படர்ந்து இருப்பதால் காதலர்களும், புதிதாக மணமுடிந்த சிலரும் கொஞ்சல், சில்மிஷம், காதல் உரையாடல் நிகழ்த்திக் கொண்டிருக்க. நம்மவர்கள் அதைப்பார்த்து தங்களுக்குள்ளே கேலி கிண்டல் செய்து கொண்டிருந்தனர்.
அந்த முக்கோண வடிவ கூண்டிற்கு நேர்எதிரே மக்கள் நடந்து செல்லத்தக்க பாதை ஒன்று உள்ளது. அந்த பாதைக்கு இருபுறமும் புல் வளர்ந்து, உட்கார படுக்க பஞ்சு மெத்தை போல் இருக்கும். அதனிடையே ஆங்காங்கே சிறுசிறு பூ மரங்கள் வளர்ந்திருந்தன. அப்படி வளர்ந்திருந்த ஒரு சிறு பூமரத்தின் பின்பக்கச் இலைகள் நம்மவர் கண்களுக்கு குறுக்காக அமைந்திருக்க. சிறுநேரத்தில் பின்பக்க இலைகள் நடனமாட, அன்பு அனைவரையும் மெதுவாக அழைத்து கண்ணசைத்தான். அவர்கள் அங்கு நோக்கவே ஒன்னும் தெரியவில்லை. உடனே கீதன் படுப்பது போல் முக்கோண திண்டின் அருகில் இருந்து பார்க்க, ஒரு ஆணும் பெண்ணும் தன்கால்கள் பூமரத்தின் மீது விழும்படி படுத்து தங்களுக்குள்ளே இதழ் பரிமாறிக்கொண்டும். கைகள் ஏதோ சீர்வரிசை செய்து கொண்டு இருந்தன. இதையெல்லாம் பார்த்த கீதன் மற்றும் சரத் தாங்கள் இருந்த இடமிருந்து நகர்ந்து உலாவ ஆரம்பித்தான்.
அவர்கள் உலாவ ஆரம்பித்ததிலிருந்து பலவிதமான நிகழ்வுகள் அவன் கண்களில் பதிந்தன. ஆங்காங்கே சிலர் மழலையர் விளையாடிக் கொண்டிருந்தனர். சிலர் சுற்றம் மறந்து ஏதேதோ சில்வண்டு விளையாட்டு விளையாடினர். நம்மவர் போன்றே பலர் இந்த காட்சிகளை காணவந்த கயவர்கள் போல் சுற்றிவந்து கொண்டே இருந்தனர்.
இப்படியே சுற்றிப்பார்த்து 20நிமிடம் கழித்து கீதன் மற்றும் சரத் முக்கோணக் கூண்டின் அருகே வர அவர்கள் பின்னாடியே ஏதோ அவனை பின்தொடர்ந்து வருவது போலே இருவர் வந்தனர் முக்கோணக் கூண்டை நோக்கி.
கீதன் மற்றும் சரத் சுற்றிவந்த நேரத்தில் நடந்த ஒரு சிறு நிகழ்ச்சியை சொல்லவேண்டும். அவன் சுற்றிவந்து கொண்டிருந்த வேளையில் ஒரு சிறிய மரத்தின் அருகே உட்காருவதற்கு ஒரு சிறிய நாற்காலி மாதிரி அமைக்கப்பட்டிருந்தது. அதில் இருவரும் உட்கார்ந்து சுற்றி நடப்பதை கவனித்து கொண்டிருந்தனர். அப்போது கீதன் கண்களில் பட்ட ஒரு பெண் பார்ப்பதற்கு கொஞ்சம் அழகாகவும் அதிகமான மேக்கபுடன் உலாவருவதும் உட்காருவதுமாக இருந்தால். இதைக்கண்ட சரத் கீதனிடம் மச்சான் அந்தப்பெண்ணோட நடையும் உடையும் பார்க்கும் பார்வை சரியில்லை என்றான்.
மறுகணமே கீதன் அவளே நோக்கினான் அவளும் எழுந்து நடந்து பின் ஆண்களின் அருகிலேயே அமர்ந்தால். கீதன் வேகமாக எழுந்து அவளை நோக்கிச் சென்றான். அவளது முகத்தருகே சென்று புன்னகைத்தான் அவளும் புருவங்களை உயர்த்தி என்னவென்று கேட்பது போல் அசைக்க.
கீதன் சும்மாவா இருப்பான் கன்னட மொழியில் எஸ்டு என்றான்(எஸ்டு - எவ்ளோ). அவளும் பதில்கூற அவ்ளோ எல்லாம் உன் மூஞசுக்கு தரமுடியாது இவ்ளோ தான் தருவேன் எனக்கூற அவள் கன்னட மொழியில் திட்ட ஆரம்பிக்க. கீதன் முடிவா என்ன சொல்ற இவ்ளோ தர்ரேன் வரியா என்றான். அவள் போடா என்று தீட்டி நடந்து சென்றாள். இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சரத் சிரித்தே செத்துப்போனான்.
இதை எல்லாம் மற்ற நண்பர்களிடம் சொல்ல அவர்கள் ஊன் மூஞ்சிக்கு எந்தப் பொண்ணும் ஓகே மச்சான் எனக் கேலி செய்யளானர்.
கீதனும் சரத்தும் வந்து அமர எதிர் திசையில் அவர்கள் பின் வந்தவர்கள் அமர்ந்தனர்.
அதில் ஒருவர் 36 வயது மதிக்கத்தக்க மனிதர், இன்னொருவர் ஒரு 14 வயது இருக்கும் சிறுவன்.
