முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அன்றில் பறவை

அன்றில் பறவை 


ஏதேதோ ஆனதே
என்னுள்ளே மின்னல் மோதுதே,
காற்றைப் போல உன்னையே
கவர்ந்துவர எண்ணியே,
உன்னிடம் என்னையே எப்போது தொலைத்தேனோ,
தேடித் தேடியே தேவதை உன்னைக்கண்டு,
நாளும் உன்னையே ஏங்கும் எண்ணத்தை என்னுள் எப்படி
விதைத்தாயோ,
வாடி என நானும் சொல்ல
வார்த்தை என்னுள் வந்ததில்லை,
போடி என்று நானும் சொல்ல
பொழுதுபோக்க யாருமில்லை,
பொழுதுகள் சரியும் மாலை வேளையில்
மனம் ஏங்கும்போது மல்லிகை நீ இல்லையே,
விடிந்த காலைகளும் இருள் சூழ்ந்த நெருப்பாக
எனைச் சுடுதே நீ இல்லாமல்.

கருத்துகள்

Popular Posts

குருதி குடிக்கும் ஓநாய்கள்

குருதி குடிக்கும் ஓநாய்கள் 1. அறிமுக நன்றி  அனைவருக்கும் வணக்கம். முதலில் எனது உடன் பிறவா மற்றும் நான் முகம் பாரா சகோதரர் கார்த்திக்கேயன் அவர்களுக்கும், அவர்களின் நண்பராக  இருக்கும் அனைவருக்கும் நன்றி. ஏனென்றால் எனது மனதில் தோன்றிய சிறு புள்ளியை வைத்து நான் கோலமோ கோடோ போட  நினைத்தபோது அது வெகுஜன மக்கள்  தெரிந்து கொள்ளவேண்டும் என்ற நினைப்புடனும், திறமை உள்ள ஒருவன் அதை வெளிப்படுத்த நினைக்கும்போது அதற்கு நம்மால் முடிந்ததை செய்யவேண்டும் என்ற மனம் அவரிடம் நிறையே உள்ளது. அதனால் அவருக்கு நன்றி கூறுகிறேன். நன்றி சகோ கார்த்திக். தமிழ் மக்கள் என்பவர் வேறு, இலங்கை தமிழ் மக்கள் வேறு என நினைப்போருக்கு ஒரு வேண்டுகோள், நாம் இங்கு நம் குடும்பம் இருக்கே என்ற நிம்மதியுடனும். களிப்புடனும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஆனால் இலங்கையில் இருந்து திரும்பிய பல தமிழ் சொந்தங்கள் தங்களுக்கென ஒரு ரத்த பந்தம், சொந்தம் இல்லாத உறவை அணைத்து ஒன்றாக வாழ்கின்றனர். ஆனாலும் அவர்களின் வாழ்வும் இதயமும் மனவேதனையுடனும் வலியுடனும் உள்ளது. அவர்களுக்கு என்று நம்மால் என்ன செய்யமுடியும் என்பதை நானும்...