தமிழினியன்
ஒரு கூடைக்குள் ஒழிந்து கொள்ளும் கோழியாகவும்,
இருள் சூழ்ந்த குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டவும்,
யாரோ ஒருவருக்கு உழைத்துக் கொடுத்து ஊதியம் வாங்கி நாடகமாடவும்,
அவர் என்ன சொல்லுவார் இவர் என்ன சொல்லுவார் என உமிழ்நீர் உள்ளத்தில் பட்டாலும் சிரித்துக் கொண்டு விழிக்காமல் வாழவும்.
பிடித்ததை செய்ய வெறுத்தும்,
நீ நீயல்லாமல் எவனோ ஒருவனுக்கு விலை போகும் மது/மாதுவாக இருந்து என்ன பயன் என உணர்ந்ததால்,
நெடுங்காலம் வாழ்வில் எந்தவொரு முயற்சியையும் என் மனம் நினைத்த ஒரு புள்ளியில் என் பயணத்தை செலுத்தவில்லை.
அது நினைந்து மனம் வலித்து முதல் முயற்சியாய் ஒரு சிறு ப்ளாக் தொடங்கி எனது எழுத்துப் பயணத்தை தொடங்குகிறேன்.
பிடித்தால் பின்தொடரவும், பிடிக்கவில்லையா காரி துப்பு.
திருத்திக் கொள்வேன்.
Twitter : https://twitter.com/itamiliniyan
instagram : https://www.instagram.com/itamiliniyan/
பூவிதழாக,
தமிழினியன்

கருத்துகள்
கருத்துரையிடுக