பார்க்க இருவரும் தகப்பன் மகன் போல் இருந்தனர். தன் மகனுக்காக அவர் தண்ணீர் வாங்க சென்று விட்டார். கொஞ்சநேரம் அந்த பையன் நடக்க அவனுடைய இடத்தில் வேறொருவர் அமர்ந்துவிட, நம்மவர் அமர்ந்து கொண்டான் அந்தப் பையன்.
அவனே பேச ஆரம்பித்தான், அண்ணா இங்கே இருந்து ரயில்வே ஸ்டேஷன் எவ்ளோ தூரம் என்றான். 20நிமிடம் ஆகும் தம்பி என்றான் கீதன்.
என்ன பன்றீங்க அண்ணா நீங்க என்றான் சிறுவன். நான் வெப் டிசைனர் எனச்சொல்ல.. என்னா அண்ணா வலை பின்ன எதுக்கு இங்க வர்றீங்க என்றான். நம்ம பசங்க எல்லாரும் கீதன் பார்த்து சிரிக்க, தம்பி வலை பின்றது இல்ல, வலை உருவாக்குறது என்றான் மறுபபடியும். அண்ணா ரெண்டுமே ஒன்னு தானே, உங்கள எல்லாம் யாரு வேலைக்கு வச்சது. என்றான், அப்படியே பேசிக்கொண்டு இருக்க, நம்ம சரத் அருகில் போய் உட்கார, அண்ணா நீங்க ஃபேஷ்கட் பால் ப்ளேயர்ஆ எனக்கேட்க, அதெப்படி கேட்கற நீ என சரத் கேட்க, நீங்க ஒட்டகச்சிவிங்யி மாதிரி இருங்கிங்கலே, தம்பி இப்படி எல்லாம் ஓவரா கலாய்காதடா எனச்சொல்ல. என்ன பன்றீங்க நீங்க, நான் கஸ்டம்ஸ்ல வேல பார்க்கிறேன் தம்பி, அப்போ அயன் படத்துல வர சூரியா மாதரி மாஸ்ஆ இருப்பிங்க, அப்படியே லஞ்சம் வாங்குவிங்க என்றான். நான் இப்போ தான் ஜாய்ன் பண்ணி இருக்கேன். சோ இன்னும் ரொம்ப நாள் ஆகும் லஞ்சம் வாங்க, அப்போ வாங்குவிங்க. இப்படியே பேசிக் கொண்டிருக்க தண்ணீர் வாங்கப்போன அவங்க அப்பா வந்துவிட்டார். அவர் வந்தவுடனே தண்ணீர் வாங்கி குடித்துவிட்டு சிறுவன் சுற்றிப்பார்க்க போய்விட்டான்.
அவங்க அப்பா நம்மவர் அருகில் வர என்ன தம்பி ரொம்ப பேசுரானா என்றார், நல்லா பேசுரான். ஆனா வயது வித்தியாசம் பார்க்காம ஜால்லியா பேசுறான் என கீதன் சொல்ல. சரத் உங்க மகன்க்கு பேஷ்கட்பால் விளையாடத் தெரியுமோ என்றான். ஆமா தம்பி நல்லா படிப்பான், க்ளாஸ்ல 3 ரேங்க் உள்ள எடுப்பான். படிக்கறது நல்லா இருக்கனும்னு விளையாட போக விடமாட்டேன். நான்கூட பேஷ்கட்பால் ப்ளேயர் தான் தம்பி. நீங்க ஏன் கேட்கிறீங்க. நானும் பேஷ்பால் ப்ளேயர் தான் அண்ணா. ஸ்டேட் லெவல்ல விளையாண்டேன், அது மூலமாக கஸ்டம்ல வேலை பார்க்கேன். அவனுக்கு பிடிச்சத என்கரேஜ் பண்ணுங்க ஹெல்ப் பண்ணுங்க அவனுக்கு பிடித்த வழியில்.
எந்த ஜோனல்ல என அவர் கேட்க, திருச்சி மதுரை என சரத் சொல்ல. திருச்சினா உங்களுக்கு கார்த்தி தெரியுமா என்றார். சரத் தெரியும் அண்ணா அவங்க தானே கவுண்டி டீம் மேனேஜ்மெண்ட். விளையாடி இருக்கேன் 2 மேட்ச். அவங்க எல்லாம் என் ஃப்ரண்ட் தம்பி. நாங்க எல்லாம் 20 வருடம் முன்னாடி ஒரே டீம்ல விளையாடினோம். நான் அப்படியே விட்டுட்டேன். ஆனால் அவங்ககிட்ட காசு அதிகம அவங்க என்றார்.
எங்க போய்ட்டு வறீங்க என்றேன். இல்ல தம்பி என் மகன்க்கு லீவ்னா எங்கயாவது டூர் போகனும். இல்லன்னா விடவே மாட்டான். லாஸ்ட் வருடம் கேரளா போனோம். இப்போ பெங்களூர். ஓ சூப்பர் அண்ணா. இப்படியே இருங்க உங்க பையனுக்கு பிடிச்சத செய்யும் அளவு.
சிறுவன் வந்தான், தம்பி உங்க அப்பா கிட்ட பேசினேன், உனக்கு பேஸ்பால் புடிக்குமாமே. நல்லா விளையாடு படி. உனக்கு பிடித்தத செய். என்ன படிக்கப் போற என்றேன், அவன் பிடிஎஸ் இல்லனா மைக்ரோ பையாலஜி படிக்கனும் என்றான். குட் என்றான் சரத்.
நமக்கு பிடித்தது மட்டுமில்லைங்க மத்தவங்களுக்கு பிடித்த ஒன்றுக்கு உதவிவில்லை என்றாலும் வழி சொல்லலாம்.
பூவிதழாக,
தமிழினியன்

அருமையாக உள்ளது நண்பா..by Ramkumar J , kovilangulam..i hope u know me😊
பதிலளிநீக்கு