வாண்டுகள்
சிறகு அடித்து பறக்கும் வாண்டுகள்,
சில்வண்டுகளாக வீதியில் ஓடிவர,
உள்ளம் வெதும்பி உடல் வலிந்தும்,
இன்பம் மறந்தும் இமை வாடியும்,
இதழ் வறண்டும் நா சுருண்டும்,
சிறுமைப்பட்ட உடலால் சிரம் தாழ்த்தி சில்வண்டு நீ ஏங்கையில்,
ஒரு கணம் வாடி நின்றேன்,
இதயத்தின் துடிப்பு நின்று விட்டதோ என்று.
கருத்துகள்
கருத்துரையிடுக